தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் சட்ட விதியை மீறி டெண்டர் கோரப்பட்டதாக அறப்போர் இயக்கம் பெரும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதுகுறித்து விரிவாக வீடியோவும் வெளியிட்டுள்ளது. அறப்போர் இயக்கம் முன்வைத்த முறைகேடு குற்றச்சாட்டை தொடர்ந்து தமிழ்நாடு அரசும் அதிகாரிகளை மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்தது.
மேலும் இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்து நேற்றிரவு நீண்ட விளக்கம் அளித்திருந்தது. தமிழ்நாடு அரசு அளித்த விளக்கத்திலும் முரண்பாடுகள் இருப்பதாக அறப்போர் இயக்கம் மீண்டும் குற்றஞ்சாட்டி உள்ளது. இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து விரிவாக காணலாம்.
மேலும் திறப்பு விழா குறித்த புகைப்படங்கள் அமைச்சர் சரத்குமார் மற்றும் தாம்பரம் மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் ஜூலை 29ஆம் தேதி அன்றே பதிவேற்றப்பட்டுள்ளன.
| டெண்டர் கோரப்பட்ட நாள் | ஆகஸ்ட் 6 |
| டெண்டர் திறக்கப்பட வேண்டிய நாள் | ஆகஸ்ட் 24 |
| சிலை திறக்கப்பட்ட நாள் | ஜூலை 29 |
| டெண்டர் கோரப்பட்ட நாள் | ஆகஸ்ட் 6 |
| டெண்டர் திறக்கப்பட வேண்டிய நாள் | ஆகஸ்ட் 24 |
| சிலை திறக்கப்பட்ட நாள் | ஆகஸ்ட் 10 |
முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு (Contractors) சட்டவிரோதமாக டெண்டர்களை வழங்குவதற்காக, சுமார் ரூ. 45 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான இரண்டு பணிகள் டெண்டர் வழங்கும் செயல்முறை முடிவடைவதற்கு முன்பாகவே பணிகள் முடிக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்திரன் ஐஏஎஸ், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆகியோர் இந்த பணிகளைத் திறந்துவைத்து திறப்பு விழா நடத்தியதாக அறப்போர் இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்த இரண்டு டெண்டர்களுக்கான நிதி ஏலங்கள் ஆகஸ்ட் 24ஆம் தேதி அன்று திறக்கப்பட வேண்டும். ஆனால், இணையதளத்தில் அவை இன்று வரை (அதாவது நேற்று வரை - செப். 15) To be opened என்ற நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளன என அறப்போர் இயக்கம் கூறியுள்ளது.
தாம்பரம் மாநகராட்சியில் (TCMC) டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என… pic.twitter.com/eaebPAKc5v
— Arappor Iyakkam (@Arappor) September 15, 2026
டெண்டர் கோரலில் பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள், டெண்டரை வென்றவர் (L1 Bidder) யார் என்ற விவரங்களை மக்களிடம் இருந்து மறைக்கவே அதிகாரிகள் இணையத்தில் to be opened என்ற நிலையிலேயே வைத்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டி இருக்கிறது.
தாம்பரம் மாநகராட்சியில் இரண்டு பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் புகார் எழுப்பியது. இதைத் தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலசந்தர் ஐஏஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அதேபோல், மண்டல உதவி பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தாம்பரம் மாநகராட்சியில் இரண்டு பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட நிகழ்வில் அறப்போர் இயக்கத்தினால் குறிப்பிடப்பட்ட குறைபாடுகள் மீது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களால் முதற்கட்ட விசாரணை செய்யப்பட்டு அதன் தொடர்ச்சியாக உரிய… pic.twitter.com/V1YgOBiGmd
— TN DIPR (@TNDIPRNEWS) September 15, 2026
இந்நிலையில், தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை பல கேள்விகளை எழுப்புவதாக அறப்போர் இயக்கம் அதன் இன்றைய (செப்டம்பர் 16) பதிவில் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, CSR நிதியில் இருந்து அந்த வேலை செய்யப்பட்டதாகவும் அதற்குப் பிறகு டெண்டர் போட்டது ஒரு செயல்முறை குறைபாடு என்ற முடிவுக்கு அரசு ஆரம்ப கட்டத்திலேயே வருவதற்கான தேவை என்ன என்றும் கேள்வி எழுப்பி உள்ளது.
அரசின் வாதத்தில் இருக்கும் முரண்பாடுகளாக அறப்போர் இயக்கம் குறிப்பிட்டுள்ளவை:
நேற்றைய தினம் அறப்போர் எழுப்பிய புகாருக்கு பிறகு தாம்பரம் மாநகராட்சி ஆணையர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டதை வரவேற்று இருந்தோம் மேலும் மண்டல உதவி பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதையும் வரவேற்கிறோம். ஆனால் அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை பல கேள்விகளை எழுப்பியுள்ளது.… https://t.co/D6eTShTba1 pic.twitter.com/9aTGo5f5nW
— Arappor Iyakkam (@Arappor) September 16, 2026
எனவே செயல்முறை குறைபாடு என்று அரசு இதை சுருக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது என்றும் இந்த விஷயத்தில் மக்கள் அனைவரும் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அறப்போர் இயக்கம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
மற்ற அரசுகளை போல தவெக அரசும், கொஞ்ச நாள் கழித்து காத்திருப்பு பட்டியலில் இருந்து அவருக்கு போஸ்டிங் கொடுத்து செயல்முறை குறைபாடு என்று சொல்லி விசாரணையை முடித்து இதை ஒன்றும் இல்லாமல் செய்யப் போகிறீர்களா அல்லது இதில் இருக்கும் அப்பட்டமான விதிமீறல்களை விசாரணை செய்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப் போகிறீர்களா என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என அறப்போர் இயக்கம் தவெக அரசை எச்சரித்துள்ளது.