SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

காலை உணவுத் திட்ட மெனு பட்டியல் - மாணவ, மாணவிகளின் ரியாக்ஷன்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டப் பட்டியலில் இடம்பெற்றுள்ள உணவு வகைகள் குறித்து மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ள கருத்து

Written By Karthikeyan Sekar
Published: Oct 14, 2026, 12:09 PM IST | Updated: Oct 14, 2026, 12:14 PM IST
Join

தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு அனைத்து வேலை நாட்களிலும் ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு 50 கிராம் உணவுப் பொருட்களும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 75 கிராம் உணவுப் பொருட்களும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை மூலம் விநியோகிக்கப்பட்டு, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் சமைத்து வழங்கப்படுகிறது.  

வாரத்தின் 5 வேலை நாட்களுக்கான காலை உணவுப் பட்டியல் விவரம்:

1. திங்கட்கிழமை - பொங்கல் + காய்கறி சாம்பார்
2. செவ்வாய்க்கிழமை- ரவா கிச்சடி + காய்கறி சாம்பார்
3. புதன்கிழமை - வெண்பொங்கல் + காய்கறி சாம்பார்
4. வியாழக்கிழமை - சேமியா உப்புமா + காய்கறி சாம்பார்
5. வெள்ளிக்கிழமை - கோதுமை ரவா கிச்சடி + காய்கறி சாம்பார்

பயனடைந்த மாணவிகளின் நெகிழ்ச்சி

திருப்பத்தூர் மாவட்டத்தில் மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவிகள் இத்திட்டம் தங்கள் அன்றாட வாழ்க்கையிலும் படிப்பிலும் ஏற்படுத்திய மாற்றங்களை விரிவாகப் பகிர்ந்துள்ளனர்:  

1. மாணவி செல்வி பாரதி, 8 ஆம் வகுப்பு

"என் தந்தை பட்டாபிராமன் தினமும் காலை 6 மணிக்கே கூலி வேலைக்குச் சென்றுவிடுவார். தாயார் ராணியும் காலை 7:30 மணியளவில் கூலி வேலைக்குச் சென்றுவிடுவதால், காலையில் எங்களுக்குத் தனித்தனியாக உணவு சமைத்து வழங்கிவிட்டுச் செல்வது அவருக்கு மிகவும் சிரமமாக இருந்து வந்தது. இதனால் பல நாட்களில் நான் காலை உணவு சாப்பிடாமலேயே பட்டினியாகப் பள்ளிக்கு வந்திருக்கிறேன். மதிய உணவை மட்டுமே பள்ளியில் சாப்பிட்டு வந்தேன்.  

தற்போது முதலமைச்சர் அறிமுகப்படுத்திய இந்த காலை உணவுத் திட்டத்தின் மூலம் பொங்கல், கிச்சடி எனப் பலவகையான உணவுகளைச் சுவையாகவும் வயிறாரவும் சாப்பிடுகிறேன். பசியின்றி இருப்பதால் வகுப்பில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களைக் கவனித்துப் படிப்பதற்கு இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

காலையில் உணவு சமைக்கும் பதற்றம் குறைந்ததால் என் அம்மா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். எங்களைப் போன்ற ஏழை எளிய மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு திட்டத்தைச் செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது குடும்பத்தின் சார்பாகவும், பள்ளி மாணவிகள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்."  

2. மாணவி செல்வி ஹேமா, 8 ஆம் வகுப்பு

என் தந்தை வெங்கடேசன், தாயார் ராஜேஸ்வரி. இருவரும் கூலி வேலைக்குச் செல்பவர்கள். தாய் அதிகாலை 5 மணிக்கே எழுந்து வேலைக்குச் செல்லத் தயாராக வேண்டியிருப்பதால், காலையில் பள்ளிக்கு வருவதற்குத் தேவையான உணவைத் தயாரித்துச் சாப்பிடுவதில் பெரும் இடர்ப்பாடுகள் நிலவின. தற்போது பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் மூலம் பள்ளியிலேயே காலையில் சுடச்சுடச் சத்தான உணவு கிடைக்கிறது. காலையில் இந்த உணவும், மதியத்தில் பள்ளியின் சத்துணவும் கிடைத்துவிடுவதால் எங்களது முழு உணவுத் தேவையும் பள்ளியிலேயே பூர்த்தியாகிவிடுகிறது.

இரவு உணவை மட்டுமே அம்மா வீட்டில் செய்து தருகிறார். பசியோடு பள்ளிக்கு வந்த நிலை மாறி, காலை உணவோடு கல்வியைத் தொடங்குவது பெரும் ஊக்கத்தைத் தருகிறது. மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் முதலமைச்சருக்கு என் குடும்பத்தினர் மற்றும் சக மாணவிகள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்." என தெரிவித்துள்ளார்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES