• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /ஒப்பந்த செவிலியர் நியமனத்தில் முறைகேடு புகார்: அமைச்சர் அருண்ராஜ் தொகுதியில் வெடித்த சர்ச்சை

ஒப்பந்த செவிலியர் நியமனத்தில் முறைகேடு புகார்: அமைச்சர் அருண்ராஜ் தொகுதியில் வெடித்த சர்ச்சை

தமிழக ஒப்பந்த செவிலியர் பணி நியமனத்தில் அமைச்சர் அருண்ராஜ் பெயரில் ரூ. 2 லட்சம் பேரம் என சர்ச்சை எழுந்த நிலையில், சுகாதாரத்துறை அதிரடி விளக்கமளித்துள்ளது.

Written ByKarthikeyan Sekar
Published: Sep 30, 2026, 02:02 PM IST|Updated: Sep 30, 2026, 02:15 PM IST
joinshare
ஒப்பந்த செவிலியர் நியமனத்தில் முறைகேடு புகார்: அமைச்சர் அருண்ராஜ் தொகுதியில் வெடித்த சர்ச்சை
Image Credit: Tamil Nadu Health Department Recruitment - Minister Arun Raj

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ்நாடு முழுவதும் தேசிய நல்வாழ்வு குழுமம் மற்றும் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக 4,724 தற்காலிக ஒப்பந்த செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட வாரியாக வரவேற்கப்பட்டு வருகின்றன. மாதத் தொகுப்பூதியமாக ரூ. 21,000 (ESI மற்றும் EPF பிடித்தங்களுடன்) நிர்ணயிக்கப்பட்டு இப்பணிகளுக்கான நியமன நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கொன்னையார் பகுதியில் ஒப்பந்த செவிலியர் பணி பெற்றுத் தருவதாகக் கூறி சிலர் ரூ. 2 லட்சம் வரை பேரம் பேசுவதாக சமூக வலைதளமான எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் புகார்கள் எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.  

குறிப்பாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜின் சொந்த தொகுதியான திருச்செங்கோட்டிலேயே, அவருடைய நேர்முக உதவியாளர் எனக் கூறிக்கொண்டு சிலர் இத்தகைய பண வசூலில் ஈடுபடுவதாகப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், அமைச்சரின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்குக் கோரிக்கைகள் வலுத்தன.  

தமிழக சுகாதாரத்துறை திட்டவட்ட விளக்கம்

Public Notice : Contractual Staff Nurse Recruitment

 

இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை (DPH) உடனடியாக ஒரு விரிவான பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் பணி நியமனங்கள் முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடனும், தகுதியின் அடிப்படையிலும் மட்டுமே நடைபெற்று வருவதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

செவிலியர் பணித் தேர்வு மற்றும் பணி நியமனத்திற்கு விண்ணப்பதாரர்கள் எவ்விதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்பதை அரசு அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளது. வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் அல்லது ஏதேனும் ஆதாயங்களைப் பெற்றுக்கொண்டு, நியமன நடைமுறைகளில் தலையீடு செய்ய முடியும் என உரிமை கோரும் போலி நபர்கள் அல்லது இடைத்தரகர்களை ஒருபோதும் நம்பவோ, அவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளவோ வேண்டாம் என விண்ணப்பதாரர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

புகார் தெரிவிக்க கட்டணமில்லா உதவி எண்

முறைகேடுகளைத் தடுக்கவும், வெளிப்படையான பணி நியமனத்தை உறுதி செய்யவும் சிறப்புப் புகார் வழிகளை சுகாதாரத்துறை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று பணம் கேட்டு மிரட்டுவது அல்லது வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றுவது போன்ற முறைகேடான சம்பவங்கள் ஏதேனும் விண்ணப்பதாரர்களின் கவனத்திற்கு வந்தால், உடனடியாகப் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்படுபவர்கள் அல்லது முறைகேடுகளைக் கண்டறிபவர்கள் 8754448477 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது dph.nursesrecruitment.grievance@gmail.com என்ற அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரியிலோ துரிதமாகப் புகார் அளிக்கலாம். சமூக விரோதிகள் மற்றும் இடைத்தரகர்களின் வதந்திகளைப் புறந்தள்ளிவிட்டு, அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளை மட்டுமே விண்ணப்பதாரர்கள் நம்ப வேண்டும் என்றும், நியாயமான முறையில் ஆட்கள் தேர்வு நடைபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu