• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 % மானியம் - தமிழ்நாடு அரசின் லேட்டஸ்ட் அறிவிப்பு

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 % மானியம் - தமிழ்நாடு அரசின் லேட்டஸ்ட் அறிவிப்பு

Tamil Nadu country chicken farm subsidy : தமிழ்நாடு முழுவதும் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 விழுக்காடு மானியம் வழங்கப்பட உள்ளது, விருப்பம் உள்ளவர்கள், அந்தந்த மாவட்ட கால்நடை நிலையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written ByKarthikeyan Sekar
Published: Sep 28, 2026, 03:26 PM IST|Updated: Sep 28, 2026, 03:30 PM IST
joinshare
நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 % மானியம் - தமிழ்நாடு அரசின் லேட்டஸ்ட் அறிவிப்பு
Image Credit: Tamil Nadu country chicken farm subsidy

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

2

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

3

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

4

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

5

RR அணியில் இருந்து வெளியேறும் ஜெய்ஸ்வால்? இந்த அணிக்குதான் செல்கிறாராம்.. முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu country chicken farm subsidy : தமிழ்நாடு முழுவதும் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை அமைப்பதற்கான அறிவிப்புகளை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர். காஞ்சிபுரம், திருவாரூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த  அறிவிப்பின்படி, நாட்டுக்கோழி பண்ணை அமைக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்..

கால்நடை பராமரிப்புத்துறை 2026-27ம் ஆண்டில் நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறமையும் ஆர்வமும் உள்ள தொழில் முனைவோர் / பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய முக்கிய தகுதிகள் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.

1.நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணைகளை நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை கட்டுமானச் செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத்தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு), மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியம் (ரூ.1,46,875)மாநில அரசால் வழங்கப்படும்.
 
2. திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கி மூலமாகவோ (அ) தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளி திரட்ட வேண்டும்.

3. ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும்.

4. பயனாளிகளிடம் கோழி கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். இந்தப் பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

5. மேலும் பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர். திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் 30 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட / பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். 2023-24, 2024-25 மற்றும் 2025-26ஆம் ஆண்டுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின்கீழ் பயனாளிகளாகவோ அவர்தம் குடும்பத்தினரோ பயனடைந்திருக்கக் கூடாது.

6. கட்டுமானப்பணிகள், தீவனம் (ம) உபகரணங்கள் வாங்குதல் போன்ற அனைத்து செயல்முறைகளும் பயனாளியால் செய்யப்பட வேண்டும்.

7. ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்திட்டத்தின் கீழ் . நாட்டுக்கோழி வளர்ப்பில் திறமையும் ஆர்வமும் உள்ள தொழில் முனைவோர்/பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

8. விண்ணப்பிக்கும் பயனாளிகளிடமிருந்து ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா / அடங்கல் நகல், 50% தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம் / வங்கி கடன் ஒப்புதல் விவரம்) 3 வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி, 2023 -24, 2024-25 மற்றும் 2025-26 ஆம் ஆண்டுகளுக்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என்பதற்கான சான்றிதழ் பெறப்பட வேண்டும்.

9. தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களை தேர்வு செய்து மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் பெற்று பயனாளிகளின் தகுதி உறுதி செய்யும் ஆவண நகல்கள் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் இயக்குநர் அவர்களால் இறுதி செய்யப்படும்.

இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் பொதுமக்கள் அருகிலுள்ள கால்நடை நிலையங்களை அணுகி விண்ணப்பங்களை வழங்குமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu