• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் அதிரடி நடவடிக்கை: தமிழக அரசு அதிரடி

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் அதிரடி நடவடிக்கை: தமிழக அரசு அதிரடி

Tamil Nadu Government : விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையையொட்டி கிளாம்பாக்கத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கம். போக்குவரத்துத் துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Written ByKarthikeyan Sekar
Published: Sep 13, 2026, 08:45 AM IST|Updated: Sep 13, 2026, 08:50 AM IST
joinshare
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் அதிரடி நடவடிக்கை: தமிழக அரசு அதிரடி
Image Credit: Tamil Nadu Transport Department

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

2

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

3

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

4

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

5

வீடு கட்டுவோருக்கு சூப்பர் நியூஸ்: உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிய தமிழ்நாடு அரசு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu Government : விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 12, 13 மற்றும் 14 ஆகிய மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் சிரமமின்றிப் பயணம் செய்வதற்காகத் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை விரிவான சிறப்பு ஏற்பாடுகளையும், ஆம்னி பேருந்துகள் மீதான தீவிரக் கண்காணிப்புகளையும் மேற்கொண்டுள்ளது.

கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்:

சென்னையிலிருந்து வெளியூர்களுக்குப் பயணிக்கும் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்ட முடிவின்படி சிறப்புப் பேருந்துகள் திட்டமிடப்பட்டன. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 1,099 பேருந்துகளுடன், கூடுதலாக 1,255 சிறப்புப் பேருந்துகள் சேர்த்து மொத்தம் 2,354 பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, செப்டம்பர் 11 இரவு பயணிகளின் தேவைக்கேற்ப 2,213 பேருந்துகள் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டன. தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மீதமுள்ள பேருந்துகளில், செப்டம்பர் 12 காலை முதல் பயணிகளின் தேவையை அறிந்து மேலும் 41 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: பணத்தைத் திருப்பிக் கொடுத்து நடவடிக்கை

தொடர் விடுமுறையைப் பயன்படுத்தி சில ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பயணிகள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்புப் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர வாகனத் தணிக்கை முடுக்கிவிடப்பட்டது. செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 12 அதிகாலை வரை தமிழகம் முழுவதும் 2,379 ஆம்னி பேருந்துகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

பயணிகளிடம் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டு, கூடுதல் கட்டணம் வசூலித்தது கண்டறியப்பட்ட இடங்களில், பயணிகளிடமிருந்து கூடுதலாகப் பெறப்பட்ட தொகை உடனடியாக சம்பந்தப்பட்ட பயணிகளுக்கே திருப்பி ஒப்படைக்கப்பட்டது.

400 பேருந்துகளுக்கு நோட்டீஸ்; 4 வெளிமாநிலப் பேருந்துகள் பறிமுதல்:

சோதனையின் போது பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட 400 ஆம்னி பேருந்துகளுக்குத் தணிக்கை அறிக்கை மற்றும் இ சலான் வழங்கப்பட்டு, வாகன உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விதிமீறல்களுக்காக இணக்கக் கட்டணமாக ரூ.10,31,500 நிர்ணயிக்கப்பட்டு, அதில் ரூ.1,60,500 உடனடியாக வசூலிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுத் தமிழ்நாட்டில் இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளிடமிருந்து வரி பாக்கியாக ரூ.15,33,220 வசூல் செய்யப்பட்டுள்ளது.

தகுதிச் சான்றிதழ் இல்லாமலும், உரிய சாலை வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட 4 வெளிமாநில ஆம்னி பேருந்துகள் அதிரடியாகச் சிறைபிடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன. அந்தப் பேருந்துகளில் பயணித்த பயணிகளுக்கு உடனடியாக மாற்றுப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

செப்டம்பர் 16 வரை தொடர் கண்காணிப்பு எச்சரிக்கை:

விடுமுறைக் காலம் முடியும் வரை பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றிப் பயணிப்பதை உறுதிசெய்யவும், ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்கவும் வரும் செப்டம்பர் 16, 2026 வரை இந்தச் சிறப்பு வாகனத் தணிக்கை தொடர்ந்து தீவிரமாக நடைபெறும் என அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தன்னிச்சையாக ரத்து செய்தால், அப்பயணிகளுக்கு மாற்றுப் பேருந்தில் பயணிக்க சம்பந்தப்பட்ட உரிமையாளர்களே ஏற்பாடு செய்ய வேண்டும்; தவறும்பட்சத்தில் பேருந்தின் அனுமதிச் சீட்டு (Permit) மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் உள்ளிட்ட முக்கியப் பேருந்து நிலையங்களில் பொது மேலாளர்கள் மற்றும் அதிகாரிகள் நேரடியாக முகாமிட்டுப் பயணிகளின் தேவைகளுக்கேற்பக் கூடுதல் அரசுப் பேருந்துகளை உடனுக்குடன் இயக்கி நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu