• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /2024 முதல் 2026 வரை... டெங்கு பாதிப்பு நிலவரம் என்ன? - தமிழ்நாடு அரசின் விளக்கம்

2024 முதல் 2026 வரை... டெங்கு பாதிப்பு நிலவரம் என்ன? - தமிழ்நாடு அரசின் விளக்கம்

2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளை ஒப்பிட்டு, தமிழ்நாட்டில் நடப்பு 2026ஆம் ஆண்டில் டெங்கு பாதிப்பு வழக்கத்திற்கு மாறானதோ அல்லது அபாயகரமான அளவிலோ இல்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

Written BySudharsan G
Published: Sep 17, 2026, 06:48 AM IST|Updated: Sep 17, 2026, 06:53 AM IST
joinshare
2024 முதல் 2026 வரை... டெங்கு பாதிப்பு நிலவரம் என்ன? - தமிழ்நாடு அரசின் விளக்கம்
Image Credit: Dengue Fever | AI Generated Image : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu Dengue Updates: தமிழ்நாட்டில் நிலவும் டெங்கு காய்ச்சல் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தைப்போக்கும் வகையிலும், உண்மையான நிலவரத்தைத் தெளிவுபடுத்தும் வகையிலும் இந்தச் செய்திக் குறிப்பு வெளியிடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அதில், "நடப்பு 2026ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் என்பது வழக்கத்திற்கு மாறானதோ அல்லது அபாயகரமான அளவிலோ இல்லை. ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக் காலங்களில் தட்பவெப்பநிலை மாற்றங்களின் காரணமாக டெங்கு பாதிப்புகளில் பருவகால மாறுபாடு ஏற்படுவது இயல்பானது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையிலான அதிகாரப்பூர்வ தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தற்போதைய நிலவரத்தைத் தெளிவாக அறிந்துகொள்ள முடிவதாக தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க | ரேசன் கடையில் eKYC முடிச்சாச்சா...? செப். 19இல் தமிழக அரசு நடத்தும் சிறப்பு முகாம்

2024 முதல் 2026 புள்ளிவிவரங்கள்

டெங்கு காய்ச்சலால் கடந்த 2024ஆம் ஆண்டில் மொத்தம் 34 ஆயிரத்து 339 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 13 பேர் உயிரிழந்ததாகவும்; 2025ஆம் ஆண்டில் 15 ஆயிரத்து 688 பேர் பாதிக்கப்பட்டு, 13 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பு 2026ஆம் ஆண்டில் செப்டம்பர் 16ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, 16,334 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 9 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

செய்தி வெளியீடு - பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்ககம்#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @arunraajkg | pic.twitter.com/1G6mo0EubF

— TN DIPR (@TNDIPRNEWS) September 16, 2026

பருவமழைக்காலத்தில் அதிகரிப்பது வழக்கம்

மேலும் அந்த செய்தி குறிப்பில், "டெங்கு காய்ச்சலைப் பரப்பும் Aedes வகை கொசுக்களின் பெருக்கம் பருவமழைக் காலங்களில் அதிகரிப்பது வழக்கம். குறிப்பாக அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் கொசு உற்பத்தி அதிகரிக்கக்கூடிய சூழல் ஏற்படுவதால், டெங்கு பாதிப்புகளைத் தொடர்ந்து கண்காணித்து, முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முன்னெடுப்புகள்

தமிழ்நாடு முழுவதும் டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்வதற்காக பொறுப்பு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தகவல், கல்வி மற்றும் தொடர்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், சுகாதாரம் உள்ளிட்ட தொடர்புடைய துறைகள் இடையேயான ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டு, ஒருங்கிணைந்த முறையில் தடுப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும்; காய்ச்சல் பாதிப்புகளைக் கண்காணித்து, தேவையான மருத்துவச் சிகிச்சையை விரைவாக வழங்கும் வகையில் காய்ச்சல் வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்க விழா எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

காய்ச்சலுடன் வரும் நோயாளிகளின் உடல்நிலையை மதிப்பீடு செய்து, நோயின் தீவிரத் தன்மைக்கு ஏற்ப உரிய முன்னுரிமையில் சிகிச்சை வழங்க ஏதுவாக பயிற்சி அளிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெங்கு பரப்பும் கொசுக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கொசுக்கட்டுப்பாடு, கொசுப்புழுக் கட்டுப்பாடு, கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்; இப்பணிகளில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு தேவையான பயிற்சிகளும் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கான வேண்டுகோள்

  • தமிழ்நாடு அரசின் சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோளும் வைக்கப்பட்டுள்ளது. அவை:
  • பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
  • பயன்படுத்தப்படாத பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டைகள், பழைய டயர்கள், பூந்தொட்டிகள் மற்றும் தண்ணீர் தொட்டிகள் உள்ளிட்டவற்றில் தண்ணீர் தேங்காமல் உரியமுறையில் பராமரிக்க வேண்டும்.
  • வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து உடனடியாக அகற்ற வேண்டும்.
  • மேலும், அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
  • காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையை அணுகி மருத்துவ ஆலோசனை மற்றும் உரிய சிகிச்சையைப் பெறவேண்டும்.

மேலும் படிக்க | தாம்பரம் டெண்டர் சர்ச்சை Explained: தமிழ்நாடு அரசின் விளக்கமும்... எழும் சந்தேகங்களும்...

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu