• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /சட்டவிரோத குவாரிகளுக்கு செக்: தமிழகத்தில் கனிம வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி கட்டாயம்!

சட்டவிரோத குவாரிகளுக்கு செக்: தமிழகத்தில் கனிம வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி கட்டாயம்!

Tamil Nadu Government : சட்டவிரோத கனிமக் கடத்தலைத் தடுக்க செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கட்டாயம் பொருத்த வேண்டும் என அமைச்சர் டி.கே.பிரபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Written ByKarthikeyan Sekar
Published: Sep 22, 2026, 02:04 PM IST|Updated: Sep 22, 2026, 02:11 PM IST
joinshare
சட்டவிரோத குவாரிகளுக்கு செக்: தமிழகத்தில் கனிம வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி கட்டாயம்!
Image Credit: Tamil Nadu GPS rule

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu Government : தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் செயல்பாடுகள் மற்றும் மாவட்ட அலுவலர்களின் பணிகள் குறித்த முக்கிய ஆய்வுக் கூட்டம் சென்னை புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநரகத்தில் நடைபெற்றது. இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் துறையின் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.  

அதிகாரிகளுக்கு உத்தரவு

இக்கூட்டத்தின்போது கனிமங்களின் உற்பத்தி, அதன் மூலம் அரசுக்குக் கிடைக்கப்பெறும் வருவாய் மற்றும் வருவாயை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்கி, இயற்கை வளங்களைப் பாதுகாத்து அரசுக்கு நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கினை முழுமையாக எட்டுமாறு மாவட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். இதற்காகத் துறை அதிகாரிகள் தங்களது கடமையை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.  

ஜிபிஎஸ் கருவி கட்டாயம்:

மாநிலத்தில் சட்டவிரோதக் குவாரிகளைத் தடுப்பதற்கும், அனுமதியின்றி கனிமங்கள் எடுத்துச் செல்லப்படுவதை முழுமையாகக் கண்காணித்துக் கட்டுப்படுத்துவதற்கும் அதிரடி நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கனிமங்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களிலும் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஜிபிஎஸ் கருவி கட்டாயமாகப் பொருத்தப்பட வேண்டும் எனத் திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

புதிய குவாரிகள் மின்னணு ஏலம்:

நிலுவையில் உள்ள கனிமக் குத்தகை கோரும் விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய இடங்களைக் கண்டறிந்து அவற்றை மின்னணு முறையில் ஏலத்திற்குக் கொண்டு வரவும், பயன்பாட்டில் இல்லாத குவாரிகளை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரவும் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.  

சாலைப் பணிகளுக்கு மண் எடுக்க அனுமதி:

இதனைத் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை மற்றும் இதர சாலைப் பணிகளுக்காக மண் எடுக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கும் ஒப்பந்ததாரர்களுடனான கலந்தாய்வுக் கூட்டமும் நடைபெற்றது. இத்திட்டப் பணிகளுக்குக் குத்தகை அனுமதி பெறுவதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களைக் கேட்டறிந்த அமைச்சர், அவற்றைக் களைவதற்கு உரிய நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என உறுதியளித்தார்.  

மேலும், மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளைக் கண்காணிக்கும் பணியில் சிறப்பாக ஈடுபட்ட சிறப்புக்குழு அதிகாரிகளுக்கு இக்கூட்டத்தில் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டப்பட்டது.  

இந்நிகழ்வில் இயற்கை வளங்கள் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் இயக்குநர் பிரபுசங்கர் மற்றும் துறையின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu