• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /தமிழ்நாடு அரசின் மொபைல் பழுது பார்க்கும் பயிற்சி! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாடு அரசின் மொபைல் பழுது பார்க்கும் பயிற்சி! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Tamil Nadu Government : தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள மூன்று நாள் மொபைல் போன் பழுது நீக்கம் மற்றும் சேவைப்பயிற்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம், எப்படி கலந்து கொள்ளலாம், என்னென்ன பயிற்சி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written ByKarthikeyan Sekar
Published: Sep 11, 2026, 09:35 AM IST|Updated: Sep 11, 2026, 09:44 AM IST
joinshare
தமிழ்நாடு அரசின் மொபைல் பழுது பார்க்கும் பயிற்சி! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Image Credit: Tamil Nadu Government Mobile Phone Repair Training

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

2

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

3

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

4

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

5

RR அணியில் இருந்து வெளியேறும் ஜெய்ஸ்வால்? இந்த அணிக்குதான் செல்கிறாராம்.. முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் தொழில் முனைவோருக்கான 'மொபைல் போன் பழுது நீக்கம் மற்றும் சேவைப்பயிற்சி' வரும் 16.09.2026 முதல் 18.09.2026 வரை மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பயிற்சி நடைபெற உள்ளது.

பயிற்சி நோக்கம்:

இந்தப் பயிற்சி, பங்கேற்பாளர்களுக்கு மொபைல் போன் ஹார்ட்வேர் மற்றும் Chip Level Service துறையில் தொழில்துறைத் தரநிலைக்கு ஏற்ப தேவையான தொழில்நுட்ப அறிவு மற்றும் நடைமுறை திறன்களை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடிவில், பயிலாளர்கள் Self-Employment / Service Centre / Technician Role- க்கு தயாராக இருப்பார்கள்.

மொபைல் சர்வீஸ் பயிற்சி - நாள் 1

* மொபைல் போன்களின் அடிப்படை அறிமுகம்,
* தொலைபேசிகளின் வகைகள்,
* உற்பத்தியாளர்கள் பற்றிய விளக்கம்.
* ஆண்ட்ராய்டு மற்றும் சிப்செட்
* சார்ஜர்கள் மற்றும் பேட்டரிகளின் வகைகள், டிஸ்ப்ளே வகைகள் மற்றும் அதற்கான தொழில்நுட்பங்கள். Ear Speaker, Loud Speaker, Microphone போன்ற கூறுகள் மற்றும் சார்ஜிங் இணைப்பகங்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்யும் நடைமுறைகள்.
* FFC ஸ்ட்ரிப்ஸ், கேபிள்கள், சென்சார்கள் மற்றும் சார்ஜிங் போர்டுகள் தொடர்பான பழுதுபார்த்தல்.

மொபைல் சர்வீஸ் பயிற்சி - நாள் 2

* Chip Level சர்வீசிங் பற்றிய அடிப்படை மற்றும் சுருக்கமான விளக்கம்.
* SMT கூறுகள், மின்தடை (Resistor), மின் தேக்கி (Capacitor), டையோடு (Diode), IC ஆகியவற்றின் செயல்முறை விளக்கம். கூறுகளை அகற்றுதல், Soldering நுட்பங்கள் மற்றும் Multimeter மூலம் கூறுகளை கண்டறியும் பயிற்சி.
* மாணவர்களின் தனிப்பட்ட செயல்திறன் மேம்பாட்டுக்கான நடைமுறை பயிற்சி. · மொபைல் மதர்போர்டில் உள்ள மின்னழுத்தப் பிரிவுகள் - CPU, EMMC, Network, Battery, CC Board, Display, Battery Section.
மின்னழுத்தம் (Voltage), மினோட்டம் (Current), Amps & Watts பற்றிய தெளிவான விளக்கம். மதர்போர்டில் Voltage-களை கண்டறியும் முறைகள் மற்றும் Dead Condition மொபைல்களை சரி செய்யும் நுட்பங்கள்.

மொபைல் சர்வீஸ் பயிற்சி - நாள் 3

* BQ,MediaTek, Qualcomm சார்ஜிங் Tracing மற்றும் Fixing நடைமுறைகள்.
* LCD மற்றும் OLED Display பிரிவுகள், Backlight மற்றும் GFX Section பழுதுபார்த்தல். VREG Line, LDO Lines Tracing, Short Killer மூலம் மொபைல் சரி செய்யும் முறை.
* Primary & Secondary Power Section பழுதுபார்த்தல், 6 Amps மூலம் Port Repair. • DC PSU Reading Glam Fault Diagnosis.
* Software Unlock கருவிகள், Network Section - PA மற்றும் WTR நேரடி கண்காணிப்பு மற்றும் சரிசெய்தல்.
* FRP Unlock-க்கான நேரடி Unlocked நடைமுறை பயிற்சி.

மத்திய / மாநில அரசுகள் வழங்கும் நிதியுதவி திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த விவரங்களும் பயிற்சியின் ஒரு பகுதியாக விளக்கப்படும்.

பயிற்சியில் சேர தகுதியானவர்கள் :

18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண், திருநங்கைகள், திருநம்பிகள், தொழில்முனைவோர். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ITI/பாலிடெக்னிக் மாணவர்கள், வேலை தேடுபவர்கள், சுயதொழில் ஆர்வலர்கள் மற்றும் மொபைல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொள்ளலாம். பயிற்சியாளர்களுக்குக் குறைந்த வாடகையில் தங்கும் விடுதி வசதி உள்ளது.

முன்பதிவு, தொடர்புக்கு:

www.editn.in, 8668100181/9360221280. திங்கள்-வெள்ளி | காலை 10.00 - மாலை 5.00 மணி

தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை-600 032. பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu