Tamil Nadu Government 2026-27 Income & Expenditure Statistics : முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி பொறுப்பேற்று சுமார் நான்கு மாதங்களை தாண்டிவிட்டன. தவெகவுக்கு பெரும்பான்மை இல்லாத சூழலில் பல்வேறு கட்சிகளின் ஆதரவில் ஆட்சி அமைந்தது, மேலும் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் அடங்கிய அமைச்சரவை அமைந்தது.
இந்தச் சூழலில், தமிழ்நாடு அரசின் 2026-27ஆம் நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களுக்கான வருவாய், செலவு மற்றும் கடன் தொடர்பான புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளன. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் அரசுக்கு கிடைத்த வருவாயை விட செலவினம் இருப்பது புள்ளிவிவரங்களில் காணப்படுகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு அரசின் வருவாய், மொத்த செலவினம், வருவாய் பற்றாக்குறை, கடன்களுக்கான வட்டி, அரசு வாங்கிய கடன் உள்ளிட்ட தகவல்களை இங்கு காணலாம்.
| வருவாய் | ரூ.1,17,791 கோடி |
| செலவு | ரூ.1,38,140 கோடி |
| வருவாய் பற்றாக்குறை | ரூ.20,349 கோடி |
| கடன்களுக்கான வட்டி | ரூ.25,991 கோடி |
| அரசு வாங்கிய கடன் | ரூ.30,021 கோடி |
அதன்படி, தமிழ்நாடு அரசுக்கு கடந்த ஏப்ரல் முதல் வரி வருவாய், வரி அல்லாத வருவாய், மத்திய அரசின் வரிப்பங்கு மற்றும் மானியங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 791 கோடி வருவாய் கிடைத்திருக்கிறது.
அரசின் செலவினங்களில் ஊதியம், ஓய்வூதியம், அரசு நலத்திட்டங்கள், மானியங்கள் மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்டவை அடக்கம்.
குறிப்பாக, கடந்த 5 மாதங்களில் கடனுக்கான வட்டியாக மட்டும் ரூ.35,991 கோடி செலுத்தப்பட்டுள்ளது.
ஓய்வூதியத்திற்காகவும் ரூ. 21,008 செலவிடப்பட்டுள்ளது.