• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /தாய்மாமன் தங்க மோதிர திட்டம்! தாய்மார்களுக்கு முதலமைச்சர் கொடுத்த குட்நியூஸ்

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்! தாய்மார்களுக்கு முதலமைச்சர் கொடுத்த குட்நியூஸ்

Thaimaaman Thanga Mothiram Scheme: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை செப்டம்பர் 28 ஆம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார்.

Written ByKarthikeyan Sekar
Published: Sep 18, 2026, 08:03 PM IST|Updated: Sep 18, 2026, 08:10 PM IST
joinshare
தாய்மாமன் தங்க மோதிர திட்டம்! தாய்மார்களுக்கு முதலமைச்சர் கொடுத்த குட்நியூஸ்
Image Credit: Thaimaaman Thanga Mothiram Scheme

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா:  பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா: பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

2

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

3

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

4

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

5

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Thaimaaman Thanga Mothiram Scheme: தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல்" தொடர்பான ஆய்வுக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (18.09.2026) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இத்திட்டத்தை வரும் 28.09.2026 அன்று முதலமைச்சர் முறைப்படி தொடங்கி வைக்கவுள்ளார்.

திட்டத்தின் பின்னணியும் நோக்கமும்:

தமிழ்நாடு அரசு தாய்-சேய் நலனை மேம்படுத்துவதற்கு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி, இலவச பிரசவம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்பு சேவைகள், அவசர மகப்பேறு சிகிச்சை, ஊட்டச்சத்து அளித்தல், பிரசவத்திற்காக மருத்துவமனையைத் திட்டமிடும் முறை, கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் கூட்டுக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு மென்பொருள் (PICME) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு, மாநிலத்தில் தாய்-சேய் நலக் குறியீடுகள் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.  

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த சேவைகளில் மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தில் தாய்மாமன் சீர்முறையைப் பிரதிபலிக்கும் வகையிலும், "வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டத்தின்படி", அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையில் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" என்ற சிறப்பு நலத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை 23.06.2026 அன்று வெளியிடப்பட்டது.  

பிரசவ புள்ளிவிவரங்கள்:

தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு-6ல் (NFHS-6) பதிவாகியுள்ள தகவலின்படி, தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7.80 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இவற்றில் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளிலேயே நடைபெறுகின்றன. இதில் 4.20 லட்சம் பிரசவங்கள் (53%) அரசு மருத்துவமனைகளில் நிகழ்கின்றன. அதில் 90 சதவீதம் சீமாங் மையங்களில் (CEmONC Centres) நடைபெறுகின்றன. இதன் மூலம் பாதுகாப்பான பிரசவம் மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளின் பிறப்பை உறுதி செய்வதில் பொது சுகாதார அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.  

தங்க மோதிர விநியோகம் மற்றும் தகுதிகள்:

இத்திட்டத்தின் கீழ், 22.06.2026 அன்று முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் தலா ஒரு கிராம் எடையில் தங்க மோதிரம் வழங்கப்படும்.  

இதற்கென பிரத்யேக வரிசை எண்ணும் (Unique Serial Number), சேதப்படுத்த முடியாத பாதுகாப்புப் பெட்டகமும் (Tamper-proof Packaging) கொண்ட 1,28,000 தங்க மோதிரங்கள் முதற்கட்டத் தவணையாகக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம், அவர்கள் PICME-யில் பதிவு செய்யப்பட்டு RCH அடையாள எண் (RCHID) பெற்றிருக்க வேண்டும்.  

22.06.2026 முதல் திட்டம் தொடங்கப்படும் நாள் வரை பிறந்த குழந்தைகளுக்கு 107 மையங்களில் தினமும் 100 குழந்தைகள் வீதம் 28.09.2026 முதல் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

திட்டம் தொடங்கப்படும் நாளிலிருந்து, அரசு மருத்துவமனைகளில் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு பிரசவம் முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போதே தங்க மோதிரம் வழங்கப்படும்.  

இத்திட்டம் அரசு மருத்துவ சேவைகளில் மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதோடு, மருத்துவமனைகளில் பாதுகாப்பான பிரசவ முறையை ஊக்குவிப்பதாகவும், தாய்-சேய் நலப் பாதுகாப்பை வலுப்படுத்துவதாகவும் அமையும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu