நவம்பர் 2026 2027 -ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் DGT ஆல் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள கீழ்க்காணும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஏற்கனவே ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் ITI-ல் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர் Allied தொழிற்பிரிவில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருந்தால் அப்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழ் பெறும் பொருட்டு தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.
இரண்டாம் வகை (Category II): திறன்மிகு தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர்: திறன்மிகு பயிற்சி தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற (COE NTC) பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற செக்டாருடன் தொடர்புடைய தொழிற்பிரிவில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருந்தால் அப்பிரிவில் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.
மூன்றாம் வகை (Category III): ஆகஸ்ட் 2018- வரை SCVT சேர்க்கை பெற்றவர்: ஆகஸ்ட் 2018 வரை சேர்க்கை செய்யப்பட்டு, SCVT பாடத்திட்டத்தில் பயின்று, சான்றிதழ் பெற்றவர்கள் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வு இன்றி நேரடியாக அகில இந்திய தொழிற்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
a) விண்ணப்பதாரர் 01-09-2026 அன்று 21 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை.
b) தொழிற் பழகுநர் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் தொழிற் சாலை சட்டம் 1948-ன் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் அரசு / உள்ளாட்சி மன்றத்தில் பதிவு பெற்ற நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பிக்கும் தொழிற் பிரிவு தொடர்பான பணியில் மூன்று வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
c) SCVT திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 2019-ஆம் ஆண்டு முதல் சேர்க்கை செய்யப்பட்டு மாநில தொழிற்பயிற்சி குழுமம் (SCVT) தொழிற்பிரிவு பயின்று தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள், 3 வருடம் முன் அனுபவம் மற்றும் 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இந்த Category IV-இன் படி தனித்தேர்வராக விண்ணப்பித்து, முதன்மைத்தேர்வு இன்றி நேரடியாக அகில இந்திய தொழிற்தேர்வு அனுமதிக்கப்படுவர்.
கல்வி தகுதி: தனித்தேர்வராக தேர்வெழுத விரும்பும் விண்ணப்பதாரர் அத்தொழிற்பிரிவிற்குரிய குறைந்தபட்ச கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
தகுதியுள்ள (Allied Trade) & IV (Other than SCVT candidates) வகையைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முதனிலைத் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு (Theory) 26.11.2026 அன்று கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். எழுத்துத் தேர்வு descriptive type-ல் இடம்பெறும். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே 27.11.2026 அன்று நடைபெறும் செய்முறை தேர்வில் கலந்து கொள்ள இயலும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் ஜூலை 2027-இல் நடைபெறவுள்ள அகில இந்திய தொழிற் தேர்வில் தனித்தேர்வராக கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். தொழிற் பிரிவிற்கு ஏற்ப அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெறுபவர்களுக்கு DGT, புது டெல்லி மூலம் தேசிய தொழிற் சான்றிதழ் வழங்கப்படும்.
தொழிற்பயிற்சி நிலையங்களில் தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கான முக்கிய அறிவிப்பை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவம், முழு விவரங்கள் அடங்கிய விளக்கக் குறிப்பேடு மற்றும் எல்லாக் கட்டண வழிகாட்டுதல்களையும் www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வுக்கான கட்டணமான ரூ. 200/-ஐ www.karuvoolam.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக e-Challan முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், இணைய வழியில் செலுத்தப்பட்ட கட்டணத்திற்கான செலுத்துச் சீட்டு, கல்விச் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் இதர தேவையான ஆவணங்களின் நகல்களை இணைக்க வேண்டும். இந்த முழுமையான ஆவணத் தொகுப்பினை வரும் 09.10.2026-க்குள் கிண்டி, செங்கல்பட்டு, அம்பத்தூர், வேலூர், அரக்கோணம், கோவை, ஈரோடு, கரூர், குன்னூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, பரமக்குடி, சிவகங்கை, தேனி, தருமபுரி, ஓசூர், நாமக்கல், சேலம், நாகர்கோவில், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நீடாமங்கலம், திருச்சி, அரியலூர், கடலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, உளுந்தூர்பேட்டை, திண்டிவனம், வாணியம்பாடி மற்றும் ஒரகடம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் முதல்வர்களிடம் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். கடைசித் தேதிக்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன்மைத் தேர்வில் வெற்றிபெறும் தனித்தேர்வர்கள், 2026-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்குப் பின்னர் காலியாக உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் இருக்கைகளில் தனித்தேர்வராகப் பதிவு செய்யப்பட்டு, ஜூலை 2027-இல் நடைபெறவுள்ள அகில இந்திய தொழிற்தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். ஒருவேளை அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியிடங்கள் இல்லாத பட்சத்தில், அவர்கள் ஜூலை 2028-இல் நடைபெறவிருக்கும் அகில இந்திய தொழிற்தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.