• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. சென்னையிலும் மழை? வானிலை மையம் தகவல்

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. சென்னையிலும் மழை? வானிலை மையம் தகவல்

Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Written ByR Balaji
Published: Oct 01, 2026, 02:53 PM IST|Updated: Oct 01, 2026, 02:56 PM IST
joinshare
9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. சென்னையிலும் மழை? வானிலை மையம் தகவல்

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

2

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

3

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

4

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

5

RR அணியில் இருந்து வெளியேறும் ஜெய்ஸ்வால்? இந்த அணிக்குதான் செல்கிறாராம்.. முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், சுமார் 1.5 கிமீ உயரம் வரை வட கடலோர தமிழக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

சுமார் 0.9 கிமீ உயரத்தில் வடக்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை, உள் கர்நாடகா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று (அக்டோபர் 01) நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை (அக்டோபர் 02) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

03-10-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

04-10-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

05-10-2026 மற்றும் 06-10-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

07-10-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் வானிலை

இன்று மற்றும் நாளை (அக்டோபர் 01 & 02) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Weather