• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /ஒரே நாள் ரெய்டில் சிக்கிய 1.74 கோடி: தமிழகத்தில் கேஷ் வாங்காமல் டிஜிட்டல் லஞ்ச முறைக்கு மாறிய அதிகாரிகள்

ஒரே நாள் ரெய்டில் சிக்கிய 1.74 கோடி: தமிழகத்தில் கேஷ் வாங்காமல் டிஜிட்டல் லஞ்ச முறைக்கு மாறிய அதிகாரிகள்

Tamil Nadu Government: ஊழலுக்கு எதிரான அரசின் தீவிர நடவடிக்கைகளுக்கு மத்தியில், தமிழ்நாட்டில் உள்ள அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறுவதற்கு ரொக்கப் பணத்திற்குப் பதிலாக டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை நாடத் தொடங்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறையின் (DVAC) தரவுகள் தெரிவிக்கின்றன.

Written BySripriya Sambathkumar
Published: Sep 23, 2026, 12:14 PM IST|Updated: Sep 23, 2026, 12:21 PM IST
joinshare
ஒரே நாள் ரெய்டில் சிக்கிய 1.74 கோடி: தமிழகத்தில் கேஷ் வாங்காமல் டிஜிட்டல் லஞ்ச முறைக்கு மாறிய அதிகாரிகள்
Image Credit: Representative / Tamil Nadu DVAC Raid

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

2

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

3

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

4

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

5

RR அணியில் இருந்து வெளியேறும் ஜெய்ஸ்வால்? இந்த அணிக்குதான் செல்கிறாராம்.. முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று (செப்டம்பர் 22, செவ்வாய்க்கிழமை) பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனைகளை மெற்கொண்டனர். 36 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் திடீர் சோதனை

நேற்று நடத்தப்பட இந்த திடீர் சோதனையில் பிடிபட்ட ரொக்க பணம் மற்றும் செயலி பரிமாற்றங்கள் அதிர்ச்சியை அளித்துள்ளன. நேற்று ஒருநாள் 36 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பிடிபட்ட கணக்கில் வராத தொகையின் விவரங்கள் பின்வருமாறு:

  • ரொக்க பணம்: ரூ.13 லட்சம்
  • ஜிபே வாயிலாக பரிமாற்றம் செய்யப்பட்ட தொகை: ரூ. 1 கோடியே 59 லட்சம்
  • மொத்தமாக, 1 கோடி 73 லட்சத்து 48 ஆயிரத்து 666 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெக்னாலஜியை பயன்படுத்தி லஞ்சம்: DVAC

ஊழலுக்கு எதிரான அரசின் தீவிர நடவடிக்கைகளுக்கு மத்தியில், தமிழ்நாட்டில் உள்ள அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறுவதற்கு ரொக்கப் பணத்திற்குப் பதிலாக டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை நாடத் தொடங்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறையின் (DVAC) தரவுகள் தெரிவிக்கின்றன.

செவ்வாய்க்கிழமையன்று, இத்துறையின் அதிகாரிகள் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர். இதில் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் மற்றும் சந்தேகத்திற்கிடமான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் என மொத்தம் ரூ. 1.73 கோடி மதிப்பிலான தொகை கண்டறியப்பட்டது.

அதிகாரிகள் ரூ. 13.78 லட்சம் ரொக்கத்தைக் கைப்பற்றிய அதே வேளையில், UPI மூலம் மேற்கொள்ளப்பட்ட சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ. 1.59 கோடியாக இருந்தது. அதாவது, சந்தேகிக்கப்படும் லஞ்சப் பணத்தில் 92% Paytm மற்றும் GPay போன்ற செயலிகளைப் பயன்படுத்தி UPI மூலமாகவே செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகரிக்கும் UPI லஞ்சம்: DVAC டேட்டா

  • UPI மூலம் லஞ்சம் பெறும் இந்தப்போக்கு தமிழகத்தில் தற்போது வெகுவாக அதிகரித்துள்ளது.
  • ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில், சந்தேகத்திற்கிடமான லஞ்சப் பரிவர்த்தனைகளில் (மொத்தம் ரூ. 1.18 கோடி) 77% டிஜிட்டல் தளங்கள் மூலமாகவே செலுத்தப்பட்டதை DVAC கண்டறிந்தது.
  • ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில், சந்தேகிக்கப்படும் லஞ்சப் பணத்தில் (மொத்தம் ரூ. 84.7 லட்சம்) 32% மட்டுமே UPI மூலம் செலுத்தப்பட்டிருந்தது.
  • இவ்வாறு, ஜூலை மாதத் தொடக்கத்தில் 32% ஆக இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனை பங்கு, செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்திற்குள் 92% ஆக உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க | Tamil News LIVE: உருவானது புயல்.. ஆசிய விளையாட்டு! அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு - இன்றைய அப்டேட்ஸ்

எங்கெல்லாம் லஞ்ச ஒழிப்பு துறை மூலம் சோதனைகள் நடத்தப்பட்டன?

செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, கடலூர், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், மதுரை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 36 இடங்களில் நடத்தப்பட்டன.

அதிகபட்ச டிஜிட்டல் பரிவர்த்தனைத் தொகைகள் பின்வருமாறு:

  • பெருங்குடியில் உள்ள சென்னை மாநகராட்சி மண்டலம் 14 அலுவலகத்தில் ரூ. 43,42,563
  • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் நகராட்சியில் ரூ. 19,66,500 மற்றும் 
  • நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி பேரூராட்சி அலுவலகத்தில் ரூ. 19,16,280.

கைப்பற்றப்பட்ட அதிகபட்ச ரொக்கத் தொகைகளிண் விவரம் பின்வருமாறு:

  • ராணிப்பேட்டையில் உள்ள அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் ரூ. 7,64,500 மற்றும் 
  • திருப்பூரில் உள்ள அவினாசி நகராட்சி அலுவலகத்தில் ரூ. 5,53,767.

அரசு அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டதாக DVAC தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | வங்கக்கடலில் உருவான புயல்.. விடாமல் கொட்டப்போகும் மழை.. வெதர்மேன் வார்னிங்

போலி வாகன நிறுத்துமிட ரசீது புத்தகங்கள் பறிமுதல்

ராமநாதபுரத்தில் உள்ள புதிய பேருந்து நிலைய இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில், 20 ரூபாய் மதிப்பிலான போலி ரசீதுகள் வழங்கப்படுவதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இரண்டு வாகன நிறுத்துமிடங்களில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு அதிரடிச் சோதனையில், தலா 100 ரசீதுகள் கொண்ட 59 போலி ரசீது புத்தகங்களும், கணக்கில் காட்டப்படாத 12,750 ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.

சிக்கிய ஆவணங்கள்

நேற்று நடத்தப்பட்ட இந்த திடீர் சோதனையில் ரொக்கப் பரிமாற்றம், செயலி மூலம் பண பரிமாற்றம் ஆகியவை தவிர நூற்றுக்கணகான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், சோதனை மேற்கொள்ளப்பட்ட அலுவலகங்களில் பணிபுரியும் பல அதிகாரிகள், உதவியாளர்கள், பொறியாளர்கள் ஆகியோரும் சிக்கியுள்ளதாகவும், அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | TN 07 CM 2031: திருமாவளவன் வந்த காரும்... வெடித்த சர்ச்சையும்! நடந்தது என்ன? Explained

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu