• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /கல்லூரி மாணவர்களுக்குப் பள்ளிக் கல்வி உதவித்தொகை: முக்கிய அறிவிப்பு

கல்லூரி மாணவர்களுக்குப் பள்ளிக் கல்வி உதவித்தொகை: முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Scholarship: கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் கட்டாயக் கல்வி உதவித்தொகை வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

Written ByKarthikeyan Sekar
Published: Sep 17, 2026, 03:20 PM IST|Updated: Sep 17, 2026, 03:25 PM IST
joinshare
கல்லூரி மாணவர்களுக்குப் பள்ளிக் கல்வி உதவித்தொகை: முக்கிய அறிவிப்பு
Image Credit: Tamil Nadu Scholarship

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ்நாடு அரசின் சமூக நீதி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை, முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இக்கடிதத்தில், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் SC, ST மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தொடர்பாக விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாணைகளின் பின்னணி விவரம்:

சுயநிதி கல்வி நிறுவனங்களில், சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் உட்பட இலவச இருக்கைகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ-மாணவியர்களுக்குத் திருப்பிச் செலுத்தப்படாத அனைத்துக் கட்டாயக் கட்டணங்களும் (Tuition, Games, Union, Library, Magazine, Medical, Registration, Enrollment, Examination and such other fee compulsory payable by the scholar to the institution or university/board) ஒன்றிய அரசின் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 2011-2012 ஆம் கல்வியாண்டு முதல் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

அதேபோல், 2011-2012 ஆம் ஆண்டு முதல் சுயநிதி கல்லூரி நிறுவனங்களில் அனைத்து விதமான படிப்புகளிலும் இலவச இருக்கைகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணாக்கர்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களை, அரசு நியமித்த சுயநிதிக் கல்லூரிகளுக்கான கட்டணக்குழு நிர்ணயித்த கல்வி கட்டணங்களை அவர்களது பெற்றோர்/பாதுகாவலரின் ஆண்டு வருமான உச்சவரம்பிற்கு உட்பட்டு ஒன்றிய அரசின் உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கிட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

தற்போதைய களச்சூழலும் மாணவர்களின் இன்னல்களும்:

தற்போதைய சூழலில் தமிழகத்தில் உள்ள சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கல்விச் செலவுகள் மற்றும் கல்வித் தேவைகளுக்கான கட்டணங்கள் கணிசமாக உயர்த்தப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஆதிதிராவிடர் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் சமூகங்களைச் சேர்ந்த மாணவ-மாணாக்கர்கள் தங்களது உயர் கல்வியைத் தொடர முடியாமல் பெரும் பொருளாதார இன்னல்களுக்கு ஆளாகி வருவது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.

அரசுக்கு வந்துள்ள முக்கிய கோரிக்கைகள்:

தற்போது அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவுகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு ஏற்கனவே அரசால் நிர்ணயம் செய்த கல்வி கட்டணங்கள் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

அதே நடைமுறையைப் பின்பற்றி, சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கும் அனைத்துக் கட்டாய மற்றும் திரும்பப் பெற இயலாத கட்டணங்களை (Compulsory Non-refundable fees) முழுமையாகக் கல்வி உதவித்தொகையாக (Scholarship) வழங்கிட வேண்டும் என ஆதிதிராவிடர் நல ஆணையர் மற்றும் இயக்குநரின் பரிந்துரைகளின் அடிப்படையில் பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு முன்வைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu