• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை - தமிழ்நாடு அரசின் லேட்டஸ்ட் அறிவிப்பு

ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை - தமிழ்நாடு அரசின் லேட்டஸ்ட் அறிவிப்பு

Tamil Nadu scholarship : IIT, IIM, NIT-யில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை. விண்ணப்பிப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written ByKarthikeyan Sekar
Published: Sep 11, 2026, 02:17 PM IST|Updated: Sep 11, 2026, 02:21 PM IST
joinshare
ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை - தமிழ்நாடு அரசின் லேட்டஸ்ட் அறிவிப்பு
Image Credit: Tamil Nadu scholarship

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு

சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு

2

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

3

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

4

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

5

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu scholarship : மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் (Central Universities) பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயின்று வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் (BC), மிகப்பிற்படுத்தப்பட்டோர் (MBC) மற்றும் சீர்மரபினர் (DNC) மாணவ, மாணவிகளுக்கு 2026-27-ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான புதிய மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் (Fresh and Renewal Applications) வரவேற்கப்படுவதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

உதவித்தொகை விவரம் மற்றும் வருமான வரம்பு:

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் செயல்பட்டு வரும் மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த தகுதியான மாணவ, மாணவிகளுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பயிலும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதிபெறும் மாணவர்களுக்குக் கற்பிப்பு கட்டணம் (Tuition Fee), சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம் மற்றும் இதர கட்டாய கட்டணங்கள் அல்லது ஆண்டிற்கு அதிகபட்சமாக ரூ.2.00 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.

விண்ணப்பப் படிவங்களைப் பெறும் இடங்கள்:

இத்திட்டத்திற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் பின்வரும் இடங்களில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்:

சென்னை எழிலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் (சென்னை-5)

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம் (சென்னை-5)

அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள்.

மாணவர்கள் அலைச்சலின்றி விண்ணப்பங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்ய www.bcw.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியிலும் வசதி செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் நடைமுறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மாணவர்கள் தாங்கள் பயிலும் அந்தந்த கல்வி நிறுவனங்களிலேயே முதலில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவன நிர்வாகம் மாணவர்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, Bonafide Certificate உடன் பரிந்துரைத்து உரிய நலத்துறை இயக்ககத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

முக்கிய நாட்கள் மற்றும் கடைசி தேதிகள்:

உதவித்தொகையைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் (Renewal Applications): 31.10.2026-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

புதிய விண்ணப்பங்கள் (Fresh Applications): 30.11.2026-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இரட்டைப் பருவ (Even Semester) கட்டண ரசீதுகள்: 15.01.2027-க்குள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

முக்கியக் அப்டேட் ; ஏற்கனவே மத்திய அரசு அல்லது மாநில அரசின் பிற கல்வி உதவித்தொகைத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தகுதியில்லை என தஞ்சை மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu