• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /டாஸ்மாக் பணியாளர்களுக்கு மெகா குட் நியூஸ்: ரூ.20,000 பண்டிகை முன்பணம் அறிவிப்பு! Explained

டாஸ்மாக் பணியாளர்களுக்கு மெகா குட் நியூஸ்: ரூ.20,000 பண்டிகை முன்பணம் அறிவிப்பு! Explained

TASMAC latest announcement : டாஸ்மாக் பணியாளர்களுக்குப் பண்டிகை முன்பணமாக 20 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுக் கொள்ளலாம் என நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

Written ByKarthikeyan Sekar
Published: Sep 20, 2026, 02:10 PM IST|Updated: Sep 20, 2026, 02:24 PM IST
joinshare
டாஸ்மாக் பணியாளர்களுக்கு மெகா குட் நியூஸ்: ரூ.20,000 பண்டிகை முன்பணம் அறிவிப்பு! Explained
Image Credit: TASMAC latest news

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

2

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

3

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

4

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

5

RR அணியில் இருந்து வெளியேறும் ஜெய்ஸ்வால்? இந்த அணிக்குதான் செல்கிறாராம்.. முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

TASMAC latest announcement : தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் சில்லறை விற்பனைக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை ரூ.20,000 பண்டிகை முன்பணமாக வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையை டாஸ்மாக் மேலாண் இயக்குநர் கே. நந்தகுமார் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு ஒப்புதல்

டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் நீண்ட நாட்களாகப் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் பண்டிகை முன்பணம் கோரி கோரிக்கைகளை முன்வைத்து வந்தன. இக்கோரிக்கைகளை பரிசீலித்த டாஸ்மாக் இயக்குநர் குழுமம், ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.20,000 வீதம் பண்டிகை முன்பணம் வழங்க தீர்மானம் இயற்றியது. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக இந்த அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்பணத் தொகை மற்றும் வட்டி சலுகை

டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் தகுதியான ஒவ்வொரு பணியாளருக்கும் ஆண்டிற்கு ஒரு முறை அதிகபட்சமாக ரூ.20,000 பண்டிகை முன்பணமாக அனுமதிக்கப்படும். மிக முக்கியமாக, இந்த முன்பணத் தொகைக்கு எந்தவித வட்டியும் கிடையாது (Interest-Free) என்பது பணியாளர்களுக்கு பெரும் நிதி உதவியாக அமையும்.

எந்தெந்தப் பண்டிகைகளுக்குப் பொருந்தும்?

பணியாளர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப முக்கிய மதப் பண்டிகைகளுக்கு இந்த முன்பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் அல்லது தமிழக அரசால் அனுமதிக்கப்பட்ட, அறிவிக்கப்பட்ட பிற முக்கிய பண்டிகைகளின்போதும் இந்த சலுகையைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு ஊழியருக்கு ஒரு நிதியாண்டில் ஒரு முறை மட்டுமே இந்த முன்பணம் வழங்கப்படும். ஏற்கெனவே பெற்ற முன்பணத் தொகை முழுமையாகப் பிடித்தம் செய்யப்பட்ட பிறகே அடுத்த முன்பணம் அனுமதிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் பணம் வழங்கும் வழிமுறை

விண்ணப்பம்: முன்பணம் பெற விரும்பும் தகுதியுள்ள பணியாளர்கள், தாங்கள் விரும்பும் பண்டிகை வரும் மாதத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே மாவட்ட மேலாளருக்கு எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிக்க வேண்டும்.

வழங்கும் முறை: விண்ணப்பித்த பண்டிகைக்கு முந்தைய மாத ஊதியத்துடன் இந்த முன்பணத் தொகை சேர்த்து வழங்கப்படும். பணியாளர் எவ்வித குறிப்பிட்ட விருப்பமும் தெரிவிக்காத பட்சத்தில், பொங்கல் பண்டிகைக்காக டிசம்பர் மாத ஊதியத்துடன் இந்த முன்பணம் வழங்கப்படும்.

நேரடி வங்கிக் கணக்கு: முன்பணத் தொகை எக்காரணத்தைக் கொண்டும் ரொக்கமாக வழங்கப்படாது, பணியாளர்களின் ஊதியம் வரவு வைக்கப்படும் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக செலுத்தப்படும்.

திருப்பிச் செலுத்தும் முறை

வழங்கப்பட்ட ரூ.20,000 முன்பணத் தொகை, அடுத்த 10 மாதங்களில் சம தவணைகளாக, அதாவது மாதம் ரூ.2,000 வீதம் பணியாளரின் மாத ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும். முன்பணம் வழங்கப்பட்ட மாதத்திற்கு அடுத்த மாத ஊதியத்தில் இருந்து இந்த பிடித்தம் தொடங்கும். உதாரணமாக, டிசம்பர் மாத ஊதியத்துடன் முன்பணம் பெற்றால், ஜனவரியில் தொடங்கி அக்டோபர் மாதத்திற்குள் பிடித்தம் நிறைவடையும். எக்காரணத்தைக் கொண்டும் இத்தவணை ஒத்திவைக்கப்படவோ அல்லது தள்ளுபடி செய்யப்படவோ மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு மற்றும் நடைமுறைப்படுத்துதல்

ஒவ்வொரு மாவட்ட மேலாளரும் தங்கள் மாவட்டத்தில் உள்ள பணியாளர்களின் முன்பணம், வழங்கப்பட்ட தேதி, பிடித்தம் செய்யப்பட்ட விவரங்கள் மற்றும் நிலுவைத் தொகை ஆகியவற்றை முறையாகப் பதிவு செய்ய வேண்டும். இச்சேவைகளை இணைய வழியிலேயே (Online End-to-End Module) நிர்வகிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். அனைத்து மண்டல முதுநிலை மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் இந்த வழிகாட்டுதல்களைத் தவறாது அமல்படுத்த வேண்டும் என்று சுற்றறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu