• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு அன்றே மோதிரம்!

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு அன்றே மோதிரம்!

Thaimaman Thanga Mothiram Scheme : தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தில் இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு அன்றே மோதிரம் வழங்க ஏற்பாடு செய்துள்ள தமிழ்நாடு அரசு, விடுபட்டோருக்கு டோக்கன் மூலம் விநியோகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

Written ByKarthikeyan Sekar
Published: Sep 29, 2026, 11:25 AM IST|Updated: Sep 29, 2026, 11:33 AM IST
joinshare
தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு அன்றே மோதிரம்!
Image Credit: Thaimaman Thanga Mothiram Scheme

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Thaimaman Thanga Mothiram Scheme : தமிழக அரசு மருத்துவமனைகளில் நிகழும் பிரசவங்களை அதிகரிக்கவும், தாய்மையின் பெருமையை போற்றும் வகையிலும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கும் திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், விடுபட்ட பழைய பயனாளிகளுக்கு டோக்கன் முறையில் மோதிரம் வழங்கவும், இன்று முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு பிரசவித்த அன்றே நேரடியாக தங்க மோதிரம் வழங்கவும் விரிவான புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

இன்று முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு அன்றே மோதிரம்:

புதிய நடைமுறையின்படி, அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் பிறக்கும் குழந்தைகளுக்குப் பிரசவமான அன்றைய தினமே உடனடியாக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்க மருத்துவமனை நிர்வாகங்கள் மூலம் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தாய்மார்கள் காத்திருக்க வேண்டிய அவசியமின்றி, குழந்தை பிறந்த நாளிலேயே அரசின் இந்த அன்புப் பரிசைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விடுபட்ட பயனாளிகளுக்கு டோக்கன் மூலம் விநியோகம்:

திட்டம் தொடங்கப்பட்ட முந்தைய தேதிகளில் (22.06.2026 முதல்) அரசு மருத்துவமனைகளில் பிரசவித்த தகுதியுள்ள பேக்லாக் (Backlog) பயனாளிகளுக்குத் தங்க மோதிரம் வழங்குவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.  

கூட்ட நெரிசலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு, பயனாளிகளுக்குத் தனித்தனியாக டோக்கன்கள் (அழைப்பிதழ்கள்) வழங்கப்பட்டு வருகின்றன. அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் பயனாளிகள் நேரில் சென்று தங்களது தங்க மோதிரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். கிராம சுகாதார செவிலியர்கள் மூலமாக இந்த அழைப்பு டோக்கன்கள் பயனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக வழங்கப்பட்டு வருகின்றன.  

ஒரு மையத்தில் நாள் ஒன்றுக்கு 50 பேருக்கு மட்டுமே விநியோகம்:

மோதிரம் வழங்கும் இடங்களில் பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்ல ஏதுவாக, காலை 10:00 மணி மற்றும் மதியம் 1:00 மணி என இரு வேளைகளில் விநியோகம் நடைபெறுகிறது. நெரிசலைத் தவிர்க்கும் வகையில், ஒரு விநியோக மையத்தில்:  

காலை வேளையில்: 25 நபர்களுக்கு மட்டும்   
மதிய வேளையில்: 25 நபர்களுக்கு மட்டும்  

என நாள் ஒன்றுக்கு மொத்தம் 50 பயனாளிகளுக்கு மட்டுமே டோக்கன் அடிப்படையில் மோதிரம் வழங்கப்படுகிறது. மேலும், பயனாளிகள் மையங்களுக்கு எளிதாக வந்து செல்வதற்காக அந்தந்தப் பகுதிகளில் இருந்து பிரத்யேக வாகன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.  

தேவையான ஆவணங்கள்:

இத்திட்டத்தின் பலனைப் பெற தாய்மார்கள் தமிழ்நாடு குடியிருப்புக்கான ஏதேனும் ஓர் அடையாளச் சான்றை வைத்திருக்க வேண்டும்:   
e-KYC பதிவு செய்யப்பட்ட ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடியிருப்புச் சான்றிதழ், தொழிலாளர் நல வாரியம் வழங்கிய அடையாள அட்டை , அஞ்சல் துறை மூலம் வழங்கப்பட்ட முகவரிச் சான்றிதழ்  

மேற்கண்ட தமிழ்நாடு அரசு அங்கீகரித்த 6 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து தாய்மார்கள் தங்களுக்குரிய தங்க மோதிரத்தை எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu