• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /ஸ்டெர்லைட் சம்பவம்: மஞ்சள் சட்டை, கையில் துப்பாக்கியுடன் இருந்த காவலர் திடீர் மரணம்!

ஸ்டெர்லைட் சம்பவம்: மஞ்சள் சட்டை, கையில் துப்பாக்கியுடன் இருந்த காவலர் திடீர் மரணம்!

Thoothukudi Sterlite Protest: தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கியுடன் இருந்த காவலர் திடீரென மரணடைந்துள்ளார். திடீர் உடல்நலக்குறைவால் ராஜா (46) என்பவர் காலமானார்.

Written ByUmabarkavi K
Published: Sep 30, 2026, 12:55 PM IST|Updated: Sep 30, 2026, 01:06 PM IST
joinshare
ஸ்டெர்லைட் சம்பவம்: மஞ்சள் சட்டை, கையில் துப்பாக்கியுடன் இருந்த காவலர் திடீர் மரணம்!

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Thoothukudi Sterlite Protest:  தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் ஆ.ராஜா, உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டின்போது வாகனத்தின் மீது ஏறிச் சுட்ட வீடியோ மூலம் இவர் சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டவர். இவரது உடல் இன்று தூத்துக்குடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடியில் ஸ்டர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி சென்றனர். போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின்போது, போலீசார் பொதுமக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கி எடுத்து. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இப்படியயான நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஆயுதப்படை வாகனத்தின் மீது துப்பாக்கியுடன் பொதுமக்களை நோக்கி சுடுவது போன்று நின்றுக் கொண்டிருந்த காவலர் ராஜா உடல்நலக்குறைவால்  காலமானார்.

மேலும் படிக்க: 6 மாதமாக ரேஷன் பொருள் வாங்கவில்லையா? என்ன செய்யலாம்? அக்.1 முதல் முடக்கம்

துப்பாக்கியுடன் இருந்த காவலர்  திடீர் மரணம்

அதாவது, ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, ஆயுதப்படை வாகனத்தில் ஏறி நின்று, மஞ்சள் நிற சட்டை அணிந்த காவர் பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காவலரின் புகைப்படம் இன்று வரை பேசப்பட்டு வருகிறது. 

பின்னர், துப்பாக்கிச் சூடு தொடர்பாக தமிழக அரசின் அருணா ஜெகதீசன் ஆணையம் நடத்திய விசாரணையில் அந்த புகைப்படங்கள் முக்கிய ஆதாரமாக மாறியது.  இந்த நிலையில், இந்த காவலர் திடீர் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் ஆ.ராஜா. இவர் உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டின்போது வாகனத்தின் மீது ஏறிச் சுட்ட வீடியோ மூலம் இவர் சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டவர். இவரது உடலுக்கு தூத்துக்குடியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

யார் இந்த காவலர் ஆ.ராஜா?

தூத்துக்குடி மாவட்டத்தல் 2003ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்தவர் ஆ.ராஜா. பணியில் சேரும்போதே தலைமைக் காவலராக பொறுப்பேற்றார். 20 ஆண்டுகளுக்கு மேலாகவும் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டும். இவர் அண்மையில் சட்ட ஒழுங்கு பிரிவில் குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்திற்கு பணிமாறுதல் செய்யப்பட்டு இருந்தார். ஆனால், இவர் புதிய காவல் நிலையத்தில் பணிக்கு சேரவில்லை. இவருக்கு தீவிரமாக சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவரால், பணியில் சேர முடியவில்லை. மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

மேலும் படிக்க: தாராபுரம் இடைத்தேர்தல்: சூடுபிடிக்கும் களம்... முதல்வர் விஜய் இன்று பரப்புரை, ஏற்பாடுகள் தீவிரம்

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu