• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /மாத்திரையா? மோதிரமா? குழந்தைகளின் உயிரில் விளையாடும் தவெக.. அரசு மருத்துவமனையில் என்ன நடக்கிறது?

மாத்திரையா? மோதிரமா? குழந்தைகளின் உயிரில் விளையாடும் தவெக.. அரசு மருத்துவமனையில் என்ன நடக்கிறது?

TN Govt Gold Ring Scheme Explained: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் குறைமாதத்தில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காக்கப் பயன்படுத்தப்படும் சர்ஃபாக்டன்ட் (Surfactant) மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நேரத்தில் தங்க மோதிரம் திட்டம் தேவையா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

Written ByUmabarkavi K
Published: Sep 23, 2026, 04:47 PM IST|Updated: Sep 23, 2026, 05:04 PM IST
joinshare
மாத்திரையா? மோதிரமா? குழந்தைகளின் உயிரில் விளையாடும் தவெக.. அரசு மருத்துவமனையில் என்ன நடக்கிறது?
Image Credit: Image Source: Chatgpt AI

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

TN Govt Gold Ring Scheme: தமிழகத்தில் தவெக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வர் விஜய் தான் வாக்குறுதியாக கொடுத்த திட்டங்களில் ஒன்றாக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் உள்ளது. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் மூலம் ஒரு கிராம் மோதிரம் குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. 2026 ஜூன் 22ஆம் தேதிக்கு பிறகு அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.   

இத்திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.755 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தாய்மாமன் தங்க மோதிரம் தங்க மோதிரம் திட்டம் செப்டம்பர் 28ஆம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில், அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதனால், எதிர்க்கட்சியினர் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

குழந்தைகளின் உயிரை காக்கும் மருந்துக்கு தட்டுப்பாடு

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காக்கும் மருந்துகளுக்கு கடந்த சில மாதங்களாகக் கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிகிறது. குறைமாதத்தில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காக்கப் பயன்படுத்தப்படும் முக்கியமான சர்ஃபாக்டன்ட் (Surfactant) மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

மேலும் படிக்க: Explainer: ஆயுர்வேதம் முதல் ஹோமியோபதி வரை.... AYUSH சிகிச்சைகளுக்கு மருத்துவக் காப்பீடு கிடைக்குமா?

சிகிச்சை தேவைப்படும் குறைமாதக் குழந்தைகளின் நுரையீரல்களை விரிவடையச் செய்வதற்கு சர்பாக்டன்ட் மருந்துகள் அவசியமானவை என்று மருத்துவர்கள் கூறினர். ஏனென்றால்,  8 மாதங்களிலேயே முன்கூட்டியே பிறக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல் வளர்ச்சி இருக்காது. 

நுரையீரல் ஒட்டிக்கொள்ளாமல் விரிவடைய 'சர்ஃபாக்டன்ட்' என்ற திரவம் அவசியம். செயற்கை சுவாசக் குழாய் வழியாக 'சர்ஃபாக்டன்ட்' மருந்தை நேரடியாக குழந்தையின் நுரையீரலுக்கு செலுத்துவார்கள். அப்போது தான் குழந்தையால் சுவாசிக்கவே முடியும். இந்த மருந்து சரியாக நேரத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கவில்லை என்றால், ஆக்சிஜன் அளவு குறைந்து, குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மருத்துவமனைகளில் என்ன பிரச்னை?

சென்னை, தேனி, தருமபுரி, திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கரூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளின் உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மூன்று முதல் நான்கு மாதங்கள் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக கூறுகின்றனர். 

சில மருத்துவமனைகளில் மருந்துகளின் வரத்து குறைந்ததாலும், குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் குழந்தைகளைக் காப்பாற்ற சில நேரங்களில் மருத்துவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து மருந்துகளை கடன் வாங்கி பயன்படுத்துவதாக தெரிகிறது.  சில நேரங்களில் எஸ்என்சியு நிதியை பயன்படுத்தி அவற்றை மருத்துவர்கள் தனியாக வாங்குவதாகவும் தெரிகிறது.

மேலும் படிக்க: TN 07 CM 2031: திருமாவளவன் வந்த காரும்... வெடித்த சர்ச்சையும்! நடந்தது என்ன? Explained

சுகாதாரத்துறை விளக்கம்

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறுகையில், "தமிழக அரசு, பிறந்த குழந்தைகளின் நலனுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தேவையான சர்ஃபாக்டன்ட் (Surfactant) மருந்துகளுக்குத் தட்டுப்பாடு இருப்பதாகச் செய்தியில் கூறப்பட்டிருப்பது உண்மைக்குப் புறம்பானது.

 

Government of Tamil Nadu — Health and Family Welfare Department's Rejoinder to the news report "Govt. hospitals short on critical medicines for pre-term babies" (The Hindu, 22.09.2026)

The Government of Tamil Nadu accords the highest priority to newborn care, and the report's… pic.twitter.com/2CDBPqCp1r

— Arunraaj TVK (@arunraajkg) September 22, 2026

 

மாநிலம் முழுவதும் உள்ள சிறப்புப் பிறந்த குழந்தைகள் பராமரிப்புப் பிரிவுகளில் (SNCU) அனுமதிக்கப்படும் ஒவ்வொரு குறைப்பிரசவக் குழந்தைக்கும் மருத்துவ வழிகாட்டுதல்களின்படி முழுமையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் சுவாச உதவி, மருத்துவத் தேவைக்கேற்ப சர்ஃபாக்டன்ட் மருந்து சிகிச்சை, கஃபீன் சிட்ரேட் சிகிச்சை, உடல் வெப்பநிலையைப் பராமரித்தல் மற்றும் கங்காரு தாய் பராமரிப்பு ஆகியவை அடங்கும். குழந்தைகள் நல மருத்துவர்களைக் கொண்ட பயிற்சி பெற்ற குழுவினர் 24 மணி நேரமும் இந்தச் சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர்.

சர்ஃபாக்டன்ட் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விநியோகத்தில் தற்காலிகத் தட்டுப்பாடு ஏற்பட்டால், அதை உடனடியாகச் சமாளிக்க தேவையான மருந்துகளை உள்ளூரிலேயே உடனடியாகக் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட (CMCHIS) நிதி மற்றும் SNCU செயல்பாட்டுச் செலவுகளுக்கான நிதி மூலம் சர்ஃபாக்டன்ட் மருந்துகளைத் தாமதமின்றிக் கொள்முதல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்கள் மற்றும் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர்களுக்கும் இதுதொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) மூலம் மருந்துகள் வழங்கப்படுவது, மருத்துவமனைகளில் உள்ள மருந்து இருப்பை அதிகரிப்பதற்கான கூடுதல் ஏற்பாடுதான். தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) மூலம் தொடர்ந்து மருந்துகள் வழங்கப்பட்டு, மருத்துவமனைகளின் இருப்பு அதிகரிக்கப்படுகிறது. . எனவே, சர்ஃபாக்டன்ட் மருந்துகள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்வதற்கு நிதி தொடர்பான எந்தத் தடையும் இல்லை” என்று கூறினார்.

மேலும் படிக்க: Explained: உண்ணி காய்ச்சல் என்றால் என்ன? சென்னை மாணவர் பலி.. அறிகுறிகளே கவனிங்க!

மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை

தங்க மோதிரம் திட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பிரசவங்கள் அதிகரிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் ஏற்கெனவே மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களுக்குப் பற்றாக்குறை நிலவுகிறது என்றும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அதற்கேற்ப படுக்கைகள், அறுவை சிகிச்சை அரங்குகள், அவசர சிகிச்சை வசதிகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இல்லையெனில், மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து, சிகிச்சையின் தரம் மேலும் பாதிக்கப்படலாம் கூறுகின்றனர். தங்க மோதிரம் வழங்குவதற்காக அரசு பல நூறு கோடி ரூபாய் செலவிடத் அரசு தயாராக இருக்கும்போது, அதே நேரத்தில் மகப்பேறு மருத்துவர்கள்,  மயக்கவியல் நிபுணர்கள், குழந்தைகள் நல மருத்துவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

மருத்துவமனைகளில் மருந்துகள், ரத்தம், மருத்துவ உபகரணங்கள் மற்றும் நோயாளிகளின் பதிவுகளைப் பாதுகாப்பாகச் சேமிப்பதற்கான வசதிகள் உள்ளன. ஆனால், ஆயிரக்கணக்கான தங்க நகைகளைப் பெற்றுக்கொள்வது, பாதுகாப்பது, விநியோகிப்பது மற்றும் அவற்றுக்கான கணக்குகளைச் சரிபார்ப்பது போன்ற பணிகளுக்காக மருத்துவமனைகளும் அமைக்கப்படவில்லை, பணியாளர்களும் போதுமான அளவில் இல்லை என தெரிகிறது.

மோதிரமா? மாத்திரையா?

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் உயிரை காப்பாற்றும் மருந்துக்கு தட்டுப்பாடு, மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், குழந்தைகளுக்கு தங்க மோதிரம் தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது. வெறும் விளம்பரத்திற்காக தங்க மோதிரத்தை தவெக வழங்குகிறது என எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டி உள்ளனர். 

 

சென்னை, தேனி, தருமபுரி, திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கரூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளின் உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

பிறந்த பச்சிளம்…

— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 23, 2026

 

இதுதொடர்பாக எம்பி கனிமொழி கூறுகையில், "பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு மிகவும் அடிப்படைத் தேவையான உயிர்காக்கும் மருந்துகளை வழங்க முடியாமல் என்ன செய்துக்கொண்டிருக்கிறது சுகாதாரத்துறை?

இளம்பிஞ்சுகளின் விரலில் மோதிரம் மாட்டி விளம்பரம் தேடத் துடிக்கும் அக்கறையைக் குழந்தைகளின் உயிர்களைக் காப்பதில் கொஞ்சமாவது காட்ட வேண்டாமா? குழந்தைகளுக்கான மருந்துகள் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை தமிழ்நாடு அரசு உடனே உறுதி செய்ய வேண்டும்" என்றார்.  

இதுகுறித்து மருத்துவர் எழிலன் கூறுகையில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தால் குழந்தைகளுக்கான அடிப்படை மருந்துகள் தட்டுபாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மோதிரங்களை எப்படி பாதுகாப்பீங்க? தொலைநோக்குப் பார்வையே இல்லாமல் கொண்டு வரப்படும் திட்டம் இது. மருத்துவமனைகளில் இருக்கும் பிரச்னைகளை சரி செய்வது முதலில் முக்கியம்" என்றார்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer