• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /Explained : அமைச்சர் கீர்த்தனா லண்டனுக்கு போகாதது ஏன்? தவெக சொன்ன காரணம்..நம்பாத திமுக

Explained : அமைச்சர் கீர்த்தனா லண்டனுக்கு போகாதது ஏன்? தவெக சொன்ன காரணம்..நம்பாத திமுக

தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, ஏன் முதல்வருடன் லண்டன் செல்லவில்லை என்று கேள்விகள் எழுந்த நிலையில், அதற்கு எம்.எல்.ஏ கனிமொழியின் ட்வீட் பதிலாக வந்துள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Sep 22, 2026, 03:39 PM IST|Updated: Sep 22, 2026, 05:46 PM IST
joinshare
Explained  : அமைச்சர் கீர்த்தனா லண்டனுக்கு போகாதது ஏன்? தவெக சொன்ன காரணம்..நம்பாத திமுக
Image Credit: Keerthana London Color Bone Surgery | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ்நாட்டின், இளம் அமைச்சராகவும், தவெகவின் 4 பெண் அமைச்சர்களில் ஒருவராகவும் இருக்கிறார், கீர்த்தனா. தொழில்துறை அமைச்சராக இருக்கும் இவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது என்பது இப்போதுதான் தெரிந்துள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

லண்டனுக்கு செல்லாத அமைச்சர்:

சமீபத்தில் வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு, முதல்வர் விஜய் லண்டன் சென்றார். அப்போது அவருடன் விளையாட்டு மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உடன் சென்றார். அப்போது, அமைச்சர் கீர்த்தனா செல்ல வேண்டிய இடத்தில், ஏன் ஆதவ் அர்ஜுனா சென்றார் என்கிற கேள்வி எழுந்தது. நியாயப்பட்டி, தொழில் முதலீடுகளை ஈர்க்கும் மாநாட்டில் கீர்த்தனா தானே இருக்க வேண்டும், அவர் இருக்க வேண்டிய இடத்தில் விளையாட்டு மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சருக்கு என்ன வேலை? என்று அனைவரும் வினவினர். இது குறித்து ஆதவ் அர்ஜுனாவிடம் கேள்வி கேட்டபோது அவர் அமைச்சர் கீர்த்தனாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் லண்டனுக்கு வரமுடியவில்லை என்று கூறினார். அதிலிருந்து அனைவரும் அமைச்சர் கீர்த்தனாவிற்கு என்ன ஆனது என்பது குறித்து தேடி வந்தனர்.

எதிர்கட்சிகள் விமர்சனம்..

அமைச்சர் கீர்த்தனாவிற்கு என்ன உடல்நிலை சரியில்லை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது அவர் அது குறித்து வெளியில் சொல்ல முடியாது என்று கூறினார். இதையடுத்து, அமைச்சர் கீர்த்தனா ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருப்பது போன்ற போட்டாேக்கள் இணையத்தில் வைரலானது. இதை பலரும் பகிர்ந்து, “அமைச்சர் கீர்த்தனா மாதவிடாய் காரணமாக லண்டன் செல்லவில்லையா?” என்று கேள்வி கேட்டு வந்தனர். இதன் பிறகுதான் பிரச்சனையே வெடித்தது. இணையத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொன்றை சொல்ல, அதற்கு பதிலாக தவெக எம்.எல்.ஏ கனிமொழியின் ட்வீட் வெளியானது.

மேலும் படிக்க | சென்னைக்கு வரும் ஸ்டார்பக்ஸ், கையெழுத்தான MoU: 'தமிழகத்தை தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி' முதல்வர் விஜய் பெருமிதம்

கனிமொழி வெளியிட்ட ட்வீட்!

கனிமொழி தன்னுடைய ட்வீட்டில், அமைச்சர் கீர்த்தனாவிற்கு காலர் போன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், மருத்துவர்கள் அவரை 20 நாட்கள் ரெஸ்ட் எடுக்க சொல்லியும் அவர் 4 நாட்களிலேயே பணிகளுக்கு திரும்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“ஒரு பெண்ணாக, நான் இதைச் சொல்ல விரும்புகிறேன்; ஏனெனில் இதை நான் நேரில் கண்டேன்.

As a woman, I want to say this because I witnessed it myself.

I met my thangai Minister Keerthana at Kamatchi Hospital after her collarbone surgery. Doctors had advised around 20 days of rest, but within 4 days she was back at work because of her commitment to the state. Even… pic.twitter.com/hQ9DpOERvL

— Kanimozhi Santhosh (@Kanimozhi_tvk) September 22, 2026

எனது தங்கை, அமைச்சர் கீர்த்தனாவை அவரது கழுத்து எலும்பு (collarbone) அறுவை சிகிச்சைக்குப் பிறகு காமாட்சி மருத்துவமனையில் சந்தித்தேன். மருத்துவர்கள் சுமார் 20 நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியிருந்தனர்; ஆனால் மாநிலத்தின் மீதான தனது அர்ப்பணிப்பு உணர்வால், வெறும் 4 நாட்களிலேயே அவர் மீண்டும் பணிக்குத் திரும்பினார். மருத்துவமனைப் படுக்கையில் இருந்தபோதும், முதலமைச்சரின் லண்டன் பயணத்திற்கான ஏற்பாடுகளை அவர் ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் அவர் கேட்ட முதல் கேள்வி தனது வலி அல்லது மருந்துகளைப் பற்றியது அல்ல; மாறாக, நிறுவனங்களுடனான சந்திப்புகள் மற்றும் ஏற்பாடுகள் அனைத்தும் சரியான நேரத்தில் நடக்கின்றனவா என்பதுதான். நான் அவரிடம் ஓய்வெடுக்குமாறு கூறினேன், ஆனால் அவர் கேட்கவில்லை.

என்னை மிகவும் பாதித்த விஷயம் இதுதான்: அமைச்சர் ஆதவ் அவர்கள், அவர் சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறியபோது, ​​எதிர்க்கட்சித் தரப்பினர் அதற்கான காரணம் என்ன, உடல்நிலை தேறி வருகிறாரா அல்லது அவர் உண்மையில் எத்தகைய சூழலைக் கடந்து வருகிறார் என்பது பற்றிச் சிந்திக்கவோ விசாரிக்கவோ இல்லை. அவர்களின் சிந்தனை உடனடியாக ஒரு காரணத்தை நோக்கித்தான் சென்றது: அது மாதவிடாய். ஒரு பெண் பணியில் இல்லாததற்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்க முடியும் என்று நினைக்கும் அந்தத் துரித எதிர்வினை, அந்தப் பெண்ணைப் பற்றியது அல்ல; அது உங்களின் பிற்போக்குத்தனமான மனநிலையைத்தான் வெளிப்படுத்துகிறது. பெண்களை அவர்களின் மாதவிடாய் சுழற்சியைக் கொண்டு வரையறுக்க முடியாது. நாங்கள் தலைவர்கள், தொழில்முறை நிபுணர்கள், தாய்மார்கள் மற்றும் மகள்கள்; நோய், காயம் மற்றும் கடமை ஆகிய அனைத்தையும் ஒரே நேரத்தில் சுமந்துகொண்டு தொடர்ந்து செயல்படுபவர்கள். ஒரு பெண்ணின் பணியில் எந்தக் குறையையும் காண முடியாதபோது, ​​அதைக் குறை கூற முடியாமல் அவளது உடலை மட்டும் குறிவைப்பது ஒரு பழைய பழக்கம்; அதையேதான் இப்போதும் செய்கிறார்கள்.

நான்கு நாட்களுக்குப் பிறகு, உடல்நிலை தேறும் நிலையிலும், வலி ​​நிவாரணிகளை உட்கொண்டபடியும், கட்டு போட்ட நிலையிலும், அவர் இடைவேளையின்றி அடுத்தடுத்து நிறுவனங்களைச் சந்திப்பதிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoU) கையெழுத்திடுவதிலும் ஈடுபட்டார்.

இந்த்ப் பிற்போக்குத்தனமான மனநிலை மாற வேண்டும். கடினமான சூழலிலும் தொடர்ந்து தலைமை தாங்கும் பெண்களை நாம் கொண்டாட வேண்டுமே தவிர, அவர்களின் மாதவிடாய் சுழற்சி பற்றி விவாதிக்கக் கூடாது.

பெண்கள் இதைவிடச் சிறந்ததையே பெறத் தகுதியானவர்கள். தமிழ்நாடும் இதைவிடச் சிறந்ததையே பெறத் தகுதியானது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “மன்னித்து விடுங்கள் கீர்த்தனா, இதை நீங்கள் ப்ரைவேட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தீர்கள். ஆனால், அதை பதிவிட வேண்டியதாக போயிற்று” என்று கூறினார்.

நம்பாத திமுக:

I don’t think collarbone surgery is something that cannot be disclosed. Yesterday, when the press asked about it, Minister @AadhavArjuna could have simply clarified that the Industries Minister had undergone such a procedure.

So why was it said that the Minister Keerthana’s… https://t.co/47Ji9VtXCS

— Vaishnavi (@vaishnavi_cbe) September 22, 2026

 தவெக தரப்பில் இருந்து, காலர் போன் அறுவை சிகிச்சை காரணமாகத்தான் அமைச்சர் கீர்த்தனா லண்டன் செல்லவில்லை  என்று கூறினாலும், திமுக தரப்பில் இருக்கும் சிலர் அதை நம்ப தயாராக இல்லை. குறிப்பாக தவெகவில் இருந்து திமுகவிற்கு தாவிய வைஷ்ணவி, ”4 நாட்கள்” என்பது குறித்த விளக்கம் ஏன்? என்று கேட்டிருந்தார். மேலும், காலர்போன் அறுவை சிகிச்சை என்பதை வெளியில் சொல்லக்கூடாது என்று ஒன்றுமில்லையே என கூறிய அவர், அதை ஏன் ஆதவ் அர்ஜுனா மறைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், தவெகவை சேர்ந்தவர்கள் புதிதாக ஒரு கதையை உருவாக்கி, மக்களை முட்டாள் ஆக்குகின்றனரா? என்றும் கேட்டுள்ளார்.

மேலும் படிக்க | சட்டவிரோத குவாரிகளுக்கு செக்: தமிழகத்தில் கனிம வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி கட்டாயம்!

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer