• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /சிக்கனமாக முடித்த தவெக.. தேர்தல் செலவில் அம்பானியாக மாறிய திமுக... இத்தனை கோடியா?

சிக்கனமாக முடித்த தவெக.. தேர்தல் செலவில் அம்பானியாக மாறிய திமுக... இத்தனை கோடியா?

2026 Assembly Poll Expenses: 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்காக மொத்தம் ரூ.19.8 கோடியை செலவிட்டதாகத் தேர்தல் ஆணையத்திடம் தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது. தெரிவித்தது. இதில் திமுக ரூ.197 கோடியும், அதிமுக ரூ.112 கோடியும் செலவிட்டதாக கூறியுள்ளது.

Written ByUmabarkavi K
Published: Sep 26, 2026, 01:55 PM IST|Updated: Sep 26, 2026, 02:38 PM IST
joinshare
சிக்கனமாக முடித்த தவெக.. தேர்தல் செலவில் அம்பானியாக மாறிய திமுக... இத்தனை கோடியா?

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

2026 Assembly Poll Expenses: தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு ஏப்ரல் மாதம்  தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல்  23ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாதக என நான்கு முனைப்போட்டி இருந்தது. இந்த தேர்தலில் தவெக மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. 60 ஆண்டுகாலம் மாநிலத்தை ஆட்சி செய்த இருபெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி, தவெக ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது. 

இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வரவு செலவு கணக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்கு கட்சிகளும் தங்கள் தேர்தல் செலவுகளை தேர்தல் ஆணையத்திடம் அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளனர்.

தவெக தேர்தல் செலவு

இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட விரிவான செலவின அறிக்கைகளின்படி, தேர்தல் செலவாக தமிழக வெற்றிக் கழகம் ரூ.19.8 கோடி செலவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல்வர் விஜய்யின் விமான பயணத்திறக்காக மட்டும் ரூ.3.5 கோடியும், அவர் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளுக்கு ரூ.40 லட்சம் செலவிடப்பட்டதாக தவெக குறிப்பிட்டுள்ளது.

தவெக பொருளாளர் பி.வெங்கடரமணன் கையெழுத்திட்ட செலவின் அறிக்கையின்படி, தேர்தல் பிரச்சாரத்திற்காக ரூ.19.4 கோடி செலவிடப்பட்டதாக காட்டப்பட்டுள்ளது. இதில் வேட்பாளர்களுக்காக எந்த செலவும் செய்யவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க: தலைமுடி வெட்டியது ஒரு பிரச்னையா? எனக்கு மட்டும் ஏன் இப்படி? வேதனையில் மேயர் பிரியா

இதனால், வேட்பாளர்களே அவர்களது செலவை ஏற்றுள்ளனர்.  தவெக  தேர்தல் நேரத்தில் விளம்பரத்திற்க ரூ.34 கோடியும், ரோடு, பொதுக் கூட்டங்களுக்கு ரூ.2.06 கோடியும்,  பிரச்சார பொருட்களுக்காக ரூ.40.54 லட்சம், பிரச்சாரத்திற்காக பிற செலவுகள் ரூ.7.04 கோடியும் செலவிட்டதாக தவெக தெரிவித்துள்ளது.

மார்ச் 14 முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை TAI Jets, Chipsan Aviation, Fly High Global ஆகிய 4 விமான நிறுவனங்களுக்கு ரூ.3.54 கோடி வழங்கியுள்ளதாக தவெக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மற்ற தலைவர்களுக்கான விமான செலவுகளை குறிப்பிடபடவில்லை.  மேலும், ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன் ஸ்ட்ராட்ஜிக் கன்சல்டிங் நிறுவனத்திற்கு விளம்பரத்திற்காக ரூ.1.79 கோடி செலவிட்டதாக தெரிவித்துள்ளது.

திமுக, அதிமுக தேர்தல் செலவுகள்

தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க அறிக்கையின்படி, மார்ச் 16 முதல்  ம 6ஆம் தேதி வரை  பிரச்சாரத்திற்காக திமுக ரூ.149.90 கோடியும், வேட்பாளர்கள் செலவுக்கான ரூ.47.95 கோடியும், வேட்பாளர்களுக்கு மொத்தமாக ரூ.45.75 கோடி வழங்கப்பட்டதாக தெரிவிததுள்ளது.  இந்த பணம் பல வேட்பாளர்களுககு தலா ரூ.25 லட்சமும், சில வேட்பாளர்களுக்கு ரூ.15 லட்சமும் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. 

பென் நிறுவனத்திற்கு மட்டுமே ரூ.65.28 கோடி வழங்கப்பட்டதாக திமுக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தேர்தல் காலத்தின் தொடக்கத்தில் திமுக  சுமார் ரூ. 365.14 கோடி இருப்பு வைத்திருந்ததாகவும், தேர்தல் காலத்தின் முடிவில் ரூ.319.40 கோடி இருப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. மொத்தமாக திமுக தேர்தலுக்காக ரூ.197.85 கோடி செலவு செய்துள்ளது.

மார்ச் 15 அன்று தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து மே 6 அன்று தேர்தல் முடிவடைந்தது வரையிலான காலகட்டத்தில், அதிமுக மாநிலப் பிரிவு ரூ.87.41 கோடியைப் பெற்றதாக அந்த அறிக்கை கூறுகிறது. தேர்தல் காலத்தின் தொடக்கத்தில், கரூர் வைஸ்யா வங்கியில் உள்ள ரூ.271 கோடி நிலையான வைப்புத்தொகை உட்பட, மாநிலப் பிரிவு ரூ.313.47 கோடி நிதியைக் கொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ளது. மொத்தமாக அதிமுக ரூ.112.40 கோடி செலவு செய்துள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தில் அக்.1 வரை மழை.. சென்னையிலும் 2 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்!
 

காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ரூ.7 கோடி, விளம்பரம், பிரச்சாரம் உள்ளிட்ட செலவுகளை சேர்த்து மொத்தமாக ரூ.22.25 கோடி தேர்லுக்காக செலவு செய்ள்ளது. பாஜக தேர்தலுக்காக ரூ.51.56 கோடி செலவு செய்துள்ளது.  

இதில், தமிழ்நாடு மாநிலப் பிரிவால் ரூ.31.57 கோடியும், கட்சியின் தேசியத் தலைமையகத்தால் தமிழ்நாட்டிற்காகச் செலவிடப்பட்ட ரூ.19.99 கோடியும் அடங்கும். நாம் தமிழர் கட்சி தேர்தலுக்காக ரூ.1.38 கோடியும், பகுஜன் சமாஜ் கட்சி ரூ.2.17 கோடியும், சிபிஐ ரூ.2.96 லட்சமும், சிபிஎம் ரூ.1.77 கோடியும் செலவிட்டதாக தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: ஆதாரமே கிடைக்கவில்லை... வண்டலூர் மாணவி விவகாரம்... காவல்துறை சொல்லும் விளக்கம்
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu