• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /இலவச பேருந்து! பெண்களுக்கு குட் நியூஸ் கொடுக்கும் முதலமைச்சர் விஜய்

இலவச பேருந்து! பெண்களுக்கு குட் நியூஸ் கொடுக்கும் முதலமைச்சர் விஜய்

Vetri Payanam : பெண்களுக்கான வெற்றிப் பயண திட்டத்தை தொடங்குவது குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written ByKarthikeyan Sekar
Published: Sep 21, 2026, 02:32 PM IST|Updated: Sep 21, 2026, 02:34 PM IST
joinshare
இலவச பேருந்து! பெண்களுக்கு குட் நியூஸ் கொடுக்கும் முதலமைச்சர் விஜய்
Image Credit: Vetri Payanam

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Vetri Payanam : தமிழ்நாடு முதலமைச்சர் 24.8.2026 அன்று சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ், தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் வசிக்கும் மகளிரும் போக்குவரத்துக் கட்டணத்தால் தமது வாய்ப்புகளை இழக்கக்கூடாது என்ற சமூகநீதிச் சிந்தனையை இவ்வரசு முதன்மையாகக் கொண்டுள்ளது என்றும், இதனைக் கருத்தில் கொண்டு, மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, பெருமளவில் பயனளித்திடும் விதமாக, 'வெற்றிப் பயணம்' என்ற பெயரில், தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்கள்.

தற்போது, 7 அரசு போக்குவரத்துக் கழகங்களின் நகர சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கி.மீ. வரையிலான மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றிப் பயணம் செய்து வருகின்றனர். "வெற்றிப் பயணம்" திட்டத்தின் மூலம் இச்சேவை மாநகர, நகர்ப்பகுதிகளில் இயங்கும் Express, LSS, டீலக்ஸ் (Deluxe) அரசுப் பேருந்துகள், புறநகர் சாதாரணப் பேருந்துகள் (Mofussil Ordinary) மற்றும் 40 கி.மீ.க்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகள் (Ghat Ordinary) ஆகியவற்றிற்கும் விரிவுபடுத்தப்பட்டு, மொத்தமாக 12,692 பேருந்துகள் இத்திட்டத்தின்கீழ் கொண்டுவரப்படவுள்ளன.


இதன்மூலம், 7 அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் மொத்த 18,413 திட்டமிடப்பட்ட பேருந்துகளில் 12,692 பேருந்துகள் (69 விழுக்காடு), மொத்த 1,94,649 நடைகளில் (Singles) 1,65,312 நடைகள் (85 விழுக்காடு) இயக்கப்படும். நாளொன்றுக்கு சுமார் 84.32 இலட்சம் மகளிர் இத்திட்டத்தின்மூலம் பயன்பெறுவார்கள்.

மேலும், "வெற்றிப் பயணம்" பேருந்துகளின் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களுடனான (ETM) இணைப்புப் பணி நிறைவடைந்துள்ளது. சோதனை மற்றும் சரிபார்ப்புப் பணிகள் 25.09.2026-க்குள்ளும், சோதனை ஓட்டம் 27.09.2026 அன்றும் மேற்கொள்ளப்படும். "வெற்றிப் பயணம்" திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2.10.2026 அன்று தொடங்கி வைக்கவுள்ளார். இத்திட்டத்தின் மூலம், மாநிலம் முழுவதும் தமிழக மகளிருக்கான எளிதில் அணுகக்கூடிய பொதுப் போக்குவரத்து வசதி பெருமளவில் கிடைக்கும்.

மேலும், மாணவிகள் தொலைதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லவும், மகளிர் தங்கள் பணியிடங்களுக்குச் செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசியச் சேவைகளுக்கும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க இயலும். இக்கூட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், தலைமைச் செயலாளர் சாய்குமார், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சித்திக் போக்குவரத்துத் துறை செயலாளர் நிர்மல்ராஜ் மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் முனைவர் ஜெயசீலன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu