SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

வெற்றி வீடு திட்டம்: 70,000 குடும்பங்களுக்கு இலவச வீடு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? CM விஜய் அறிவிப்பு

Vettri Veedu Thittam: முதல்வர் விஜய்யின் வெற்றி வீடு திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இத்திட்டத்தின் கீழ் இலவசமாக 70,000 வீடுகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. யாருக்கெல்லாம் இலவச வீடு கிடைக்கும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Nov 06, 2026, 03:47 PM IST | Updated: Nov 06, 2026, 03:57 PM IST
Join

Vettri Veedu Thittam: தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு சொந்த வீடு வழங்கும் வகையில், 2026-27ஆம் நிதியாண்டில் 70,000 வீடுகள் கட்டுவதற்கு ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் அரசாணை வெளியிட்டுள்ளார்.

இலவசமாக 70,000 வீடுகள்

மத்திய, மாநில அரசுகளின் பழைய வீடு திட்டங்களில் யூனிட் காஸ்ட் மிக குறைவாக இருப்பதால், குறைந்தபட்ச அளவில் கூட வீடு கட்ட முடியவில்லை என புகார் எழுந்தது. எனவே, முழுக்க முழுக்க மாநில அரசு நிதியில் புதிய திட்டமான வெற்றி வீடு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மற்றும் நலிவடைந்த மக்களுக்கு சொந்த வீடு வழங்கும் வகையில் ரூ.5 லட்சம் செலவில் புதிய வீடுகள் கட்டப்படும்.

இதில் வீட்டின் அளவு 360 முதல் 500 சதுர அடி வரை, RCC கூரையுடன், சமையலறை இருக்கும். ஒரு வீட்டின் செலவு ரூ.5 லட்சம் ஆகும். 2026-27ம் ஆண்டில் *70,000 வீடுகள் கட்ட முதற்கட்டமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான மொத்த செலவாக ரூ.3521 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்து. கூடுதலாக தனி நபர் கழிப்பறை (IHHL) Swachh Bharath Mission-Gramin திட்டத்தில் ரூ.12,000-ல் கட்டிக் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தீபாவளி நாளில் வெளுத்து வாங்கப்போகும் மழை: 8 மாவட்டங்களுக்கு ‘கனமழை’ எச்சரிக்கை!

திட்டத்தின் சிறப்பம்சங்கள்

யாருக்கெல்லாம் முன்னுரிமை?

குடிசை வீடுகள், மண் சுவர் வீடுகள் (எந்த கூரையாக இருந்தாலும்), கூரை மட்டும் குடிசையாக உள்ள வீடுகள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விதவைகள், ஆதரவற்ற பெண்கள், மாற்றுத்தினாளகிள், திருநங்கைகள், பட்டியலின மற்றும பழங்குடியின மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை கிராம ஊராட்சி அலுவலகம் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 2026 -27ஆம் ஆண்டு முதல் 2030-31ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வெற்றி வீடு திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுககும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி முறையாகப் பயன்படுத்துவதையும், வீடுகள் தரமான முறையில் கட்டப்படுவதையும் உறுதி செய்து, திட்டத்தின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை அரசுக்க சமர்பிக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Explained : அறிவுலகத்துக்கு நூல்கள் வாங்கியதில் பல கோடி ஊழல்..? முதல்வர் விஜய் சொல்லும் பதில்!
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES