• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /யூடியூபர் வீட்டில் கொள்ளை - 3 பேர் கைது! பணத்துடன் வீடியோ போட்டதுதான் பிரச்சனையா?

யூடியூபர் வீட்டில் கொள்ளை - 3 பேர் கைது! பணத்துடன் வீடியோ போட்டதுதான் பிரச்சனையா?

யூடியூபர் மதுமிதா வீட்டில், சுமார் 118 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, இதில் சம்பந்தப்பட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

Written ByYuvashree M
Published: Sep 29, 2026, 01:28 PM IST|Updated: Sep 29, 2026, 01:41 PM IST
joinshare
யூடியூபர் வீட்டில் கொள்ளை - 3 பேர் கைது! பணத்துடன் வீடியோ போட்டதுதான் பிரச்சனையா?
Image Credit: YouTuber Madhumitha House Theft | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

வீட்டில் இருக்கும் பணம், நகையை வைத்து ரீல்ஸ் செய்து அதை பதிவிட்டு பிரபலமானவர்தான் மதுமிதா. தன் குழந்தைை வைத்து, அதற்கு பணத்தால் அபிஷேகம் செய்வது போலவும், நகைக்கடைக்கு போய் நகை வாங்குவது போலவும் மதுமிதா பல்வேறு வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார். அவர் வீட்டில்தான் சில தினங்களுக்கு முன்பாக கொள்ளை நடந்தது. இது குறித்த முழு தகவல்களை இங்கு பார்ப்போம்.

3 பேர் கைது!

யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 சவரன் நகை, ரொக்கப்பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த இசக்கிப்பாண்டி என்பவரும் அவருக்கு உறுதுணையாக இருந்த மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யூடியூபர் மதுமிதா சமூக வலைதளத்தை பின்தொடர்ந்து இந்த கொள்ளையை அரங்கேற்றியதாக தகவல்.

118 பவுன் நகை கொள்ளை!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்பத்து கோணம் வி. ஜ. பி கார்டன் பகுதியில் வசித்து வருபவர் தொழிலதிபர் வினோத் குமார், சம்பவம் நடப்பதற்கு முந்தைய தினம் மனைவி மதுமிதாவுடன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றவர்கள் நள்ளிரவில் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் படிக்க | தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு அன்றே மோதிரம்!

வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது வீட்டிற்குள் சென்று பாந்தப்போது பீரோ பூட்டுகள் உடைக்கப்பட்டு அதிலிருந்த 118 பவுன் தங்க நகைகள் 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது இன்று ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தடயங்கள் சேகரித்து விசாரனை செய்து வருகின்றனர் வீடு மற்றும் அக்கம் பக்கம் உள்ள சிசிடிவி கேமாரக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர் இந்த சம்பவம் இப் பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீடியோ போட்டதுதான் பிரச்சனையா?

பலருக்கும், யூடியூபர் மதுமிதா, தன் வீட்டில் நகை-பணம் இருப்பது பாேன்று வீடியோ போட்டதுதான் பிரச்சனை என்று கூறி, இதனால்தான் கொள்ளையர்கள் வந்து வீட்டில் கைவரிசை காட்டியதாக கூறி வருகின்றனர். தான் இப்படி வீடியோக்கள் வெளியிடுவது குறித்து, மதுமிதா இதற்கு முன்னரே பேசி இருக்கிறார். அதில், தான் இது போன்ற வீடியோக்களை போடுவது பணத்திமிரை காட்டுவதற்காக இல்லை என்றும், ஒரு ஞாபகத்திற்காக போடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த திருட்டு சம்பவத்தில் இன்னொரு தகவலும் வெளியாகி இருக்கிறது. இன்ஸ்டாகிராம் வீடியோவை பார்த்து, திருடர்கள் கைவரிசை காட்டியதும், இதில் சம்பந்தப்பட்ட இசக்கி பாண்டி உள்ப்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளதும் தெரிய அவந்துள்ளது. கொள்ளையடித்த நகைகளை விற்க, இசக்கி பாண்டியனின் நண்பர்கள் உதவியதாகவும், அவர்கள் இருவரும் பிடிப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

மேலும் படிக்க | Explained: இளம் வயதில் உயிரிழக்கும் தமிழ்நாட்டு ஆண்கள்.. அதிர்ச்சி ரிப்போர்ட்.. என்ன காரணம்?

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime