செயற்கை நுண்ணறிவு எனப்படும் Artificial Intelligence வளர்ந்து வரும் வேகத்தை பார்க்கும் போது, எதிர்காலத்தில் மனிதர்களுக்கான வேலைவாய்ப்பு எப்படி இருக்குமோ என்கிற அச்சம் அனைவருக்கும் நிலவி வருகிறது. இந்த பயத்தை நிரூபிக்கும் வகையில் எலான் மஸ்க் சில விஷயங்களை பேசியிருக்கிறார். இது குறித்த சில தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
எலக்ட்ரிக் கார் தயாரிப்பில், உலகின் முன்னணி நிறுவனமாக இருக்கிறது, டெஸ்லா. இதன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனராக இருப்பவர்தான் எலான் மஸ்க். அது மட்டுமன்றி, விண்வெளி ஆய்வு மற்றும் ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருக்கிறார். சமூக வலைதளமான எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் ஆவார். இது மட்டுமன்றி, தொழில்நுட்பங்கள் குறித்த கணிப்புகளை வெளியிடுபவராகவும் இருக்கிறார் எலான் மஸ்க்.
அடுத்த ஆண்டின் இறுதி அல்லது, 2028ஆம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவால் அனைத்து துறைகளிலும் முன்னோடியாக இருக்க முடியும் என்று ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்திருக்கிறார்.
AI குறித்த ஆராய்ச்சியாளரான Franois Chollet சமீபத்தில் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஏஐ குறித்த சில பதிவுகளை வெளியிட்டிருந்தார். அதில், இன்னும் 10-20 வருடங்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது குறித்து கணித்துள்ளார். அதில், இயற்பியல், வேதியியல், உயிரியல், தொல்லியல் துறைகள் குறித்து பேசியிருக்கிறார். இவை அனைத்தும் கணினி அறிவியலின் ஒரு கிளையாக மாறிவிடும் என கூறியிருந்தார். இதற்கு, முந்தைய தசாப்தங்களில் உருவான சில மாற்றங்களை உதாரணங்களாக பேசியிருந்தார்.
“2000ம் ஆண்டுகளில், அதிக நிறுவனங்கள் டெக் நிறுவனங்களாக மாறிவிடும் என்று கூறியிருந்தால் யாரும் நம்பியிருக்க மாட்டோம். ஆனால், இப்போது பல நிறுவனங்கள் அப்படித்தான் இயங்குகின்றன” என்று கூறியிருந்தார். இதில்தான், எலான் மஸ்க் கமெண்ட் செய்திருக்கிறார்.
அதில், மேற்கூறிய நபரின் கணிப்புகள் பிற்போக்குத்தனமானது என்று கூறியதோடு, AI அனைத்து துறைகளிலும் அடுத்த வருடத்தின் இறுதி அல்லது, 2028க்குள் முன்னோடியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
அவர் குறிப்பிட்டிருந்த 10-20 வருட டைம்லைனை விட AI இன்னும் அசுர வேகத்தில் வளரக்கூடும் என்று கூறியிருக்கிறார். Cholletஐ பொறுத்தவரை, AI என்பது, அறிவியல் சார்ந்த அனைத்து துறைகளிலும், மனிதர்கள் கவனிக்க மறக்கும் விஷயங்களை கண்டறிந்து, அதை ஆய்வில் இணைபதகவும் அது ஏற்கனவே நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
AI குறித்து பேசும் போது, அதன் பாதுகாப்பு மற்றும் அதன் தாக்கம் குறித்த விவாதங்கள்தான் பெரிதாக வெடிக்கிறது. எலான் மஸ்கை பொறுத்தவரை, இது போன்ற விஷயங்களில் அவர் தெரிவிக்கும் கருத்துகள், சமூகத்தின் பார்வையை திரும்பி பார்க்கச்செய்யும் வகையில் இருக்கின்றன. 2017ஆம் ஆண்டில், “மனிதர்களை காட்டிலும் AI 2060க்குள் அனைத்திலும் முன்னோடியாக விளங்கும்” என்று ஒரு ஆய்வு வெளியானது. அது குறித்து கருத்து தெரிவித்த அவர், 2030-2040க்குள்ளாகவே இந்த விஷயம் அரங்கேறி விடும் என்று கூறியிருக்கிறார். ஆரம்பத்திலிருந்தே, 2025க்குள், மனிதர்களை விட AI புத்திசாலியாக இருக்கும் என கூறி வந்தார். போகப்போக, அவர் ஏஐ வளர்ச்சியின் கணிப்புகள் வெளியாகும் போது, கணித்துள்ள ஆண்டை விட முன்கூட்டியே அந்த வளர்ச்சி நிகழ்ந்து விடும் என்பதை கூறி வருகிறார்.
இவர் கூறியிருக்கும் கணிப்புகள வருங்காலத்தில் இது நிகழுமா, நிகழாதா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.