EPFO WhatsApp Channel: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி. தங்கள் வருங்கால வைப்பு நிதி (Provident Fund) தொடர்பான தகவல்களைத் தெரிந்துகொள்ள அடிக்கடி இணையதளத்தைப் பார்வையிடும் நபர்களுக்கு இப்போது அதற்கான மற்றொரு எளிய வழி வந்துள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் (WhatsApp) சேனல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
முக்கிய அறிவிப்புகள் மற்றும் பயனுள்ள தகவல்களைப் பெற, உறுப்பினர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனலில் இணையுமாறு ஓய்வூதிய நிதி அமைப்பு 'X' (முன்னர் ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ளது.
EPFO now on WhatsApp too!
Join EPFO's official WhatsApp Channel to get important updates and useful information. Click on the link to join. https://t.co/k2KmISipxw #EPFO #EPFOWithYou #HumHainNa #EPFOWhatsAppChannel pic.twitter.com/mgLueBG1GD— EPFO (@officialepfo) September 13, 2026
EPFO தனது வாட்ஸ்அப் சேனலுக்கான நேரடி இணைப்பையும் (link) பகிர்ந்துள்ளது. ஆகையால், புதிய அறிவிப்புகள் வரும்போது உறுப்பினர்கள் EPFO-வின் இணையதளத்தையோ அல்லது சமூக ஊடகப் பக்கங்களையோ சரிபார்க்க வேண்டிய அவசியமில்லை. இனி அனைத்து தகவல்களும் வாட்ஸ்அப் மூலம் கிடைத்துவிடும்.
EPFO பகிர்ந்த நேரடி இணைப்பு மூலமாகவும் உறுப்பினர்கள் இந்தச் சேனலில் இணையலாம். கணினியில் இந்த இணைப்பைத் திறந்தால், அது தனி சாளரத்தில் (window) திறக்கப்படலாம். ஆனால் மொபைல் போனில் திறந்தால், அந்த இணைப்பு உங்களை நேரடியாக வாட்ஸ்அப்பிற்கு அழைத்துச் செல்லும்.
இன்று மதிய நிலவரப்படி, அதிகாரப்பூர்வ EPFO வாட்ஸ்அப் சேனலில் சுமார் 1.11 லட்சம் (111K) ஃபாலோயர்ஸ் இருந்தனர்.
உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் EPFO-வின் தகவல்களை எளிதாகப் பெறும் நோக்கத்துடன் இந்த புதிய இபிஎஃப்ஓ வாட்ஸ்அப் சேனல் (EPFO WhatsApp Channel) தொடங்கப்பட்டுள்ளது. இதில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், EPFO சேவைகள் குறித்த தகவல்கள் மற்றும் உறுப்பினர்களுக்குத் தொடர்புடைய பிற முக்கிய நிகழ்வுகள் ஆகியவை இடம்பெறும்.
வாட்ஸ்அப் சேனலில் இணைவதற்குப் பயனர்கள் ஸ்கேன் செய்யக்கூடிய QR குறியீடு அடங்கிய வீடியோவையும் EPFO பகிர்ந்துள்ளது.
உறுப்பினர்களைப் பொறுத்தவரை, EPFO பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள இது மிகவும் வசதியான வழியாக இருக்கும். EPFO இணையதளம் அல்லது சமூக ஊடகக் கணக்குகளைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருப்பதற்குப் பதிலாக, உறுப்பினர்கள் EPFO -இன் இந்த வாட்ஸ்அப் சேனலைப் பின்தொடர்ந்தே (ஃபாலோ செய்தல்) தகவல்களைப் பெற முடியும்.
புதிய வாட்ஸ்அப் சேனல் தகவல்களைப் பெறுவதை எளிதாக்கினாலும், இது EPFO-வின் தற்போதைய ஆன்லைன் சேவைகளுக்கு மாற்றாக அமையாது.
PF கோரிக்கைகளைச் சமர்ப்பித்தல் (filing claims), கோரிக்கையின் நிலையைச் சரிபார்த்தல் மற்றும் PF பாஸ்புக்கைப் பார்வையிடுதல் போன்ற முறையான சேவைகளுக்கு உறுப்பினர்கள் தொடர்ந்து EPFO-வின் குறிப்பிட்ட டிஜிட்டல் தளங்களையே பயன்படுத்த வேண்டும்.
இச்சேவைகள் EPFO உறுப்பினர் போர்டல் (member portal) மற்றும் UMANG போன்ற தளங்கள் மூலமாகவும் தொடர்ந்து கிடைக்கும். EPFO ஒரு வாட்ஸ்அப் உதவி எண்ணையும் கொண்டுள்ளது. இதன் மூலம் உறுப்பினர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்குகள் தொடர்பான சிக்கல்களுக்கு உதவி பெறலாம்.
தாமதமான அல்லது நிராகரிக்கப்பட்ட PF பணம் எடுக்கும் கோரிக்கைகள், PF பரிமாற்றச் சிக்கல்கள், செலுத்தப்படாத நிறுவன பங்களிப்புகள், KYC தொடர்பான சிக்கல்கள் மற்றும் பிற EPF தொடர்பான கேள்விகள் ஆகியவை இதில் அடங்கும்.
EPFO-வின் அறிவிப்புகளை அதன் பரந்த உறுப்பினர் தளத்திற்கு எளிதாகக் கிடைக்கச் செய்வதற்காக இந்த அமைப்பு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனலின் தொடக்கமானது இந்த முயற்சிகளின் ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகின்றது. மேலும் EPFO-வின் இந்த தொடக்கம் இபிஎஃப் உறுப்பினர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.