Phonepe UPI 123Pay Explained: இன்றைய நவீன காலத்த்தில் ஸ்மார்ட்போன் மூலமே பல்வேறு சேவைகளை எளிதாக நாம் பயன்படுத்த முடிகிறது. குறிப்பாக, பணப் பரிவர்த்தனைகளை ஸ்மார்ட்போன் மூலமே செய்து வருகிறோம். அதாவது, கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகள் மூலம் கட்டணங்கள் மூலம் வங்கிகளுக்கு செல்லாமல், ஒரு நொடியில் பணப் பரிவர்த்தனை செய்ய முடிகிறது.
யுபிஐ வசதி சிறு கடைகள் முதல் வணிக வளாகங்கள் வரை யுபிஐ சேவை இருக்கிறது. ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் தான் யுபிஐ சேவையை தற்போது வரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தான், போன்பே நிறுவனம் புதிய வசதியை கொண்டு வந்துள்ளது. இதன மூலம் இணையவசதி இல்லாமலும் பணப் பரிவர்த்தனை செய்யும் வகையில், புதிய அம்சத்தை போன்பே நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
சாதாரண பட்டன் போன்களில் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில், போன்பே யுபிஐ 123பே என்ற சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 20 கோடிக்கும் அதிகமானோர் சாதாரண மாடல் மொபைல் போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு யுபிஐ அடிப்படையில் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில், இந்த புதிய வசதியை போன்பே தொடங்கியுள்ளது.
இந்தச் சேவை, நோக்கியா, எச்எம்டி, லாவா இன்டர்நேஷனல் மற்றும் ஐடெல் மொபைல் - டிரான்சியன் ஹோல்டிங்ஸ் சாதனங்களில் முன்பே இணைக்கப்பட்டு வழங்கப்படும் என்றும் வரும் மாதங்களில் மற்ற சாதாரண போன்களுக்கு விரிவுப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. தற்போது போன்பே 123பே வசதியானது HMD 1052G, HMD 110 2G, Nokia 105 Classic, Nokio 105 Single Sim, Nokia 105 Dual Sim, Nokia 106, Nokia 123 Shiled மற்றும் பல செல்போன்களில் கிடைகக்கிறது.
No smartphone? No internet? No problem. @PhonePe becomes the first major TPAP to launch PhonePe UPI 123Pay, extending digital payments to India’s 200M+ feature phone users!
🔹 Works offline via robust SMS tech
🔹 Pre-bundled on Nokia, HMD, Lava & itel
🔹 Supports P2P & QR…— PhonePe (@PhonePe) August 31, 2026
போன்பே யுபிஐ 123பே, பாதுகாப்பான SMS அடிப்படையிலான தொழில்நுட்பம் மூலம் செயல்படுகிறது. இதன் மூலம் 2ஜி இணைய இணைப்பு குறைவாக இருக்கும் பகுதிகளிலும் பணப் பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும். மொபைல் எண் அல்லது UPI ID மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு P2P (Peer-to-Peer) பணப் பரிமாற்றத்தை எளிதாக செய்ய உதவுகிறது.
அதேபோல், UPI ID அல்லது QR Code-ஐ ஸ்கேன் செய்வதன் மூலம் கடைகளில் பணம் செலுத்த் முடியும். பணப் பரிவர்த்தனைகளைத் தாண்டி, ஃபீச்சர் போன் பயன்படுத்துபவர்கள் தங்களது வங்கிக் கணக்கை நிர்வகிக்கவும், கணக்கு இருப்புத் தொகையை சரிபார்க்கவும், முந்தைய பரிவர்த்தனைகளின் விவரங்களைப் பார்க்கவும் முடியும்.
மேமரா வசதி உள்ள போன்களில் க்யுஆர் கோர்டில் ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம். இதுதவிர புதிய பயனர்களுக்கு உதவ ஆங்கிலம் மற்றும் 12 இந்திய மொழிகளில் ஏஐ குரல் உதவி மையத்தை போன்பே அறிமுகம் செய்துள்ளது. வரும் நாட்களில் போன்பே மூலம் மின்கட்டணம், மொபைல் ரீசார்ஜ் போன்ற வசதிகளை போன்பே நிறுவனம் சேர்க்க உள்ளது.
இதன்பிறகு, உங்களுக்கான யுபிஐ பின்-ஐ உருவாக்கவும். அதன்பிறகு, உங்கள் UPI IDசெயல்பட தொடங்கும். PhonePe UPI 123Pay மூலம் நீங்கள் உடனடியாகப் பணப் பரிவர்த்தனைகளைச் செய்யத் தொடங்கலாம்.

பயனர்கள் தங்களது போனில் போன்பே செயலியைத் தொடங்கி, பணம் செலுத்துவதற்கான பல வழிகளைப் பயன்படுத்தலாம். ஸ்கேன் செய்து பணம் செலுத்துதல்/contact book/மொபைல் எண்/யுபிஐ ஐடி வாயிலாக பணம் செலுத்தலாம்.

இதுபோன்று போனில் பணப் பரிவர்த்தனை செய்ய தெரியாதவர்கள், போன் ஏஐ குரல் வழி தொழில்நுட்பம் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யலாம். போன்பே குரல்வழி செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஒரு உதவி எண்ணை போன்பே அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், எளிதாக குரல் வழியில் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
PhonePe UPI 123Pay சேவையைப் பயன்படுத்தி இணைய இணைப்பு இல்லாமலேயே பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். இது சாதாரண பட்டன் போன் பயன்படுத்துபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
கேமரா வசதி கொண்ட பட்டன் போன்களில் QR Code-ஐ ஸ்கேன் செய்து பணம் செலுத்த முடியும். மேலும், மொபைல் எண் அல்லது UPI ID மூலமாகவும் பணம் அனுப்பலாம்.
ஃபிச்சர் போன், வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் டெபிட் கார்டு தேவை. முதல் முறையாகப் பயன்படுத்தும்போது டெபிட் கார்டு விவரங்களைப் பயன்படுத்தி UPI PIN உருவாக்க வேண்டும்.