• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /Explained : நிலாவில் நீங்களும் நிலம் வாங்கலாம்... எப்படி? எவ்வளவு?

Explained : நிலாவில் நீங்களும் நிலம் வாங்கலாம்... எப்படி? எவ்வளவு?

தனது வருங்கால மனைவிக்கு திருமண பரிசாக, நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி உள்ளார் நாமக்கல் பொறியில் பட்டதாரி ஒருவர். இதேபோல் நீங்களும் உங்களின் அன்புக்குரியவர்களுக்கு நிலவில் நிலம் வாங்கி பரிசளிக்கலாம். அதை எப்படி வாங்குவது...? எவ்வளவு செலவாகும்...? என்பதை இங்கு விரிவாக காணலாம்.

Written BySudharsan G
Published: Aug 30, 2026, 12:06 PM IST|Updated: Aug 30, 2026, 12:08 PM IST
joinshare
Explained : நிலாவில் நீங்களும் நிலம் வாங்கலாம்... எப்படி? எவ்வளவு?
Image Credit: How To Buy Lunar Land | AI Generated - ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
டெல்லி ஜாமியா பல்கலைக்கழக போராட்டம்... பதற்றம் ஏன்? நடந்தது என்ன? Explained

டெல்லி ஜாமியா பல்கலைக்கழக போராட்டம்... பதற்றம் ஏன்? நடந்தது என்ன? Explained

2

டெட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்! சிறப்பு பயிற்சி ஏற்பாடு

3

விலைவாசியை குறைங்க, பட்டினியா கிடக்க முடியல... விதவை பெண்ணின் தர்ணா போராட்டம்

4

அரசு ஊழியர்களுக்குத் குட்நியூஸ்! திருமண முன்பணம் விதிமுறையில் முக்கிய மாற்றம்

5

மனு போடவே வேண்டாம்... வீடு தேடி வரும் சேவைகள்! தமிழக அரசின் புதிய வெற்றி இ-சேவை 2.0 திட்டம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

திருமணம் என்பது இரு மனிதர்களின் மனம் இணையும் வைபவம். இருவரின் வாழ்வும் இனி வேறுவேறானது இல்லை என்பதை உறுதிப்படுத்தும் நிகழ்வு என்றும் கூறலாம். திருமணத்தின் போது விருந்தாளர்கள் பரிசளிப்பது, மொய் வைப்பது, கேக் வெட்டுவது போன்றவை வழக்கம்.

அதேபோல் கணவன் தனது மனைவிக்கும், மனைவி தனது கணவனுக்கும் பரிசளிப்பதும் இப்போது இயல்பாகிவிட்டது. பலரும் தங்களின் பார்ட்னருக்கு கார், பைக், மொபைல், பிளாட், சுற்றுலா அல்லது பிடித்த பொருள்களை பரிசளிப்பாளர்கள்.

நிலாவில் நிலம் வாங்கிய முதல் தமிழன்...

ஆனால், நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை சேர்ந்த பொறியில் பட்டதாரியான அசோக் சரவணன் (32) என்பவர் தனது வருங்கால மனைவி ராதிகா (எ) வர்ஷினிக்கு நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி, அதை திருமண பரிசாக வழங்கி உள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டின் நிறுவனத்திடம் இருந்து இந்த நிலத்தை அவர் வாங்கியிருக்கிறார்.

இதுகுறித்து அந்த இளைஞர் இன்ஸடாகிராமில் பதிவு ஒன்றை போட்டுள்ளாரத். அதில் தனது நிலவான மனைவி ராதிகாவுக்கு என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். மேலும் நிலவில் நிலத்தை வாங்கியிருக்கும் முதல் தமிழன் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு

கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி போடப்பட்ட அந்த பதிவில், "தமிழ்நாட்டில் முதல் நபராக, எனது அன்பான மனைவிக்கு நிலவின் ஒரு பகுதியை பரிசாக வழங்கி இன்று வரலாறு படைத்திருக்கிறேன். இதுவெறும் நிலவின் நிலம் மட்டுமல்ல, நட்சத்திரங்களுக்கு மத்தியில் எழுதப்பட்ட எனது இதயத்தின் நித்திய வாக்குறுதி" என குறிப்பிட்டுள்ளார். மேலும் நிலவில் வாங்கிய நிலம் குறித்த சில தகவல்களையும் அதில் வெளியிட்டுள்ளார்.

நிலவின் தென்துருவத்திற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய சந்திராயன்-3 விண்கலம் தரையிறங்கிய பகுதியில்தான் அசோக் சரவணன் நிலம் வாங்கியிருக்கிறார். அதற்கு சிவசக்தி பாயிண்ட் (Statio Shiv Shakti) என பிரதமர் மோடி தேர்ந்தெடுத்த பெயர் சூட்டப்பட்டது.

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by A U Ashoksaravanan (@auashoksaravanan)

நிலவின் தென்துருவத்தில் அதுவும் அந்த பகுதியில் இடம் வாங்கியதற்கான காரணத்தையும் பதிவில் குறிப்பிட்டுள்ளார். "எப்படி சந்திராயன்-3 விண்கலம் 2023ஆம் ஆண்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியில் தரையிறங்கியதோ, அதேபோல் நீயும் என் வாழ்வில் எனது பலமாகவும், ஆசிர்வாதமாகவும் நீ வந்து தரையிறங்கி இருக்கிறாய். என் இதயத்தின் தென் துருவத்தில் வீற்றிருக்கும் எனது சொந்த சிவசக்தியாக..." என அவர் தனது மனைவி மீதான காதலை, சிவசக்தி பாயிண்ட் உடன் ஒப்பிட்டு வெளிப்படுத்தி உள்ளார்.

வழங்கப்படும் பிரத்யேக சான்றிதழ்

மேலும் அந்த இன்ஸ்டாகிராம் பதிவில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச நிலவின் நில உரிமை அமைப்பினால் வழங்கப்பட்ட பிரத்யேக சான்றிதழையும் அசோக் சரவணன் பதிவிட்டுள்ளார்.

அந்த சான்றிதழில் பல்வேறு தகவல்களை அந்த அமைப்பு கொடுத்திருக்கிறது. முக்கியமாக பார்த்தோமானால், நிலவின் தரைப்பகுதியை துல்லியமாக காட்டும் வகையில், நாசாவின் Lunar Reconnaissance Orbitor வரைபடத் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட HD புகைப்படம் அசோக் சரவணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தொலைநோக்கி வழியே நிலவில் அவர்களின் நிலத்தின் அமைவிடத்தை எளிதாக கண்டறியலாம்.

நிலத்தை பதிவு செய்ததற்கான விவரங்களும் சான்றிதழில் இடம்பெற்றுள்ளன. 2015ஆம் ஆண்டின் விண்வெளி வள ஆய்வு சட்ட விதிகளின் கீழ் இந்த உரிமை பதிவு செய்யப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில் குறிப்பிட்ட நிலப்பிரிவின் எண், தொகுதி எண், பதிவு தேதி, அட்சரேகை/தீர்க்கரேகை (Latitude/Longitude) விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

அசோக் சரவணன் - ராதிகா ஜோடிக்கு வரும் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று திருமணம் நடைபெறும் நிலையில், அன்றைய தினமே இந்த நிலத்தின் பதிவு தேதி ஆகும். இந்த நில உரிமை பதிவு என்பது நிரந்தரமானது. இதை பரிசாக வழங்கவோ, விற்கவோ அல்லது வாரிசுரிமையாக மாற்றவோ உரிமை இருப்பதாக சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை விற்கும் நிறுவனங்கள் என்னென்ன?

  • நிலாவில் நில விற்பனை இன்றைய புதிய சிந்தனை இல்லை. 1980ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. 1967ஆம் ஆண்டு விண்வெளி ஒப்பந்தத்தில் 'நாடுகள் நிலப்பரப்பைச் சொந்தம் கொண்டாடக்கூடாது' என்று மட்டுமே உள்ளது; 'தனிநபர்கள் சொந்தம் கொண்டாடக் கூடாது" என்று வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை.
  • இந்த சட்ட ஓட்டையை பயன்படுத்தி அமெரிக்காவின் டென்னிஸ் ஹோப் என்பவர் 1980ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபைக்கும் அமெரிக்க அரசுக்கும் கடிதம் எழுதி, நிவு மற்றும் பிற கோள்களின் உரிமை தனக்கே உரியது என கோரிக்கை விடுத்தார்.
  • அதை தொடர்ந்து உலகிலேயே நிலவு நில விற்பனையை முதன்முதலில் தொடங்கிய மிகப்பெரிய தனியார் அமைப்பாக இவர் தொடங்கிய Lunar Embassy நிறுவனம் உள்ளது.
  • மேலும், ஜான் எஃப் கென்னடி, ஜிம்மி கார்ட்டர், டபிள்யூ புஷ் உள்ளிட்ட அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பலருக்கும் Lunar Embasy மூலம் அடையாள நில உரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • இந்நிறுவனங்களை போல் The Lunar Registry, Moon Register, BuyMoon, Star Registry போன்ற பல நிறுவனங்கள் இதுபோன்ற செயல்படுகின்றனர்.
  • மேலும் அந்த அமைப்புகள் வழங்கும் சான்றிதழ்கள் அனைத்தும் வணிக ரீதியான நினைவுப் பரிசுகள் மட்டுமே. ஓய்வுபெற்ற பின் அங்கு சிறிய வீடு கட்டி குடியேறிவிடலாம் என ரிட்டையர்மண்ட் பிளானை இப்போதே போட்டுவிடாதீர்கள்.

சுவாரஸ்ய தகவல்கள்...

ஆண்டுதோறும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷாருக்கானின் பெண் ரசிகர், ஷாருக்கானின் பிறந்தநாளுக்கு Lunar Republic Society நிறுவனம் மூலம் நிலாவில் நிலம் வாங்கி பரிசளித்து வருகிறார். நிலாவில் உள்ள ஒரு சிறஇய பள்ளத்திற்கு ஷாருக் என்றும் பெயரிப்பட்டுள்ளது.

அதேபோல் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நிலாவில் நிலம் வாங்கி வைத்திருந்தார். வானியல் மற்றும் விண்வெளி அறிவியலில் அவர் நாட்டம் கொண்டவர். 2018ஆம் ஆண்டில் நிலவின் மறுபக்கத்தில் உள்ள Mare Muscoviense/Sea Of Muscovy என்ற பகுதியில் நிலம் வாங்கினார். அதை பார்ப்பதற்காகவே அதிநவீன டெலஸ்கோப் ஒன்றையும் வீட்டில் வாங்கி வைத்திருந்தார். இதேபோல் பிரபலங்கள் பலரும் நிலாவில் நிலம் வாங்கி உள்ளனர்.

நீங்களும் வாங்கலாம் நிலாவில் நிலம்...

1967ஆம் ஆண்டின் சர்வதேச விண்வெளி ஒப்பந்தத்தின்படி, நிலவின் மீது எந்த ஒரு தனிநபரோ அல்லது நாடோ முழுமையான இறையாண்மையை கொண்ட சட்டப்பூர்வ உரிமையை கோர முடியாது. ஆனால், நிலாவில் நிலங்களை பதிவு செய்வது அன்பின் வெளிப்பாடாகவும், நினைவுச்சின்னப் பரிசாகவும் உலகம் முழுவதும் பரவலாக வழங்கப்படுகிறது.

நிலவின் நில உரிமைப் பதிவுகள் ஆண்டுதோறும் தொகுக்கப்பட்டு, அமெரிக்க நாடாளுமன்ற நூலகம், ஐக்கிய நாடுகள் நூலகம், மற்றும் பிரிட்டன், ஜப்பான், ரஷ்யா ஆகிய நாடுகளின் பதிப்புரிமை அலுவலகங்களில் ஆவணப்படுத்தப்படும்.

Lunar Land

*புகைப்படம்: lunarregistry.com

நிலவில் இடம் வாங்குவதற்கு ஈஸியான 5 படிநிலைகள்:

  • lunarregistry.com என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்குச் செல்லவும். அதில் உள்ள Buy Moon Property அல்லது Buy Moon Land என்ற பகுதியைத் தேர்வு செய்யவும்.
  • உங்களுக்கு விருப்பமான நிலவின் பகுதியை தேர்ந்தெடுக்கவும். Statio Shiv Shakti என்பதுபோல், Bay Of Rainbows, Lake Of Dreams, Lake Of Happiness, Lunar Alps என நிலாவில் பல்வேறு இடங்கள் விற்பனைக்கு உள்ளன. வாங்க விரும்பும் பரப்பளவை ஏக்கர் கணக்கில் தேர்ந்தெடுக்கலாம். குறைந்தபட்சம் 1 ஏக்கர் முதல் நீங்கள் வாங்கலாம்.
Lunar Land

*புகைப்படம்: lunarregistry.com

  • நிலாவில் இடத்தை யாருடைய பெயரில் பதிவு செய்ய வேண்டுமோ, அந்த நபரின் முழு பெயரை உள்ளிடவும். யாருக்காவது பரிசளிப்பதாக இருந்த அதற்கான பிரத்யேக குறிப்பையும் சேர்க்கலாம். சான்றிதழுடன் இணைக்கப்பட வேண்டிய தனிப்பட்ட வாழ்த்துச் செய்தியைத் தட்டச்சு செய்து உள்ளிடவும்.
  • மின்னஞ்சல் மூலம் சான்றிதழை பெற விரும்பினால் டிஜிட்டல் PDF முறையை தேர்வு செய்யலாம். நிலவின் புகைப்பட வரைப்படம், சான்றிதழ், பிரேம் ஆகியவற்றை அஞ்சல் மூலம் வீட்டிற்கே பெறலாம். அதற்கு முகவரியை உள்ளிடவும். பிளாக்செயின் சார்ந்த டிஜிட்டல் உரிமை ஆவணமும் தேவைப்பட்டால் அதையும் தேர்வு செய்யலாம்.
  • ஒதுக்கப்பட்ட அட்சரேகை/தீர்க்கரேகை, நிலப்பிரிவு எண், மொத்த கட்டண விவரங்களைச் சரிபார்க்கவும். நீங்கள் சர்வதேச கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலமும், PayPal மூலமும் பணத்தைச் செலுத்தி பதிவை உறுதி செய்யலாம். பணம் செலுத்திய உடன் பதிவு எண் உருவாக்கப்பட்டு, சர்வதேச நிலவு ஆவணக் காப்பகத்தில் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்.

எவ்வளவு செலவாகும்...?

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலவின் பகுதிகளை பொறுத்து, சர்வதேச நிலவின் நில ஆணையம் மூலம் நிலத்தை வாங்க, ஒரு ஏக்கருக்கு இந்தியா ரூபாய் மதிப்பில், ரூ.2,500 முதல் ரூ.3,800 ரூபாய் வரை செலவாகும் என இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக அனைத்து செலவுகளையும் சேர்த்தால் ரூ.10 ஆயிரம் வரை செலவாகலாம் என கூறப்படுகிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer