SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explained : நிலாவில் நீங்களும் நிலம் வாங்கலாம்... எப்படி? எவ்வளவு?

தனது வருங்கால மனைவிக்கு திருமண பரிசாக, நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி உள்ளார் நாமக்கல் பொறியில் பட்டதாரி ஒருவர். இதேபோல் நீங்களும் உங்களின் அன்புக்குரியவர்களுக்கு நிலவில் நிலம் வாங்கி பரிசளிக்கலாம். அதை எப்படி வாங்குவது...? எவ்வளவு செலவாகும்...? என்பதை இங்கு விரிவாக காணலாம்.

Written By Sudharsan G
Published: Aug 30, 2026, 12:06 PM IST | Updated: Aug 30, 2026, 12:08 PM IST
Join

திருமணம் என்பது இரு மனிதர்களின் மனம் இணையும் வைபவம். இருவரின் வாழ்வும் இனி வேறுவேறானது இல்லை என்பதை உறுதிப்படுத்தும் நிகழ்வு என்றும் கூறலாம். திருமணத்தின் போது விருந்தாளர்கள் பரிசளிப்பது, மொய் வைப்பது, கேக் வெட்டுவது போன்றவை வழக்கம்.

அதேபோல் கணவன் தனது மனைவிக்கும், மனைவி தனது கணவனுக்கும் பரிசளிப்பதும் இப்போது இயல்பாகிவிட்டது. பலரும் தங்களின் பார்ட்னருக்கு கார், பைக், மொபைல், பிளாட், சுற்றுலா அல்லது பிடித்த பொருள்களை பரிசளிப்பாளர்கள்.

நிலாவில் நிலம் வாங்கிய முதல் தமிழன்...

ஆனால், நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை சேர்ந்த பொறியில் பட்டதாரியான அசோக் சரவணன் (32) என்பவர் தனது வருங்கால மனைவி ராதிகா (எ) வர்ஷினிக்கு நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி, அதை திருமண பரிசாக வழங்கி உள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டின் நிறுவனத்திடம் இருந்து இந்த நிலத்தை அவர் வாங்கியிருக்கிறார்.

இதுகுறித்து அந்த இளைஞர் இன்ஸடாகிராமில் பதிவு ஒன்றை போட்டுள்ளாரத். அதில் தனது நிலவான மனைவி ராதிகாவுக்கு என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். மேலும் நிலவில் நிலத்தை வாங்கியிருக்கும் முதல் தமிழன் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு

கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி போடப்பட்ட அந்த பதிவில், "தமிழ்நாட்டில் முதல் நபராக, எனது அன்பான மனைவிக்கு நிலவின் ஒரு பகுதியை பரிசாக வழங்கி இன்று வரலாறு படைத்திருக்கிறேன். இதுவெறும் நிலவின் நிலம் மட்டுமல்ல, நட்சத்திரங்களுக்கு மத்தியில் எழுதப்பட்ட எனது இதயத்தின் நித்திய வாக்குறுதி" என குறிப்பிட்டுள்ளார். மேலும் நிலவில் வாங்கிய நிலம் குறித்த சில தகவல்களையும் அதில் வெளியிட்டுள்ளார்.

நிலவின் தென்துருவத்திற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய சந்திராயன்-3 விண்கலம் தரையிறங்கிய பகுதியில்தான் அசோக் சரவணன் நிலம் வாங்கியிருக்கிறார். அதற்கு சிவசக்தி பாயிண்ட் (Statio Shiv Shakti) என பிரதமர் மோடி தேர்ந்தெடுத்த பெயர் சூட்டப்பட்டது.

நிலவின் தென்துருவத்தில் அதுவும் அந்த பகுதியில் இடம் வாங்கியதற்கான காரணத்தையும் பதிவில் குறிப்பிட்டுள்ளார். "எப்படி சந்திராயன்-3 விண்கலம் 2023ஆம் ஆண்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியில் தரையிறங்கியதோ, அதேபோல் நீயும் என் வாழ்வில் எனது பலமாகவும், ஆசிர்வாதமாகவும் நீ வந்து தரையிறங்கி இருக்கிறாய். என் இதயத்தின் தென் துருவத்தில் வீற்றிருக்கும் எனது சொந்த சிவசக்தியாக..." என அவர் தனது மனைவி மீதான காதலை, சிவசக்தி பாயிண்ட் உடன் ஒப்பிட்டு வெளிப்படுத்தி உள்ளார்.

வழங்கப்படும் பிரத்யேக சான்றிதழ்

மேலும் அந்த இன்ஸ்டாகிராம் பதிவில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச நிலவின் நில உரிமை அமைப்பினால் வழங்கப்பட்ட பிரத்யேக சான்றிதழையும் அசோக் சரவணன் பதிவிட்டுள்ளார்.

அந்த சான்றிதழில் பல்வேறு தகவல்களை அந்த அமைப்பு கொடுத்திருக்கிறது. முக்கியமாக பார்த்தோமானால், நிலவின் தரைப்பகுதியை துல்லியமாக காட்டும் வகையில், நாசாவின் Lunar Reconnaissance Orbitor வரைபடத் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட HD புகைப்படம் அசோக் சரவணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தொலைநோக்கி வழியே நிலவில் அவர்களின் நிலத்தின் அமைவிடத்தை எளிதாக கண்டறியலாம்.

நிலத்தை பதிவு செய்ததற்கான விவரங்களும் சான்றிதழில் இடம்பெற்றுள்ளன. 2015ஆம் ஆண்டின் விண்வெளி வள ஆய்வு சட்ட விதிகளின் கீழ் இந்த உரிமை பதிவு செய்யப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில் குறிப்பிட்ட நிலப்பிரிவின் எண், தொகுதி எண், பதிவு தேதி, அட்சரேகை/தீர்க்கரேகை (Latitude/Longitude) விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

அசோக் சரவணன் - ராதிகா ஜோடிக்கு வரும் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று திருமணம் நடைபெறும் நிலையில், அன்றைய தினமே இந்த நிலத்தின் பதிவு தேதி ஆகும். இந்த நில உரிமை பதிவு என்பது நிரந்தரமானது. இதை பரிசாக வழங்கவோ, விற்கவோ அல்லது வாரிசுரிமையாக மாற்றவோ உரிமை இருப்பதாக சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை விற்கும் நிறுவனங்கள் என்னென்ன?

சுவாரஸ்ய தகவல்கள்...

ஆண்டுதோறும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷாருக்கானின் பெண் ரசிகர், ஷாருக்கானின் பிறந்தநாளுக்கு Lunar Republic Society நிறுவனம் மூலம் நிலாவில் நிலம் வாங்கி பரிசளித்து வருகிறார். நிலாவில் உள்ள ஒரு சிறஇய பள்ளத்திற்கு ஷாருக் என்றும் பெயரிப்பட்டுள்ளது.

அதேபோல் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நிலாவில் நிலம் வாங்கி வைத்திருந்தார். வானியல் மற்றும் விண்வெளி அறிவியலில் அவர் நாட்டம் கொண்டவர். 2018ஆம் ஆண்டில் நிலவின் மறுபக்கத்தில் உள்ள Mare Muscoviense/Sea Of Muscovy என்ற பகுதியில் நிலம் வாங்கினார். அதை பார்ப்பதற்காகவே அதிநவீன டெலஸ்கோப் ஒன்றையும் வீட்டில் வாங்கி வைத்திருந்தார். இதேபோல் பிரபலங்கள் பலரும் நிலாவில் நிலம் வாங்கி உள்ளனர்.

நீங்களும் வாங்கலாம் நிலாவில் நிலம்...

1967ஆம் ஆண்டின் சர்வதேச விண்வெளி ஒப்பந்தத்தின்படி, நிலவின் மீது எந்த ஒரு தனிநபரோ அல்லது நாடோ முழுமையான இறையாண்மையை கொண்ட சட்டப்பூர்வ உரிமையை கோர முடியாது. ஆனால், நிலாவில் நிலங்களை பதிவு செய்வது அன்பின் வெளிப்பாடாகவும், நினைவுச்சின்னப் பரிசாகவும் உலகம் முழுவதும் பரவலாக வழங்கப்படுகிறது.

நிலவின் நில உரிமைப் பதிவுகள் ஆண்டுதோறும் தொகுக்கப்பட்டு, அமெரிக்க நாடாளுமன்ற நூலகம், ஐக்கிய நாடுகள் நூலகம், மற்றும் பிரிட்டன், ஜப்பான், ரஷ்யா ஆகிய நாடுகளின் பதிப்புரிமை அலுவலகங்களில் ஆவணப்படுத்தப்படும்.

*புகைப்படம்: lunarregistry.com

நிலவில் இடம் வாங்குவதற்கு ஈஸியான 5 படிநிலைகள்:

*புகைப்படம்: lunarregistry.com

எவ்வளவு செலவாகும்...?

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலவின் பகுதிகளை பொறுத்து, சர்வதேச நிலவின் நில ஆணையம் மூலம் நிலத்தை வாங்க, ஒரு ஏக்கருக்கு இந்தியா ரூபாய் மதிப்பில், ரூ.2,500 முதல் ரூ.3,800 ரூபாய் வரை செலவாகும் என இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக அனைத்து செலவுகளையும் சேர்த்தால் ரூ.10 ஆயிரம் வரை செலவாகலாம் என கூறப்படுகிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES