• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /மளிகை கடை டூ பெட்ரோல்.. இனி UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் செலுத்தனுமா? Explained

மளிகை கடை டூ பெட்ரோல்.. இனி UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் செலுத்தனுமா? Explained

UPI பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற குழப்பத்திற்கு மத்தியில், மத்திய அரசின் புதிய MDR விதிமுறை யாருக்கு பொருந்தும், யாரெல்லாம் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை முழுமையாக தெரிந்துகொள்வோம்.

Written ByR Balaji
Published: Sep 16, 2026, 08:28 AM IST|Updated: Sep 16, 2026, 08:39 AM IST
joinshare
மளிகை கடை டூ பெட்ரோல்.. இனி UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் செலுத்தனுமா? Explained

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா:  பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா: பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

2

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

3

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

4

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

5

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

UPI மூலம் பணம் அனுப்புவதற்கு இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற செய்தி பலருக்கும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பலரும் இனி UPI மூலம் பணம் செலுத்தினாலே கட்டணம் வசூலிப்பார்கள், எனவே மீண்டும் ஏடிஎம் மூலம் பணத்தை செலவழிக்க எடுக்க என யோசிக்கின்றார்கள். உண்மையில் அப்படி இல்லை.. இந்த கட்டணமானது பொதுமக்கள் அனைவருக்கும் பொருந்தாது. மாறாக குறிப்பிட்ட சிலருக்கே UPI பரிவர்த்தனைகள் மூலம் கட்டணம் வசூலிக்கப்படும். யார் யாருக்கு இந்த விதிமுறை பொருந்தும்? அவர்கள் எவ்வளவு பரிவர்த்தனை செய்தால் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற முழு விவரத்தை இங்கே தெரிந்துக்கொள்வோம்.

மத்திய அரசு அறிவிப்பு

UPI பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டண விதிமுறைகள் தொடர்பாக மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் குறிப்பிட்ட வகையிலான வணிகர் சார்ந்த UPI பரிவர்த்தனைகளுக்கு Merchant Discount Rate எனப்படும்  MDR கட்டணம் அமலுக்கு வருகிறது.

ஆனால், இந்த அறிவிப்பை பார்த்தவுடன், இனி UPI மூலம் பணம் செலுத்தினால் ஏல்லோரிடமும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று நினைத்துவிட கூடாது. இந்த விதிமுறை முக்கியமாக வார்க்கையாளர் வாடிக்கையாளர் ஒரு வணிகருக்கு செய்யும் UPI பண்பபரிவர்த்தனைகளுக்கு மட்டுமே தொடர்புடையது.

UPI MDR என்றால் என்ன?

MDR என்பது Merchant Discount Rate என்பதன் சுருக்கமாகும். அதாவது, வாடிக்கையாளர் UPI மூலம் ஒரு கடை அல்லது வணிக நிறுவனத்திற்கு பணம் செலுத்தும்போது, அந்த பரிவர்த்தையை செயல்படுத்துவதற்காக வணிகர் தரப்பில் விதிக்கப்படும் கட்டணமே MDR.

நாம் தனது நண்பருக்கோ, உறவினருக்கோ UPI மூலம் பணம் அனுப்புவதும்,ஒரு கடைக்கு சென்று பொருட்களை வாங்கிவிஒட்டு UPI மூலம் பணம் செலுத்துவதும் ஒன்றல்ல. இதில் வணிக பரிவர்த்தைகளுக்குத்தான் இந்த புதிய MDR விதிமுறை பொருந்துகிறது.

ரூ. 2000 மேல் UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய விதிமுறையின்படி, வணிகர் சார்ந்த UPI பரிவர்த்தனைகளில் ரூ. 2000க்கு மேல் செலுத்தப்படும் தொகைக்கு MDR வசூலிக்கப்படும். இதற்கான அடிப்படை விகிதம் 0.4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, ஒரு கடையில் ரூ. 3000 மதிப்புள்ள் பொருளை வாங்கி UPI மூலம் பணம் செலுத்துகிறீர்கள் என்றால், 0.4 சதவீதம் என்ற கணக்கில் MDR ரூ. 12 ஆக இருக்கும். ரூ. 10,000 பரிவர்த்தனைக்கு ரூ. 40 ஆகவும் ரூ. 50,000 பரிவர்த்தனைக்கு ரூ. 200 ஆகவும் கணக்கிடப்படும். இருப்பினும் அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளில் MDR தொடர்ந்து அதிகரிக்காமல் இருக்க அதிகபட்ச வரம்பும் நிர்ணயிகப்பட்டுள்ளது. ரூ. 75000 மற்றும் அதற்கு மேல் உள்ள தகுதியான பரிவர்த்தனைகளுக்கு MDR அதிகபட்சமாக ரூ. 300 என்ற வரம்பு உள்ளது.

இந்த கட்டணத்தை யார் செலுத்த வேண்டும்?

இதுதான் பலருக்கு இருக்கும் முக்கியமான சந்தேகம். MDR என்பது வாடிக்கையாளரிடம் நேரடியாக வசூலிக்கப்படும் UPI கட்டணம் அல்ல. இது வணிகர் தரப்புடன் தொடர்புடைய கட்டணமாகும். அதேபோல், ஒருவர் தனது நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருக்கு UPI மூலம் ரூ. 5,000, ரூ. 10,000 அல்லது அதற்கு மேல் பணம் அனுப்பினாலும், அந்த Person to Person பரிவர்த்தனைக்கு இந்த MDR விதிமுறை பொருந்தாது.

எனவே, இனி UPI மூலம் பணம் அனுப்பினால் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற பொதுவாக கூறுவது சரியான புரிதல் அல்ல.

சிறு வணிகர்களுக்கு MDR கட்டணம் உண்டா?

புதிய விதிமுறையில் சிறு வனிகர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தங்களது தனிப்பட்ட வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட UPI QR மூலம் மாதத்திற்கு ரூ. 1 லட்சம் வரை பணம் பெறும் சிறு வணிகர்கள் MDR கட்டணத்தில் இருந்து விலக்கு பெறுவார்கள். இதனால் தெருவோர வியாபாரிகள், சிறிய கடைகள் உள்ளிட்ட குறு வணிகர்களுக்கு இந்த விதிமுறையின் தாக்கம் குறைவாக இருக்கும்.

ஒரு சிறு வணிகர் தொடர்ந்து 3 மாதங்களுக்கு UPI மூலம் பெறும் தொகை ரூ.1 லட்சத்தைத் தாண்டினால், அவர் வழக்கமான merchant category-க்கு மாற்றப்படலாம். அதன் பின்னர் தகுதியான பரிவர்த்தனைகளுக்கு MDR பொருந்தும்.

சில துறைகளுக்கு ரூ. 5 கட்டணம்

அனைத்து வணிகர்களுக்கு 0.4% என்ற ஒரே MDR வகிதம் கிடையாது. ரயில்வே தொலைதொடர்பு காப்பீடு, எரிபொருள், விவசாய உள்ளீடுகள் உள்ளிட்ட குறிப்பிட்ட துறைகளில் ரூ. 2000க்கு மேல் செய்யப்படும் UP பரிவர்த்தனைகளுக்கு 0.4% பதிலாக ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 5 என்ற நிலையான MDR விதிக்கப்படும். பயன்பாடுகள் மற்றும் சில அத்தியாவசிய சேவைகளுக்கான பரிவர்த்தனைகளும் இந்த Concessional Category-யில் இடம்பெறுகின்றன.

உதாரணமாக, இதனை சேர்ந்த ஒரு சேவைக்கு  ரூ. 10,000 UPI மூலம் செலுத்தினாலும் 0.4% என்ற அடிப்படையில் ரூ. 40 கட்டணம் அல்ல; பொருந்தக்கூடிய விதிமுறையின் கீழ் ரூ. 5 என்ற Flat MDR மட்டுமே இருக்கும்.

முதலீட்டு பரிவர்த்தனைகளுக்கு எவ்வளவு?

Mutual Fund, Securities, Stockbroker மற்றும் dealer போன்ற Capital Market தொடர்பான சில UPI பரிவர்த்தனைகளுக்கு தனி MDR விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு 0.2% MDR, ஒரு பரிவர்த்தனிக்கு அதிகபட்சம் ரூ. 300 என்ற வரம்புடன் உள்ளது. அதேபோல், Mutual Fund SIP போன்ற Recurring Payment-கள் UPI Mandate அல்லது Autopay மூலம் தானாக நடைபெறும் நிலையில், இந்த MDR கட்டணம் விதிக்கப்படாது. மாதாந்திர Utility Bills மற்றும் OTT Subscription போன் சில Recurring Paymentsக்கும் இதேபோன்ற விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு?

புதிய MDR விதிமுறை என்பது UPI பயன்படுத்தும் ஒவ்வொரு நபரிடமும் கட்டணம் வசூலிக்கும் திட்டம் அல்ல. நண்பர் அல்லது உறவினருக்கு பணம் அனுப்புவது போன்ற P2P பரிவர்த்தனைகள் தொகை எவ்வளவு இருந்தாலும் MDRக்கு உட்படாது. அதேபோல், வணிகர்களிடம் ரூ.2,000 வரை செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கும் MDR இல்லை.

மேலும், MDR கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் நேரடியாக மாற்றிவிட கூடாது என வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. UPI செயலிகள் platform fee அல்லது மறைமுக கட்டணங்களை விதிக்கவும் அனுமதிக்கப்படவில்லை.

எனவே, அக்டோபர் 15 முதல் UPI பயன்பாட்டில் மாற்றம் வருவது உண்மை என்றாலும், “இனி UPI மூலம் பணம் அனுப்பினாலே கட்டணம்” என்பது சரியான தகவல் அல்ல. இந்த புதிய விதிமுறை குறிப்பிட்ட வணிகர் சார்ந்த, குறிப்பிட்ட மதிப்புக்கு மேல் உள்ள பரிவர்த்தனைகளுக்கே முக்கியமாக பொருந்துகிறது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer