• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /Explained : UPI கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை! இந்த வழிகளை ஃபாலோ பண்ணுங்க..

Explained : UPI கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை! இந்த வழிகளை ஃபாலோ பண்ணுங்க..

அக்டோபர் 15ஆம் தேதி முதல், புதிய யுபிஐ விதிகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி, சாதாரண வாடிக்கையாளர்கல், UPI பரிவர்த்தனைகளுக்கு வணிகர் செயலாக்க கட்டணங்களை செலுத்த தேவையில்லை; கூடுதல் கட்டணங்கள் செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை. இந்த 5 முறைகளை பின்பற்றுவதன் மூலமாக அந்த சேவைகள் இலவசமாகவே தொடர்கின்றன.

Written ByYuvashree M
Published: Sep 18, 2026, 06:24 PM IST|Updated: Sep 18, 2026, 06:31 PM IST
joinshare
Explained : UPI கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை! இந்த வழிகளை ஃபாலோ பண்ணுங்க..
Image Credit: UPI New Rules | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

மனிதர்களை பொறுத்தவரை, முதலில் பண்டமாற்று முறை மூலமாக பல்வேறு பொருட்களை வாங்கி-கொடுத்து வந்தோம். பின்னர் பணத்தை கண்டுபிடித்து அதன் மூலமாக வணிகம் செய்து வருகிறோம். இப்போது, அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதை அடுத்து, Gpay, Phonepe, Paytm, BHIM போன்ற செயலிகள் மூலம் பணம் செலுத்தி வருகிறோம். யுபிஐ கொடுப்பனவுகள் தொடர்பான நிலைமையை, நிதி அமைச்சகம் சமீபத்தில் தெளிவுப்படுத்தியது. 

ரூ.2000த்திற்கு மேலான பண பரிவர்த்தனைகள்..

யுபிஐ கட்டணங்கள் தொடர்பான அரசின் புதிய முடிவு, சாதாரண வாடிக்கையாளர்கள் மற்றும் வனிகங்கள் ஆகிய இரு தரப்பினரையும் நேரடியாக பாதிக்கும் வகையில் இருக்கிறது. அதாவது ரூ.2000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு, நேரடி அல்லது மறைமுகக்கட்டணங்கள் எதுவும் விதிக்கப்படாது என்று, அரசாங்கம் தெளிவுப்படுத்தி இருக்கிறது. இருப்பினும், ரூ.2000க்கும் மேற்பட்ட பண பரிவர்த்தனைகளுக்கு இந்த நிலை சற்றே வேறுபடுகிறது.

ரூ.2000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு, வங்கிகளோ அல்லது சேவை வழங்குநர்களோ எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது என்று நிதி அமைச்சகம் சில நாட்களுக்கு முன்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்த தடையானது, நேரடி மற்றும் மறைமுக கட்டணங்கள் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

உதாரணத்திற்கு, ஒருவர் ரூ.500, ரூ.1,500, அல்லது ரூ.2000க்கு UPI மூலம் பணம் செலுத்தினால், உங்கள் வங்கிக்கணக்கிலிருந்து தனியாக எந்த பரிவர்த்தனை கட்டணமும் கழிக்கப்படாது.

புதிய விதி:

புதிய அறிவிப்பை பொருத்தவரை, கட்டணமற்றா இரண்டு மின்னணு பண பரிவர்த்தனை முறைகளை, அரசாங்கம் வகைப்படுத்தி இருக்கிறது. முதலாவதாக, RuPay டெபிட் கார்ட் கொடுப்பனவுகள் மற்றும்  இரண்டாவது ரூ.2000 வரையிலான UPI பரிவர்த்தனைகள்.

இந்த அறிவிப்பின்படி, மேற்கூரிய முறைகள் மூலமாக பணத்தை அனுப்புவதற்கோ அல்லது பெறுவதற்கோ வங்கிகளோ அல்லது  பண பரிவர்த்தனை சேவை வழங்குநர்களோ, ஒரு தனி நபரிடம் நேரடியாக அல்லது மறைமுகமாக கட்டணம் வசூலிக்க முடியாது. இந்த இடத்தில்தான், ரூ.2000 எனும் வரம்பு, முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், ரூ.2,000-ஐத் தாண்டிய யுபிஐ கொடுப்பனவுகள், இனி இந்த குறிப்பிட்ட சட்ட பாதுகாப்பின் கீழ் வராது.

ஏன் இது மிகவும் முக்கியமானது?

இந்த ரூ.2000 வரம்பு என்பது முக்கியமானதாகும். காரணம், இந்த வரம்பு வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளை, அரசாங்கம் கட்டணமற்றாவை என அறிவித்திருக்கிறது.

UPI பயனர்கள் கவனத்திற்கு

UPI கட்டணம்தற்போதைய நிலை
ரூ.500 கட்டணம் இல்லை
ரூ.1,500 கட்டணம் இல்லை
ரூ.2,000 கட்டணம் இல்லை
ரூ.5,000 இதுவரை புதிய நுகர்வோர் கட்டணங்கள் விதிக்கப்படவில்லை
ரூ.10,000இதுவரை புதிய நுகர்வோர் கட்டணங்கள் விதிக்கப்படவில்லை.

MDR என்றால் என்ன?

MDR என்பது, வணிகர் தள்ளுபடி அதாவது Merchant Discount Rate என்பதாகும். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஏற்றுக்கொள்வதற்காக, வணிகர்கள் அல்லது சில்லறை விற்பனையாளர்களிடம் விதிக்கப்படும் ஒரு கட்டணம் இது. இந்த கட்டணம், அட்டை பணப்பரிவர்த்தனைகளுக்கு ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது.

அதிகரிக்கும் யுபிஐ பயன்பாடு:

யுபிஐ-ஐ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசாங்க தரவுகளின்படி, இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் மட்டும் யுபிஐ பயன்படுத்துவோர் சுமார் ரூ.29.9 லட்சம் கோடி வரை பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்லனர். இதன் விளைவாகவே, இந்த முழு அமைப்பையும் இயக்குவதற்கான உள்கட்டமைப்பு இணைய பாதுகாப்பு மற்றும் மோசடி தடுப்பு ஆகிவற்றிற்கான செலவுகளும் அதிகரித்து வருகிறது.

எக்ஸ்டா Pay பண்ண வேண்டாம்: வழிகள்

யுபிஐ மூலம் பணம் செலுத்தினாலும் அதற்கு அதிக தொகை கொடுக்காமல் இருக்க சில வழிகள் இருக்கின்றன.

நண்பர்கள்-குடும்பத்தினருக்கு பணம் அனுப்புதல்:

தனிப்பட்ட பரிமாற்றங்களுக்கு, அனுப்பப்படும் தொகையின் அளவீடு இல்லாமல், கட்டணம் இல்லை. உதாரணத்திற்கு நண்பர்களுக்கோ அல்லது பெற்றோர்களுக்கு பணம் அனுப்புவது, அன்றாட செலவுகளை சரிசெய்வது போன்றாவை உள்ளிட்டவை இதில் அடங்கும்.

தொகை, தனிநபர்-தனிநபர் பரிமாற்றமாக இருப்பத்ஹால், திருத்தபட்ட வனிகர் கட்டண விதிகள் இந்த பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணங்களை அறிமுகப்படுத்தவில்லை.

சிறு வணிகர்கள்:

சாலையோர வியாபாரிகள் மற்றும் அருகில் உள்ள கடைகள், MDR இல்லாமல் பணம் பெற முடியும். இது, மாதம் ரூ.1 லட்சம் வரை UPI QR கோட் மூலமாக பெறும் சில்லறை வியாபாரிகளுக்கு பொருந்தும். இவர்களும் தனிநபர்-தனிநபர் விதியின் கீழ் வர வேண்டும். இந்தப் பிரிவின் கீழ் அவர்களின் அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது, இது சிறு வணிகங்களைக் கூடுதல் செலவுகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

ரூ.2000த்துக்குள் பணப்பரிவர்த்தனை :

₹2,000 அல்லது அதற்குக் குறைவான வணிகர் கொடுப்பனவுகளுக்கு MDR கிடையாது. அந்தத் தொகைக்குள் மளிகைப் பொருட்கள், சிற்றுண்டிகள் அல்லது வீட்டு உபயோகப் பொருட்கள் போன்ற அன்றாட பொருட்கள் வாங்குவதை உள்ளடக்கியது ஆகும்.

இது ரூ.2000த்துக்கும் குறைவான பேமெண்ட்களுக்கு மட்டுமே பொருந்தும். இதை தாண்டினால், 0.4% வரை MDR விதிக்கப்படும். அந்தக் கட்டணம் வணிகர் செலுத்தும் முறைக்கு பொருந்தும் அதே வேளையில், வாடிக்கையாளர்கள் அதைச் செலுத்துவதிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.

அத்தியாவசியக் கட்டணங்களைச் செலுத்துதல்:

அத்தியாவசியத் துறைகளில் ரூ.2,000 வரையிலான கொடுப்பனவுகளுக்கும் MDR-இலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதில் ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள் மற்றும் விவசாய உள்ளீடுகள் ஆகியவை அடங்கும். ரூ.2,000-க்கு மேற்பட்ட, விலக்கு அளிக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு, ரூ.5 என்ற நிலையான வணிகர் கட்டணம் பொருந்தும். இது மற்றொரு வணிகர் கட்டணமே தவிர, வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய கூடுதல் கட்டணம் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Add Zee News as a Preferred Source
TAGS:
India