"ஊழலற்ற தூய்மையான நிர்வாகத்தை வழங்குவோம் என்ற முழக்கத்திற்கு மத்தியில், தாம்பரம் மாநகராட்சியில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஒரு பகீர் டெண்டர் முறைகேடு, தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது! சிலைகளைத் திறந்து வைத்துவிட்டு, அதன்பிறகு அந்தப் பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டதாக அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கும் வீடியோ விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் தாம்பரம் மாநகராட்சியில், சட்ட விதிகளை அப்பட்டமாக மீறி ஒட்டுமொத்தமாக 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களில் இந்த கூட்டுச்சதி அரங்கேறியிருப்பதாக அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.