பல மருத்துவ முறைகள் இருப்பினும், தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும், நமது தமிழர் பாரம்பரிய சித்த மருத்துவத்தில் பல நோய்களுக்கு தீர்வு உள்ளதென பாரம்பரிய சித்த வர்ம மருத்துவர் செந்தில்குமார் அவர்கள் விளக்கமளித்துள்ளார்.
"சித்த மருத்துவத்தில் பிற மருத்துவ முறைகளை ஒப்பிடுகையில் சற்று மெதுவாகத்தான் தீர்வு கிடைக்கும் என்றாலும், நிரந்தர தீர்வு கிடைக்கும். இதில் தீராத நோய், தீரும் நோய் என்றெல்லாம் கிடையாது. அனைத்து நோய்களுக்கும் இங்கு தீர்வு உள்ளது. சில நோய்கள் முற்றிய நிலைக்கு சென்றுவிடும். உதாரணமாக முற்றிய நிலையில் உள்ள புற்றுநோய், சிறுநீரக கற்கள் போன்றவற்றை சித்த மருத்துவத்தில் குணப்படுத்த முடியாது.
முற்றிலும் குணமாக ஆரம்ப கட்டத்திலேயே எங்களிடம் வர வேண்டும். ஏனென்றால், சித்த மருத்துவத்தில் அறுவைசிகிச்சை செய்ய முடியாது. அதற்கு அலோபதி மருத்துவம்தான் சிறந்தது.