தொடர் மின்வெட்டு; எப்படி தொழிற்சாலைகள் இயங்க முடியும்?- டிடிவி தினகரன் கேள்வி
"அதிமுக அண்ணா ஆரம்பித்த கட்சி என முதல்வர் கூறுகிறார். அவர் பயத்தில் என்னென்னவோ உளறுகிறார். அண்ணா ஆரம்பித்த கட்சி திமுகதான். அதைக்கூட அவரால் ஒழுங்காக கூறமுடியவில்லை. அதிமுக சார்பாக போடியிட்ட வேட்பாளர்களுக்குத்தான் மக்கள் வாக்களித்தார்கள்.
மக்கள் இரட்டை இலைக்குத்தான் வாக்களித்தார்கள். இந்த தேர்தல் வந்ததற்கு காரணமே நாசகார சக்திதான். இந்த 4 மாதங்களில் அவர் என்ன சாதனை செய்துவிட்டார்? தொடர் மின்வெட்டு உள்ளது. இந்த நிலையில் எப்படி தொழிற்சாலைகளை இயங்க முடியும்? தாராபுரத்தில் வேட்பாளரை மேடையிலேயே அழவைத்துள்ளார்" என டிடிவி தினகரன் தவெக மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.