ராமநாதபுரத்தில் சோகம்: கஞ்சா கும்பலின் தாக்குதலால் விவசாயி தற்கொலை!
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே, கஞ்சா போதையில் இளைஞர்கள் தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தில் மன உளைச்சலுக்கு ஆளான விவசாயி உயிரிழந்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே கீழப்பெருங்கரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கார்த்தீஸ்வரனை (35) கடந்த 10 நாட்களுக்கு முன்பு தோட்டத்தில் வேலை செய்தபோது கஞ்சா போதையில் வந்த வாலிபர்கள் சிலர் தாக்கி, பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர் விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பார்த்திபனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இத்தற்கொலைக்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி கார்த்தீஸ்வரனின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டதால், சுமார் ஒரு