பயணிகள் ரயில்களின் வேகத்தையும், பயண வசதியையும் அதிகரிக்கும் வகையில், புதிய தலைமுறை என்ஜின்களை கொள்முதல் செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதன்படி, 6,000 குதிரைத்திறன் கொண்ட இரண்டு என்ஜின்கள் ஒரு ரயிலில் பொருத்தப்பட்டு, முன்புறம் மற்றும் பின்புறத்தில் இருந்து இயக்கப்படும் Push-Pull முறையை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு என்ஜின்களும் சேர்ந்து 12,000 குதிரைத் திறன் சக்தியை வழங்கும். இதன்மூலம் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதுடன், விரைவான Acceleration-ஐயும் பெற முடியும். இந்த ரயில்கள், மேம்படுத்தப்பட்ட வழித்தடங்களில், 160 கிலோமீட்டர் வேகம் வரை இயக்க வாய்ப்பு உள்ளது. முக்கியமாக, பயணிகளுக்கான விளக்குகள், மின்விசிறிகள், ஏசி உள்ளிட்ட வசதிகளுக்காக தற்போது இணைக்கப்படும் தனி Power Generator Car-ஐ, அகற்றவும் இந்த புதிய என்ஜின்கள் உதவும். இதனால் எரிபொருள்