சாதாரணமாக நடந்துச் செல்பவர்கள், நின்றுகொண்டிருப்பவர்கள், அப்படியே சரிந்து விழுந்து உயிரிழக்கிறார்கள். அது எதனால் ஏற்படுகிறது? அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்? உயிரை காப்பது எப்படி என பாரம்பரிய சித்த மருத்துவர் செந்தில்குமார் விளக்கமளித்துள்ளார்.
"திடீரென மயங்கி விழுவதற்கும், அப்படி விழுந்து சிலர் உயிர் இழப்பதற்கும் மன இறுக்கம்தான் காரணம். தேவையில்லாத பல விஷயங்களை நாம் மனதில் தொடர்ந்து நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், பெரும்பாலானவர்களுக்கு யோசித்து கவலைப்பட ஒன்றுமே இருக்காது. ஆனாலும், பலர் தேவையில்லாதவற்றை யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகின்றது.
சமூக ஊடகங்களில் வருபவற்றை பார்த்து, கேட்டு அதைப் பற்றியும் சிலர் யோசித்துக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் மன அழுத்தமும் இறுக்கமும் அதிகமாகின்றது. ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் இந்த பிரச்சனை உள்ளது. அனைவரும் அமைதியாக இருப்பது