திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள வல்லத்து நம்பிகுளத்தை சேர்ந்தவர் அந்தோணி . பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், இவர் அந்த கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், நகை திருட்டு தொடர்பான வழக்கு ஒன்றில் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி, நேற்று முன்தினம் நள்ளிரவு 2 போலீசார் அந்தோணியின் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் சீருடையிலும், மற்றொருவர் சாதாரண உடையிலும் இருந்ததாக தெரிகிறது. அவர்கள் அந்தோணியை விசாரணைக்காக தங்களுடன் வருமாறு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது போலீசார் அவரை கைகளாலும், பிரம்பாலும் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அந்தோணி சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து நெல்லை மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,