தமிழ்நாட்டில் Emerging Technologies எனப்படும் வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களுக்காக புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்பட உள்ளது. Periyar Institute of Emerging Technology என பெயரிடப்பட்டுள்ள இந்த நிறுவனத்தை முதற்கட்டமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக தொடங்க உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொள்ள உள்ளது. மேலும், இன்னும் 5 மாதங்களுக்குள் இந்த நிறுவனத்தின் கல்வி நடவடிக்கைகள் தொடங்கும் என உயர்கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், பயோடெக்னாலஜி, காலநிலை தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் உயர்நிலை, பயன்பாடு சார்ந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பட்டப்படிப்புகளை வழங்கும் அதிகாரமும் இந்த நிறுவனத்திற்கு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி