சென்னையின் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமையவிருந்த நிலையில், அந்தத் திட்டத்துக்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்ற அச்சம் ஒருபுறம்... தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் தேவை என்ற எதிர்பார்ப்பு மறுபுறம்.. என பரந்தூர் விவகாரம் தொடர்ந்து கவனம் பெற்றது. இந்த நிலையில், விவசாயத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் திட்டங்களுக்கு தனது ஆட்சியில் இடமில்லை என்ற நிலைப்பாட்டை முதலமைச்சர் விஜய் வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதே பகுதியில் தொழில் வளர்ச்சியை முன்னெடுக்க தமிழக அரசு தற்போது புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. பரந்தூர் அருகே உள்ள மதுரமங்கலத்தில் சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தி பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.