தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர் சத்யபாமா தீவிர பிரச்சாரம்! தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் பி. சத்யபாமா, இத்தேர்தலில் தவெக வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த பட்டா கோரிக்கைகள், உப்பார் அணை பாசன நீர் பிரச்சனை மற்றும் புதிய பேருந்து நிலைய திட்ட தாமதங்களுக்கு முந்தைய ஆட்சியாளர்களின் அலட்சியமே காரணம் எனக் குற்றம்சாட்டினார். கடந்த முறை பெற்ற 17,000 வாக்குகள் வித்தியாசத்தை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெறுவோம் என்றும் உறுதியளித்தார். இத்தொகுதியில் திமுகவின் சுகன்யாவை எதிர்த்து சத்யபாமா களமிறங்கியுள்ளதால் தேர்தல் களம் சூடாகியுள்ளது.