பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலை! விண்ணப்பிக்க லாஸ்ட் சான்ஸ்..மிஸ் பண்ணாதீங்க..
பேங்க் ஆஃப் பரோடா நிர்வாகி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது; இதில் யார் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக இருக்கிறது பேங்க் ஆஃப் பரோடா. இந்த வங்கியின் நிர்வாகி மற்றும் பகுப்பாய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்தியா முழுவதிலும் மொத்தம் 1100 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இந்த பணியிடங்கள், நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட இருக்கிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் இருப்பவர்கள், வரும் அக்டோபர் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர் : Wealth Executive
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 1000
கல்வித்தகுதிள் : இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும், 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
வயது தகுதி : 01.09.2026 அன்று 22 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில், மத்திய அரசின் விதிகளின் படி, எஸ்.சி.எஸ்டி, பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் உண்டு.
சம்பளம் : மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920
மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முக்கிய அறிவிப்பு! இலவச வகுப்புகள் முழு விவரம்
பணியின் பெயர் : Credit Analyst-C மற்றும் IC
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 100
கல்வித்தகுதி : இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்; மற்றும் Chartered Account முடித்திருக்க வேண்டும்; மேலும் ஒரு ஆண்டு பணி அனுபவம் அவசியம்.
வயது தகுதி : 01.09.2026 அன்று 21 வயது முதல் 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் : ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை
தேர்வு செய்யப்படும் முறை என்ன?
- இந்த பணியிடங்களுக்கு கணினி வழித்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- விண்ணப்பிக்கும் முறை: மேற்கூறிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, https://bankofbaroda.bank.in/career/current-opportunities/wealth-management-services-department-bob-hrm-rec-advt-2026-17 எனும் இணையதளத்தில் இருக்கும் ஆன்லைன் விண்ணப்பம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.10.2026
- விண்ணப்பக்கட்டணம் : பொது பிரிவினருக்கு ரூ.850. இருப்பினும், எஸ்.சி.எஸ்.டி, பிரிவினருக்கு ரூ.175 ஆகும்.
மேலும் படிக்க | BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: ரூ.50,000 சம்பளம், யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?