SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

செங்கல்பட்டு வேலைவாய்ப்பு : முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Chengalpattu Government Job : செங்கல்பட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதுகலைப்பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written By Karthikeyan Sekar
Published: Oct 14, 2026, 12:23 PM IST | Updated: Oct 14, 2026, 12:29 PM IST
Join

Chengalpattu Government Job : தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் உள்ளாட்சி அமைப்பு நிறுவனங்கள் மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினை முழுமையாக்கும் திட்டப் பணியின் இரண்டாம் கட்டச் செயல்பாடுகள் 15 மாவட்டங்களில் விரிவுபடுத்தப்படவுள்ளன. இதற்காக செங்கல்பட்டு மாவட்டத்திற்குத் தற்காலிகப் பணியிடமாக ஒரு மாநில வள பயிற்றுநர் தேர்வு செய்யப்படவுள்ளார். இத்தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் வீரப்பன் தெரிவித்துள்ளார்.  

ஊதியம் மற்றும் படிகள் விவரம்

மாநில வள பயிற்றுநர்களுக்கான ஊதியம் மற்றும் படிகள் அதிகபட்சமாக மொத்தம் ரூ. 25,000/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 10 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1,000 மதிப்பதியம். கண்காணிப்பு, மேற்பார்வை மற்றும் ஆவணப்படுத்துதல் பணிகளுக்காக அதிகபட்சம் 15 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.750. 15 நாட்களுக்கு நாளொன்றுக்கு ரூ.250/- வீதம் பயணப்படி.  

கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு

1. கல்வித்தகுதி: சமூக கல்வி, சமூக அறிவியல், ஊரக வளர்ச்சி, பெண்கள் கல்வி அல்லது சமூக பணியிடங்களில் ஏதேனும் ஒரு முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  

2. வயது வரம்பு: 01.06.2026 அன்று விண்ணப்பதாரர் 30 முதல் 45 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.  

3. முன்னுரிமை: இப்பணியிடத்திற்குப் பெண்கள் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.  

பணி அனுபவம் மற்றும் பிற திறன்கள்

பணி அனுபவம்: சுயஉதவிக்குழு, கூட்டமைப்பில் பணியாற்றிய அனுபவம், பயிற்றுநர், சமூக பணி நிறுவனத்தில் பணியாற்றியது அல்லது அரசின் திட்டத்தில் ஊரகப் பணிகளில் 10 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  

மொழி மற்றும் இதர திறன்கள்: தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும் பேசவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் தகவல் பரிமாற்றத்தில் தகுந்த திறன், ஒருங்கிணைப்பு ஆற்றல், மனித உறவுகளைப் பேணுவதில் ஆற்றல் மற்றும் கைபேசி செயலிகளை (Mobile Apps) கையாளும் திறன் பெற்றிருக்க வேண்டும்.  

கணினி அறிவு: கணினியில் Word, Excel மற்றும் இணையத்தைப் பயன்படுத்துவதில் போதுமான அறிவு பெற்றிருப்பது அவசியமாகும்.  

தேர்வு முறை மற்றும் பணிக் காலம்

பணிக் காலம்: இப்பணியிடங்கள் இத்திட்டத்திற்கான 24 மாத காலவரையறை கொண்ட தற்காலிகப் பணியிடங்கள் ஆகும்.  

தேர்வு முறை: தகுதியான நபர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் முறையின் வாயிலாகத் தேர்வு செய்யப்படுவர்.  

விண்ணப்பிக்கும் முறை மற்றும் முகவரி

இப்பதவிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் விண்ணப்பத்துடன் தகுதி குறித்த சுய சான்றிட்ட நகல்களை இணைத்து, தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வரும் 21.10.2026-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.  

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், 2-வது தளம், A பிளாக், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், செங்கல்பட்டு மாவட்டம். கூடுதல் விவரங்களை அறிய விரும்புவோர் https://tncdw.org என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.  

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES