• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /கோவை மாவட்ட வேலைவாய்ப்பு : 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு : 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்புக்கு 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written ByKarthikeyan Sekar
Published: Sep 07, 2026, 14:36 IST|Updated: Sep 07, 2026, 14:42 IST
joinshare
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு : 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை விண்ணப்பிக்கலாம்
Image Credit: Coimbatore jobs

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
ராகு, கேது பெயர்ச்சி: டிசம்பர் 5 முதல் 5 ராசிகளின் தலைவிதி மாறும், பொற்காலம் பிறக்கும்

ராகு, கேது பெயர்ச்சி: டிசம்பர் 5 முதல் 5 ராசிகளின் தலைவிதி மாறும், பொற்காலம் பிறக்கும்

2

திருப்பரங்குன்றம் விவகாரம் : மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு!

3

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

4

புதுச்சேரியில் அச்சுறுத்தும் டெங்கு: சிறப்பு வாா்டு அமைக்கப்படுவதாக முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

5

TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! கணினி பட்டதாரிகளுக்கு இந்த சான்றிதழ் தேவையில்லை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் இயங்கும் கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society - National Health Mission), காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாநகராட்சி அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, துணை இயக்குநர் அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள், கல்வித்தகுதி மற்றும் மாதச் சம்பளம்:

District Programme Manager (1 பணியிடம்): BAMS மருத்துவப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொது சுகாதார அமைப்புகளில் பணியாற்றிய அனுபவமும், கணினி அறிவும் பெற்றிருக்க வேண்டும். வயது 59-க்குள் இருக்க வேண்டும். மாதச் சம்பளம்: ரூ.42,000.

Occupational Therapist - DEIC (1 பணியிடம்): பணி சார்ந்த பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் (Bachelors / Master's Degree in Occupational Therapy) முடித்திருக்க வேண்டும். வயது 40-க்குள் இருக்க வேண்டும். மாதச் சம்பளம்: ரூ.23,000.

RMNCH+A Counsellor - பெண்கள் மட்டும் (2 பணியிடங்கள்): MSW, பொது நிர்வாகம், உளவியல், சமூகவியல், ஹோம் சயின்ஸ் அல்லது மருத்துவமனை நிர்வாகத்தில் பட்டம்/முதுகலைப் பட்டம் மற்றும் 1-2 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை. வயது 40-க்குள் இருக்க வேண்டும். மாதச் சம்பளம்: ரூ.21,000.

Lab Technician Gr-III (3 பணியிடங்கள்): அரசு மருத்துவக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் CMLT அல்லது DMLT முடித்திருக்க வேண்டும். வயது 35-க்குள் இருக்க வேண்டும். மாதச் சம்பளம்: ரூ.17,000.

Assistant cum Data Entry Operator / DEO (1 பணியிடம்): ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும் (1 ஆண்டு அனுபவம் விரும்பத்தக்கது). வயது 35-க்குள் இருக்க வேண்டும். மாதச் சம்பளம்: ரூ.17,500.

ULB-UHN / ANM (75 பணியிடங்கள்): மேல்நிலைக் கல்வி (+2) தேர்ச்சியுடன் DPH அங்கீகரித்த 2 ஆண்டுகளுக்கான ANM சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது 35-க்குள் இருக்க வேண்டும். மாதச் சம்பளம்: ரூ.17,500.

Cleaner (2 பணியிடங்கள்): 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது 35-க்குள் இருக்க வேண்டும். மாதச் சம்பளம்: ரூ.11,000.

முக்கிய நிபந்தனைகள்:

இப்பணியிடங்கள் அனைத்தும் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் முற்றிலும் தற்காலிகமானவை மற்றும் 11 மாத ஒப்பந்த அடிப்படையிலானவை ஆகும். எந்தவொரு காரணத்திற்காகவும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. பணியில் சேரும்போது இதற்கான ஒப்புதல் கடிதம் (Undertaking letter) வழங்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி நாள்:

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், கோயம்புத்தூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://coimbatore.nic.in என்ற முகவரியில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சுயசான்றொப்பமிட்ட கல்விச் சான்றிதழ்கள், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்று (குடும்ப அட்டை / ஆதார் அட்டை நகல்) ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நேரில் அல்லது விரைவுத் தபால் (Speed Post) மூலம் வரும் 15.09.2026 அன்று மாலை 05:00 மணிக்குள் பின்வரும் முகவரிக்கு வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்:

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

உறுப்பினர் செயலர் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், 219, ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர் – 641 018.

குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்களும், முழுமையற்ற சான்றிதழ்களுடன் வரும் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu