SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

மாதம் ரூ.63000 சம்பளம்.. 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் சூப்பர் வேலை.. முழு விவரம்

TN Post Office Recruitment: இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு குறித்த மெகா அறிவிப்பு வெளியாகி உள்ளது. அஞ்சல் அலுவலகத்தில் கார் ஓட்டுர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு 10ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்ப்பட்டுள்ளது.

Written By Umabarkavi K
Published: Oct 31, 2026, 10:08 AM IST | Updated: Oct 31, 2026, 10:30 AM IST
Join

TN Post Office Recruitment:  அஞ்சல் துறை, மத்திய அரசின் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. பல ஆயிரக்கணக்கான உழியர்கள் அஞ்சல் துறையில் பணியாற்றி வருகின்றனர். அஞ்சல் துறையில் பணியாற்றும் ஊழிர்களுக்கு  கைநிறைய சம்பளம், சலுகைகள் என மத்திய அரசு விதிகளின்படி, அனைத்து சம்பள படிகளும் கிடைக்கும். அஞ்சல்துறையில் காலிப் பணியிடங்கள் உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், அஞ்சல் துறை வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அஞ்சல் துறை வேலைவாய்ப்பு

இந்திய அஞ்சல் துறையில் staff car driver (கார் ஓட்டுநர்) பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தமிழகத்தில்  கார் ஓட்டுக்கு பணிக்கு மொத்தம் 24 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் பொதுப்பிரிவில் 24 பணியிடங்களும், பட்டியல் பிரிவில் 3 பணியிடங்களும், ஓபிசி பிரிவில் 7 பணியிடங்களுக்கு, ews பிரிவில் ஒரு இடங்களும், முன்னாள் ராணுவ வீரர் பிரிவில் 2 பணியிடங்களும் நிரப்பப்படுகிறது.  அதன்படி, சென்னையில் மொத்தம் 15 பணியிடங்களும், மதுரை அஞ்சல் அலுவலகத்தில் 2 இடங்களும், சேலம் மேற்கு அலுவலகத்தில் 3 பணியிடங்களும், கோவையில் 3 பணியிடங்களும் என மொத்தம் 24 பணியிடங்களும் நிரப்பப்படுகிறது.

மேலும் படிக்க: ஆவின் பாலகம் நடத்த சூப்பர் வாய்ப்பு.. அரசின் மெகா அறிவிப்பு.. லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்!

கல்வித்தகுதி, வயது விவரம்

அஞ்சல் அலுவலகத்தில் கார் ஓட்டுர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக மோட்டார் வாகனம், கனரக மோட்டார் வாகனத்திற்கான ஓட்டுநர் உரிமத்தை பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3  ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும்.  இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.  

இதில் அரசு விதிகள்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. முன்னாள் ராணுவத்தினருக்கு 5 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினர்ல் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 6 ஆணடுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை

அஞ்சல் அலுவலகத்தில் கார் ஓட்டுர் பணிக்கு எழுத்துத் தேர்வு, பொது அறிவு, கணக்கு, பகுத்தறிவு, போக்குவரத்து விதிகள் குறித்த தேர்வு மூலம் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

மேலும் படிக்க: போட்டித் தேர்வர்களுக்கான அப்டேட்! தமிழ்நாடு அரசின் 5 ஆண்டு வயது தளர்வு யாருக்கு கிடையாது? Explained

சம்பளம் விவரம்

அஞ்சல் அலுவலகத்தில் கார் ஓட்டுர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

அஞ்சல் துறையில் கார் ஓட்டுநர் பணிக்கு indiapost.gov.in/tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி

The Senior Manager, Mail Motor Service, No.37, Greams Road, Chennai – 600 006 என்ற முகவரிக்கு நவம்பர் 30ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்ப படிவத்தை தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். நேரில் அல்லது வேறு அஞ்சல் முறைகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவத்துடன் அனுப்ப வேண்டிய சான்றிதழ்கள்

வயது சான்று, கல்வித்தகுதி சான்று, சாதிச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் சான்றிதழ், பணி அனுபவம் சான்றிதழ் ஆகியவற்றை விண்ணப்ப படிவத்துடன் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஈரோடு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? சம்பளம் எவ்வளவு?
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES