SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

மின்வாரியத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1.25 லட்சம் வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு

Tamil Nadu government jobs : மின்வாரியத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு. ரூ.40,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை ஊதியம். இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

Written By Karthikeyan Sekar
Published: Oct 29, 2026, 03:23 PM IST | Updated: Oct 29, 2026, 03:34 PM IST
Join

Tamil Nadu government jobs : தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் நிலவும் கடுமையான பணியாளர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில், பல்வேறு அலுவலகங்களில் ஓய்வு பெற்ற அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஊதிய விகிதங்களை முறைப்படுத்தி, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அதிகாரப்பூர்வ செயல்முறை உத்தரவை பிறப்பித்துள்ளார்.  

மேலும் படிக்க | தமிழ்நாடு அரசின் மின் மோட்டார் மானியம் ரூ.3.60 லட்சம் பெற யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

உத்தரவின் முக்கிய அம்சங்கள்:

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் செயலகக் கிளை வெளியிட்டுள்ள செயல்முறை உத்தரவின் படி, பல்வேறு அலுவலகங்களில் பணிபுரிய ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில முக்கியமான பணிகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதற்காக, ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளை சிறப்பு பணி அலுவலர், ஆலோசகர், சிறப்பு அலுவலர், ஆகிய பொறுப்புகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கென நிலையான ஒப்பந்த ஊதிய விகிதங்களும் அதிகாரப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.  

இந்த உடனடி முடிவுக்குக் காரணம் என்ன?

மின்வாரியத்தில் உதவிப் பொறியாளர், உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர், மேற்பார்வைப் பொறியாளர் உள்ளிட்ட முக்கியத் தொழில்நுட்ப மற்றும் நிர்வாகப் பணியிடங்கள் பல ஆண்டுகளாகக் காலியாக இருந்து வருகின்றன.

டிஎன்பிஎஸ்சி அல்லது வாரியத்தின் போட்டித் தேர்வுகள் மூலம் புதிய பணியாளர்களைத் தேர்வு செய்து பணியமர்த்த குறைந்தது 2 முதல் 3 ஆண்டுகள் வரை கால அவகாசம் தேவைப்படும். அதுவரை நிர்வாகப் பணிகள், புதிய மின் இணைப்பு வழங்கும் நடைமுறைகள், வருடாந்திர பராமரிப்புப் பணிகள், நிதித் தணிக்கை மற்றும் ஒப்பந்தப் பணிகளுக்கான பில் செட்டில்மெண்ட் ஆகியவை தாமதமாவதைத் தவிர்க்கவே, அனுபவம் வாய்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் உடனடியாக ஒப்பந்த அடிப்படையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தற்போதைய ஊழியர்களின் பணிச்சுமை குறையுமா?

தற்போது மின்வாரியத்தில் பணிபுரியும் ஒரு உதவிப் பொறியாளர் இரண்டு அல்லது மூன்று பிரிவுகளையும், செயற்பொறியாளர் நான்கு முதல் ஐந்து உட்கோட்டங்களையும் கூடுதல் பொறுப்பாகக் கவனித்து வருகின்றனர். ஓய்வு பெற்ற அதிகாரிகளின் இந்த மறுநியமனம் மூலம் நிலுவையில் உள்ள கோப்புகள், அரசு தணிக்கை அறிக்கைகள், கணக்கு வழக்குகள், டெண்டர் நடைமுறைகள் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான நிர்வாகப் பணிகள் விரைவுபடுத்தப்படும்.

இதனால் தற்போது பணியில் உள்ள களப் பொறியாளர்களுக்கு நேரடி களப்பணிகளில் கவனம் செலுத்த முழு நேரம் கிடைக்கும். பழுது நீக்கம், சீரான மின் விநியோகம், அவசர கால மின்தடை சீரமைப்பு போன்ற களப் பணிகள் தடையின்றி வேகமாக நடைபெறும்.

அரசுக்கும் பொதுமக்களுக்கும் கிடைக்கும் நன்மைகள்:

அரசுக்கான பயன்: புதிதாக ஒருவரை முழுநேரப் பணியாளராக நியமிக்கும் போது பென்ஷன், பி.எஃப், அகவிலைப்படி, வருடாந்திர ஊதிய உயர்வு போன்ற கூடுதல் நிதிச்சுமைகள் ஏற்படும். ஆனால் ஒப்பந்த முறையில் ரூ.40,000 முதல் ரூ.1,25,000 வரை நிர்ணயிக்கப்பட்ட நிலையான தொகை மற்றும் சேவை வரிகள் மட்டுமே வழங்கப்படுவதால் அரசுக்குக் கூடுதல் நிதிச்சுமை குறைகிறது.

பொதுமக்களுக்கான பயன்: அலுவலக ரீதியான பணிகள் விரைவாக முடிவடைவதால், புதிய மின் இணைப்பு கோருதல், மின் கட்டண மீட்டர்கள் மாற்றம், பெயர் மாற்றம் மற்றும் மின்னழுத்தக் குறைபாடுகள் போன்ற பொதுமக்களின் அத்தியாவசிய கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு கிடைக்கும்.

இளைஞர்களின் நிரந்தர வேலைவாய்ப்பைப் பாதிக்குமா?

ஓய்வு பெற்ற அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியமர்த்துவதால், மின்வாரியத் தேர்வுகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகுமா என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.

இருப்பினும், இது நிர்வாகப் பணிகளைத் தற்காலிகமாகச் சீரமைக்க எடுக்கப்பட்ட ஒரு இடைக்கால நடவடிக்கை மட்டுமே என்று தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே மின்வாரியத்தில் உள்ள 8,000 கள உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்புவதற்கான அரசாணைகள் நடைமுறையில் உள்ளதால், இளைஞர்களுக்கான நிரந்தர வேலைவாய்ப்புகளும் தொடர்ச்சியாக நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES