SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சென்ட்ரல் டூ அரக்கோணம், திருவள்ளூர்! மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. முழு விவரம்

Chennai Emu Train Service Changes: சென்னையில் மின்சார ரயில் சேவை அட்டவணையில் தெற்க ரயில்வே மாற்றம் செய்துள்ளது. புதிய அட்டவணை நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே, பயணிகள் இதற்கு ஏற்ப தங்கள் பணிகளை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Written By Umabarkavi K
Published: Oct 31, 2026, 11:22 AM IST | Updated: Oct 31, 2026, 11:37 AM IST
Join

Chennai Emu Train Service Changes: சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக மின்சார ரயில் சேவை. மின்சார ரயில்களில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் பல்வேறு வழித்தடத்தில் மின்சார ரயில் சேவை இயக்கப்படுகிறது.  சென்னையில் கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு, சென்ட்ரல் - அரக்கோணம் - திருத்திணி, கடற்கரை - திருவள்ளூர்/அரக்கோணம்/கும்மிடிப்பூண்டி,  கடற்கரை - வேளச்சேரி - பரங்கிமலை வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில், மின்சார ரயில் சேவை குறித்து தெற்கு ரயில்வே முக்கியமான  அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மின்சார ரயில் சேவைக்கான புதிய அட்டவணை

தெற்கு ரயில்வே சென்னை மின்சார ரயில் சேவைக்கான புதிய அட்டவணையை வெளியிடடுள்ளது. இந்த புதிய அட்டவணைப்படி, நவம்பர் 1ஆம் தேதி (ஞாயிற்றுகிழமை) மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பின்படி, ரயில் எண் (43230) திருவள்ளூர் - மூர் மார்க்கெட் - திருவள்ளூர் இடையே புதிய ரயில் சேவை இயக்கப்படுகிறது. நண்பகல் 12.25 மணிக்கு திருவள்ளூரில் இருந்து புறப்பட்டு, மதியம் 1.05 மணிக்கு மூர் மார்க்கெட் ரயில் நிலையத்திற்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஆவின் பாலகம் நடத்த சூப்பர் வாய்ப்பு.. அரசின் மெகா அறிவிப்பு.. லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்!

ரயில் சேவைகள் நீட்டிப்பு

மேலும், தெற்கு ரயில்வே சில ரயில்களின் சேவையை நீட்டித்துள்ளது. அதன்படி,

மூர் மார்க்கெட் - பட்டாபிராம் ரயில் சேவை, நவம்பர் 1ஆம் தேதி முதல் திருவள்ளூர் வரை நீட்டிக்கப்படுகிறது. நாள்தோறும் காலை 7.10 மணிக்கு மூர் மார்க்கெட்டில் இருந்து புறப்பட்டு காலை 8.30 மணிக்கு திருவள்ளுர் சென்றடையும். இந்த ரயிலின் எண் 43209 ஆக மாற்றப்பட்டுள்ளது.

பட்டாபிராம் - மூர் மார்க்கெட் ரயில், இனி திருவள்ளூரில் இருந்து புறப்படும்.  இந்த ரயில் எண் 43220 என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் காலை 8.45 மணிக்கு திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, காலை 10.20 மணிக்கு மூர் மார்க்கெட் வளாகத்தை சென்றடையும்.

மூர் மார்க்கெட் - திருவள்ளூர் ரயில் சேவை கடம்பத்தூர் வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த ரயில் எண் 43903 என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் மதியம் 2.00 மணிக்கு மூர் மார்க்கெட்டில் இருந்து புறட்பட்டு, பிற்பகல் 3.25 மணிக்கு கடம்பத்தூர் ரயில் நிலையம் சென்றடைகிறது.  

திருவள்ளூர் - மூர் மார்க்கெட் மின்சார ரயில், இனி கடம்பத்தூரில் இருந்து புறப்படும். நாள்தோறும் இந்த ரயில் பிற்பகல் 3.35 மணிக்கு கடம்பத்தூரில் இருந்து புறப்பட்டு, மாலை 5.05 மணிக்க மூர் மார்க்கெட் ரயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரயில் எண் 43904 என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்க: சென்னை அம்மா உணவக ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி!! விரைவில் ஊதிய உயர்வு
 

ரயில் சேவையில் மாற்றம்

இரவு 7.30 மணிக்கு மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து புறப்படும் அரக்கோணம் விரைவு ரயில் அனைத்து ரயில நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 7.45 மணிக்கு மூர் மார்க்கெட் வளாகம்  - அரக்கோணம் மின்சார ரயிலாக மாற்றப்படுகிறது.  இந்த ரயில் நாளை முதல் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஒருபுறம் சென்ட்ரல் மார்க்கத்தில் பல புதிய மாற்றங்கள் இருந்தாலும், சென்னை கடற்கரை - வேளச்சேரி - பரங்கிமலை MRTS வழித்தடத்தில் இயங்கும் ரயில்களின் அட்டவணையில் தற்போது எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை; அவை வழக்கமான நேரத்திலேயே இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரக்கோணத்தில் இருந்து #காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாகச் சென்னை கடற்கரைக்கு வரும் விரைவு மின்சார ரயிலுக்குப் (Fast Local) பயணிகளின் வசதிக்காகக் கூடுதல் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ரயில் எண் 40904 அரக்கோணம் - காஞ்சிபுரம் - செங்கல்பட்டு - தாம்பரம் - கடற்கரை செமி பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இனி கூடுவாஞ்சேரியில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் பாஸ்ட் விரை இரவு 70.30 மணிக்கு புறப்படும் ரயில், இனி கூடுவாஞ்சேரியில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் படிக்க: டிசம்பரில் திருப்பதி செல்ல பிளான் இருக்கா? டிசம்பர் 9 முதல் 27 வரை சென்னை-திருப்பதி ரயில்கள் ரத்து!!
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES