SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

15,000 சிறப்பு பேருந்துகள்.. எங்கெல்லாம்? தீபவாளி, ஆயுதபூஜைக்கு ஊருக்கு செல்பர்களுக்கு குட் நியூஸ்!

TNSTC Diwali Ayudha Puja Special Buses: ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜைக்கு 14,963 பேருந்துகளும் மற்றும் தீபாவளிக்கு 15,659 பேருந்துகளும் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

Written By Umabarkavi K
Published: Oct 14, 2026, 09:23 AM IST | Updated: Oct 14, 2026, 09:30 AM IST
Join

TNSTC Diwali Ayudha Puja Special Buses: ஆயுத பூஜையை முன்னிட்டு, வரும் அக்டோபர் 15 முதல்  அக்டோபர் 18 வரையில், சென்னையிலிருந்து இயக்கக் கூடிய 8,764 பேருந்துகளுடன், கூடுதலாக 6,199 சிறப்புப் பேருந்துகள் என நான்கு நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 14,963 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 5 முதல்  நவம்பர் 7ஆம் தேதி வரையில் சென்னையிலிருந்து இயக்கக் கூடிய 6,573 பேருந்துகளுடன் கூடுதலாக 9,086 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 15,659 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுத பூஜை முடிந்த பின்னர். வரும் அக்டோபர் 20 மற்றும் அக்டோபர் 21ஆம் தேதிகளில் பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு இயக்கக் கூடிய 4,382 பேருந்துகளுடன், கூடுதலாக 4,809 சிறப்புப் பேருந்துகள் என இரண்டு நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 9,191 பேருந்துகளும் மற்றும் தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், வரும் நவம்பர் 9ஆம் தேதி மற்றும் நவம்பர் 10ஆம் தேதிகளில் பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு இயக்கக் கூடிய 4,382 பேருந்துகளுடன் கூடுதலாக 6.815 சிறப்புப் பேருந்துகள் என இயக்கப்படுகின்றன. இரண்டு நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 11:197 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள்?

வழித்தட மாற்றம் கார் மற்றும் இதர வாகனங்கள்

கார் மற்றும் இதர வாகனங்களின் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்வோர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து பழைய மாமல்லபுரம் சாலை (OMR), கேளம்பாக்கம், திருப்போரூர். செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை(Vandalur Outer Ring Road), கேளம்பாக்கம், திருப்போரூர். செங்கல்பட்டு சாலை வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முன்பதிவு வசதி

முன்பதிவு செய்துகொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான TNSTC Mobile appமற்றும் www.Instc.in போன்ற இணைய தளங்கள் மூலமாகவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும். குறைகள் மற்றும் புகார்கள் தெரிவிப்பதற்கும் முறையே. 94450 14438 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண். 149 என்ற எண்களை 24x7 மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 (Toll Free Number) மற்றும் 93848 08333 என்ற வாட்சாப் (whatsapp) எண்ணில் புகார் அளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதுமட்டுமின்றி, பயணிகளின் நலன் கருதி கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை (Control Room) அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக பல்வேறு இடங்களில் தகவல் மையங்கள் (May I Help You) அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநகர் இணைப்புப் பேருந்துகள்

பொதுமக்களின் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மறைமலைநகர் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு போதுமான இணைப்பு பேருந்துகள் கட்டணமில்லாமல் இயக்கப்படும். மேலும், கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து போதுமான இணைப்புப் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு 24 மணி நேரமும் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES