• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Chennai

Chennai

திருவான்மியூர் சாலையில் திடீர் பள்ளம் ஏன்? மெட்ரோ நிர்வாகம் விளக்கம்
5

திருவான்மியூர் சாலையில் திடீர் பள்ளம் ஏன்? மெட்ரோ நிர்வாகம் விளக்கம்

Chennai Latest News: சென்னை திருவான்மியூரில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது குறித்து மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இன்று சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டு, கார் கவிழ்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Oct 8, 2026, 05:35 PM
விரிவடையும் சென்னை பெருநகர்... தயாராகிறது மாஸ்டர் பிளான்
02:27

விரிவடையும் சென்னை பெருநகர்... தயாராகிறது மாஸ்டர் பிளான்

சென்னையின் வளர்ச்சியை அடுத்த 20 ஆண்டுகளுக்கு திட்டமிடும் வகையில், பெருநகரப் பகுதிக்கான புதிய விரிவான மாஸ்டர் பிளான் தயாராகிறது. 5 ஆயிரத்து 904 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிவடையும் சென்னை பெருநகரப் பகுதியில், புதிய கடற்கரைப் பகுதிகள், பொழுதுபோக்கு மையங்கள், அகலமான இணைப்புச் சாலைகள் என பல்வேறு புதிய திட்டங்கள் இடம்பெற உள்ளன. இதுகுறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

Oct 7, 2026, 05:57 PM
3 நாளாக ரத்தப்போக்கு.. 6 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. சென்னையில் ஷாக்

3 நாளாக ரத்தப்போக்கு.. 6 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. சென்னையில் ஷாக்

Chennai Child Harassment: சென்னை திருவொற்றியூரில் 6 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Oct 7, 2026, 03:04 PM
சென்னையில் 3 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம்.. எங்கெல்லாம் தெரியுமா? அதிரடி அறிவிப்பு
5

சென்னையில் 3 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம்.. எங்கெல்லாம் தெரியுமா? அதிரடி அறிவிப்பு

Chennai Traffic Diversion TTK Road: சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் நாளை (அக்டோபர் 8) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Oct 7, 2026, 11:01 AM
டிசம்பரில் திருப்பதி போறீங்களா? ரயில் சேவை 27 நாட்களுக்கு ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

டிசம்பரில் திருப்பதி போறீங்களா? ரயில் சேவை 27 நாட்களுக்கு ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

Chennai Tirupati Train: சென்னை - திருப்பதி ரயில் சேவை டிசம்பர் 1 முதல் டிசம்பர் 27ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, பயணிகள் இதற்கு ஏற்ப தங்கள் பயணங்களை பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

Oct 7, 2026, 10:11 AM
MRTS வழித்தடத்தில் மெகா மாற்றம்! இனி Peak Hours ல் No waiting!
02:30

MRTS வழித்தடத்தில் மெகா மாற்றம்! இனி Peak Hours ல் No waiting!

தினமும் பீக் ஹவர்ஸில் கடற்கரை டூ கோட்டை ரயிலுக்காகக் காத்துக் கிடக்கும் MRTS பயணிகளுக்கு ஒரு சூப்பர் குட் நியூஸ்! இனி 20 நிமிஷம் நிக்கத் தேவையில்ல, வெறும் 5 நிமிஷத்துக்கு ஒரு ரயில் வரப்போகுது!

Oct 7, 2026, 11:29 AM
ஓட்டுநர் இல்லா Metro ரயில்... முதற்கட்டமாக 15 ரயில்கள்... CMRL கொடுத்த Hint!
02:09

ஓட்டுநர் இல்லா Metro ரயில்... முதற்கட்டமாக 15 ரயில்கள்... CMRL கொடுத்த Hint!

சென்னை மெட்ரோவில் ஓட்டுநர் இல்லாமல் ரயில்கள் இயக்கப்படும் திட்டம் வேகம் பிடித்துள்ளது. முதற்கட்டமாக 15 ரயில்கள், 10 நிமிட இடைவெளியில் இயக்கப்பட உள்ளன. ஒரு ரயிலில் 900 பேர் வரை பயணிக்க முடியும். 2027ஆம் ஆண்டு மத்தியில் ஓட்டுநர் இல்லா இயக்கத்தை தொடங்க சென்னை மெட்ரோ திட்டமிட்டுள்ளது.

Oct 7, 2026, 11:27 AM
சென்னை ஏர்போர்ட் விரிவாக்கம் பலன் தருமா? அண்டை மாநிலங்களுடன் போட்டி எப்படி?
03:14

சென்னை ஏர்போர்ட் விரிவாக்கம் பலன் தருமா? அண்டை மாநிலங்களுடன் போட்டி எப்படி?

பரந்தூரில் அமையவிருந்த புதிய பசுமை வழி விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாகத் தமிழக அரசு எடுத்த முடிவும், அதற்கு மாற்றாக தற்போதுள்ள சென்னை விமான நிலையத்தை விரிவாக்கும் நடவடிக்கைகளும் தமிழகத்தின் தொழில்துறை மற்றும் விமானப் போக்குவரத்து எதிர்காலம் குறித்த தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. 2006 மற்றும் 2011-ல் ஸ்ரீபெரும்புதூர் திட்டம் பரிசீலிக்கப்பட்டு கைவிடப்பட்ட சூழலில், விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் நோக்கில் தற்போது பரந்தூர் திட்டமும் கைவிடப்பட்டுள்ளது. ஆனால், சென்னை விமான நிலையம் ஏற்கனவே தன் முழுப் பயன்பாட்டு அளவை எட்டிவிட்ட நிலையில், அண்டை நகரங்களான பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தின் அதிவேக உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு இணையாக தமிழகம் போட்டியிட முடியுமா என்ற கவலை எழுந்துள்ளது. பரந்தூரில் சுமார் 5,700 ஏக்கர் பரப்பளவில், 4 கட்டங்களாகத் திட்டமிடப்பட்டு, ஆண்டுக்கு 10 கோடி பயணிகளைக் கையாளும் சர்வதேசத் தரத்திலான புதிய விமான நிலையத்திற்குப் பதிலாக, தற்போதுள்ள விமான நிலையத்தை ஒட்டிய மணப்பாக்கம், கொளப்பாக்கம் மற்றும் கவுல் பஜார் பகுதிகளில் 217 ஏக்கர் நிலத்தை மட்டும் கையகப்படுத்தி விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை ஒருங்கிணைக்க சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரி நியமிக்கப்பட்டு, தாம்பரம் அல்லது பல்லாவரத்தில் பிரத்யேக அலுவலகம் அமைக்கப்பட உள்ளது. மேலும், இந்த விரிவாக்கத் திட்டத்தின் கீழ் விமான நிலையத்தின் வடமேற்குப் பகுதியில் புதிய முனையம் 5 (Terminal 5), புதிய அணுகுசாலை மற்றும் மேம்பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த மாற்று விரிவாக்கத் திட்டம் பொருளாதார மற்றும் சமூக ரீதியாகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. பரந்தூரில் 5,700 ஏக்கரில் முழுமையான விமான நிலையத்தை அமைக்க சுமார் ரூ. 29,143 கோடியே மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், சென்னையில் வெறும் 217 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தவே தோராயமாக ரூ. 24,000 கோடி செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், பரந்தூரில் 1,005 குடும்பங்கள் மட்டுமே பாதிக்கப்படும் சூழல் இருந்த நிலையில், நகர்ப்புற விரிவாக்கத்தால் மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகளில் சுமார் 5,800 குடும்பங்கள் இடம்பெயரும் சூழல் உருவாகியுள்ளது.

Oct 6, 2026, 08:00 PM
சென்னை To பெங்களூரு 3 மணி நேரம்..! கனவு தள்ளிப்போச்சு
03:33

சென்னை To பெங்களூரு 3 மணி நேரம்..! கனவு தள்ளிப்போச்சு

ஸ்ரீபெரும்புதூர் முதல் கர்நாடகாவின் ஓஸ்கோடே வரை புதிய பசுமைவழி எக்ஸ்பிரஸ்வே அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

Oct 7, 2026, 11:31 AM
சென்னை டூ விழுப்புரம்.. ரயில் சேவையில் அதிரடி மாற்றம்.. டைமிங் நோட் பண்ணுங்க

சென்னை டூ விழுப்புரம்.. ரயில் சேவையில் அதிரடி மாற்றம்.. டைமிங் நோட் பண்ணுங்க

Southern Railway: திருச்சி கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், விழுப்புரம் வழியாக இயக்கப்படும் முக்கிய எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே, பயணிகள் இதற்கு ஏற்ப தங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

Oct 6, 2026, 01:09 PM
டெல்லியில் பெண் பத்திரிகையாளர் துன்புறுத்தல்..Chennai Press Club கண்டனம்!

டெல்லியில் பெண் பத்திரிகையாளர் துன்புறுத்தல்..Chennai Press Club கண்டனம்!

பெண் பத்திரிகையாளர் துன்புறுத்தப்பட்டதை சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டிக்கிறது, உடனடி நடவடிக்கை எடுக்கக் கோருகிறது-இது குறித்து அவர்கள் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளனர்.

Oct 5, 2026, 06:41 PM
அண்ணாசாலைக்கு புது லுக்! நடைபாதை ஆக்கிரமிப்புக்கு செக்
02:13

அண்ணாசாலைக்கு புது லுக்! நடைபாதை ஆக்கிரமிப்புக்கு செக்

சென்னை அண்ணாசாலையில் உள்ள நடைபாதைகளை பளிச்சென மாற்றும் வகையில், அதனை பராமரிக்கும் பொறுப்பு சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக சுமார் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. நடைபாத ஆக்கிரமிப்புகள் முற்றிலும் அகற்றப்பட்டு, பாதசாரிகளுக்கான வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Oct 5, 2026, 05:44 PM
சென்னையில் நாளை (அக்.6) 5 மணி நேரம் பவர்கட்.. எந்தெந்த ஏரியாவில்? முழு லிஸ்ட்
5

சென்னையில் நாளை (அக்.6) 5 மணி நேரம் பவர்கட்.. எந்தெந்த ஏரியாவில்? முழு லிஸ்ட்

Chennai Power Cut October 6th: தலைநகர் சென்னையில் நாளை (அக்டோபர் 6) பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருவேற்காடு, மேடவாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

Oct 5, 2026, 03:21 PM
சென்னை: போதையில் பைக் ரேஸ்.. ஒரே நாளில் 1047 வழக்குகள்.. புகார் எண் அறிவிப்பு

சென்னை: போதையில் பைக் ரேஸ்.. ஒரே நாளில் 1047 வழக்குகள்.. புகார் எண் அறிவிப்பு

Chennai Bike Race Arrest: சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 1407 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

Oct 5, 2026, 12:30 PM
தாம்பரத்தில் அசுத்தமான குடிநீர்... தோல் வியாதியே வருது... தீர்வு என்ன?
02:21

தாம்பரத்தில் அசுத்தமான குடிநீர்... தோல் வியாதியே வருது... தீர்வு என்ன?

சிட்லப்பாக்கம் 44-வது வார்டுக்குட்பட்ட பவானி தெரு, பரதன் தெரு, பாபு தெரு, ராஜராஜேஸ்வரி தெரு உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளுக்கு வாரம் ஒருமுறை பாலாறு கூட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக குடிநீர் கருப்பு நிறத்திலும், கடுமையான துர்நாற்றத்துடனும் வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனைப் பயன்படுத்துவதால் வாந்தி, வயிற்றுவலி, குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் மற்றும் தோல் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். கழிவுநீர் கலந்ததாக கூறப்படும் தண்ணீரில் குளிப்பதால் ஏற்பட்ட தோல் பாதிப்பை வயதான பெண் ஒருவர் தனது கைகளை காண்பித்து வேதனையுடன் விளக்குகிறார். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சரண்யாவிடம் கேட்டபோது, நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திலிருந்து சோதனை ஓட்டமாக தண்ணீர் விநியோகிக்கப்படுவதாகவும், நீண்ட நாட்களாக குழாய்கள் பயன்படுத்தப்படாததால் துர்நாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார். பிரச்சினையை சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் சீராகும் என்றும் கூறினார். இந்நிலையில், விரைந்து நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்சனையை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Oct 4, 2026, 05:58 PM
அண்ணாசாலை உயர்மட்ட பாலம்... பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி - வந்தாச்சு புது அப்டேட்
02:28

அண்ணாசாலை உயர்மட்ட பாலம்... பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி - வந்தாச்சு புது அப்டேட்

சென்னையின் இதயப்பகுதியான அண்ணாசாலையில், நாள்தோறும் அதிகரித்து வரும் வாகன நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் அமைக்கப்பட்டு வரும் உயர்மட்ட சாலைப் பாலத்தின் பணிகள் மீண்டும் தீவிரமடைய உள்ளன. தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.2 கிலோமீட்டர் நீளத்திற்கு நான்கு வழிச்சாலையாக இந்த உயர்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது. இதில் சுமார் 2.4 கிலோமீட்டர் தூரம், செயல்பாட்டில் உள்ள மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைக்கு மேலாக செல்கிறது. குறிப்பாக, தேனாம்பேட்டை மற்றும் நந்தனம் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு மேலே செல்லும் 460 மீட்டர் பகுதி, இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இப்பகுதியில் கட்டுமானப் பணிகள் சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மீண்டும் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. வடிவமைப்பில் ஏற்பட்டிருந்த சிறிய மாறுபாடுகளை ஆய்வு செய்ய ஜப்பானிய ஆலோசகர் நியமிக்கப்பட்டார். ஆய்வுக்குப் பிறகு, பெரிய அளவில் குறைபாடுகள் இல்லை என தெரிவிக்கப்பட்டதுடன், மெட்ரோ நிலையங்களுக்கு மேலே 300 மீட்டர் தூரத்திற்கு 15 மீட்டர் இடைவெளியில் சிறப்பு போர்டல் சட்டங்கள் (portal frames) அமைக்க பரிந்துரைக்கப்பட்டது. இந்த போர்டல் சட்டங்களின் மீது பாலத்தின் தளப்பகுதி பொருத்தப்பட உள்ளது. மெட்ரோ சுரங்கப்பாதை சாலையிலிருந்து 14 முதல் 15 மீட்டர் ஆழத்தில் இருப்பதால், பாலத்தின் அடித்தளத்திற்காக 7 மீட்டர் ஆழம் வரை மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Oct 4, 2026, 06:00 PM
மொத்தமாக மாறுகிறது வடசென்னை... வருகிறது பிரம்மாண்ட திட்டம்
02:15

மொத்தமாக மாறுகிறது வடசென்னை... வருகிறது பிரம்மாண்ட திட்டம்

சென்னையின் வடப்பகுதியில் அமைந்துள்ள எண்ணூர் அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றங்களை சந்திக்கப் போகும் பகுதிகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. துறைமுகம், தொழிற்சாலைகள், சரக்கு போக்குவரத்து என பல்வேறு தொழில் சார்ந்த கட்டமைப்புகளைக் கொண்டுள்ள எண்ணூர் பகுதியில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக எண்ணூர் அருகே சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் கனரக பொறியியல் தொழில் மையத்தை அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகமான டிட்கோ (TIDCO) திட்டமிட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் கனரக இயந்திரங்கள், தொழில்துறை உபகரணங்கள், பொறியியல் சார்ந்த உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஒரே இடத்தில் தேவையான கட்டமைப்புகளை உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக துறைமுகத்தின் அருகிலேயே இருப்பது இந்தப் பகுதிக்கு கூடுதல் முக்கியத்துவத்தை அளிக்கிறது. கனரக இயந்திரங்கள் மற்றும் தொழில்துறை உபகரணங்களின் இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் சரக்கு போக்குவரத்துக்கும் இது உதவக்கூடும். மேலும் புதிய தொழிற்சாலைகள் உருவாகும்போது நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் எண்ணூர் மட்டுமின்றி மணலி, மீஞ்சூர், பொன்னேரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உருவாகலாம். தொழில் முதலீடுகள், போக்குவரத்து கட்டமைப்பு, துறைமுக செயல்பாடுகள் என அனைத்தும் ஒருங்கிணைந்து வளரும்போது வடசென்னையின் பொருளாதார வரைபடத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படலாம். அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் எண்ணூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் எந்த அளவுக்கு உருமாறப் போகின்றன என்பதுதான் தற்போது கவனிக்க வேண்டிய அம்சமாக உள்ளது.

Oct 4, 2026, 05:37 PM
சென்னையில் நாளை (அக்.5) மின்தடை.. எந்தெந்த பகுதிகளில்? மின்வாரியம் அறிவிப்பு

சென்னையில் நாளை (அக்.5) மின்தடை.. எந்தெந்த பகுதிகளில்? மின்வாரியம் அறிவிப்பு

Chennai Power Cut October 5th: சென்னையில் நாளை (அக்டோபர் 5) பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. எந்தெந் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Oct 4, 2026, 04:00 PM
வாகன ஓட்டிகளே அலர்ட்.. சென்னையில் முக்கிய வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம்!

வாகன ஓட்டிகளே அலர்ட்.. சென்னையில் முக்கிய வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம்!

Chennai Traffic Changes: சென்னை காசிமேடு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்ட்டுள்ளது. எனவே, அவ்வழியாக செல்பவர்கள் திட்டமிட்டு பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, எந்தெந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Oct 4, 2026, 10:47 AM
சென்னை Airport-க்கு Mega Expansion! T5 வரப்போகுது... பணிகள் ஆரம்பம்!
02:09

சென்னை Airport-க்கு Mega Expansion! T5 வரப்போகுது... பணிகள் ஆரம்பம்!

சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு தமிழக அரசு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய T5 முனையத்திற்கான பணிகள் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளன.

Oct 2, 2026, 10:20 PM
சென்னைக்கு அடித்தது ஜாக்பாட்! Swiss நிறுவனத்தின் புது Tech Centre!
02:03

சென்னைக்கு அடித்தது ஜாக்பாட்! Swiss நிறுவனத்தின் புது Tech Centre!

சென்னையில் உலகளாவிய லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் புதிய தொழில்நுட்ப மையம் தொடங்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் லாஜிஸ்டிக்ஸ் சேவைகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், இந்த மையம் உலகளாவிய பொறியியல் திறன்களை மேம்படுத்தும் முக்கிய தளமாக உருவாக உள்ளது. இதன்மூலம் எவ்வளவு வேலை வாய்ப்பு உருவாகிறது.

Oct 2, 2026, 06:38 PM
ரயில் தண்டவாளத்திற்கு கீழ் சுரங்கம்... சாதித்த CMRL - இது எப்படி சாத்தியம்?
03:08

ரயில் தண்டவாளத்திற்கு கீழ் சுரங்கம்... சாதித்த CMRL - இது எப்படி சாத்தியம்?

மாதவரம், வில்லிவாக்கம், அண்ணா நகர், கோயம்பேடு, ஆலந்தூர் வழியாக சோழிங்கநல்லூரை இணைக்கும் இந்த 5-வது வழித்தடம், வடசென்னையையும் தென்சென்னையின் தகவல் தொழில்நுட்ப வழித்தடத்தையும் இணைக்கும் மிக முக்கியமான பகுதியாகும். இதில் வில்லிவாக்கம் புறநகர் ரயில் நிலையம் என்பது சென்னையின் மிக பரபரப்பான சந்திப்புகளில் ஒன்று. தினசரி புறநகர் ரயில்கள் மற்றும் தொலைதூர விரைவு ரயில்கள் இடைவிடாமல் இயக்கப்படும் 5 தண்டவாளங்களுக்கு அடியில் சுரங்கம் தோண்டுவது பொறியியல் ரீதியாக மிகப்பெரிய சவாலாக அமைந்தது. ரயில் தண்டவாளங்களின் அதிர்வுகள் மற்றும் நிலத்தடி மண்ணின் தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அதிநவீன தரைத்தள பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன் மூலம், மேலே செல்லும் ரயில் போக்குவரத்துக்கோ அல்லது சாலைப் போக்குவரத்துக்கோ எந்தவித பாதிப்பும் இடையூறும் இன்றி இப்பணி முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.

Oct 2, 2026, 06:10 PM
  • Previous
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • Next

Trending

  • News
  • Photos
  • Videos
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

2

அக்டோபர் 31ல் குரு - கேது சேர்க்கை.. இந்த 4 ராசிகளுக்கு பணம் கொட்டும்!

3

8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

4

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

5

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.