SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explained: சென்னையில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவது ஏன்? இந்தாண்டு தப்பிக்குமா?

Chennai Flood Explained: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னையில் வெள்ள அபாயம் குறித்த பதற்றத்தை சென்னை வாசிகளிடையே ஏற்படுத்தியுள்ளது. 2015, 2023 போன்ற சென்னையில் பெருவெள்ளம் ஏற்படுமா என்ற கேள்விகளும், விவாதங்களும் எழுந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் ஏன் அடிக்கடி வெள்ளம் ஏற்படுகிறது? இந்தாண்டு தமிழக அரசு தயாராக இருக்கிறதா என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Oct 22, 2026, 05:33 PM IST | Updated: Oct 22, 2026, 05:54 PM IST
Join

Chennai Flood Explained: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களாகவே, சென்னை உட்பட வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. அக்டோபர் 17ஆம் தேதி இரவு பெய்த கனமழையால் பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. சென்னையில் நாளுக்கு நாள் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், அடுத்தடுத்த கனமழைகளும் வெள்ள அபாயம் குறித்த கவலைகளும் மீண்டும் எழுந்துள்ளது.

சென்னை பெருவெள்ளம்

நவம்பர், டிசம்பர் மாதம் வந்தலோ சென்னை வாசிகள் பீதியில் தான் இருப்பார்கள். கனமழையால் சென்னையில் வெள்ளம் ஏற்படுமா என்ற கேள்வியிலேயே சென்னை வாசிகள் இருப்பார்கள். ஏனென்றால், 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தை சென்னை வாசிகள் மட்டுமில்லாமல், தமிழகத்தில் உள்ள யாருமே மறக்க மாட்டார்கள்.

2015 மட்டுமில்லாமல், 2005, 2015, 2023 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட பெருவெள்ளங்கள் ஒட்டுமொத்த நகரத்தையே சீர்குலைத்தது. இதனால், ஒவ்வொரு முறையும் கனமழை  பெய்யும்போது, வெள்ளம் குறித்த விவாதங்கள் எழுந்து வருகிறது.  இந்த நிலையில், வெள்ளம் குறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ராகுல் தேப்நாத் புதிய ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வு இந்த நேரத்தில் பெரிதும் முக்கியத்துவம் பெறுவது.

மேலும் படிக்க: பறவைக் காய்ச்சல்: வண்டலூர் பூங்கா இன்று முதல் மூடல்... வெளியான முக்கிய அறிவிப்பு!

நீர்நிலைகள் 22 சதவீதம் குறைந்துள்ளது

கடந்த 24 ஆண்டுகளில் சென்னையில் ஏற்பட்ட நிலப் பயன்பாட்டு மாற்றங்களை புவியியல் தகவல் அமைப்பு, செயற்கைக்கோள் படங்கள், மழைப்பொழிவின் அளவு, கடந்த கால வெள்ள நிகழ்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இநத் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்படி, 2000 முதல் 2024ஆம் ஆண்டில் கட்டடங்கள் நிறைந்த நிலப்பரப்பு 7.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே காலக்கட்டத்தில் நீர்நிலைகளின் பரப்பளவு 22.54 சதவீதம் குறைந்துள்ளன. மேலும், பசுமைப் பரப்பு 26.14 சதவீதம் சுருங்கியுள்ளது. கட்டடங்கள் நிறைந்த நிலப்பரப்பு 2000ஆம் ஆண்டில் 321.87 சதுர கி.மீட்டராக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் 346.33 சதுர கிலோ மீட்டராக அதிகரித்துள்து. 24 ஆண்டுகளில் கட்டடங்கள் நிறைந்த நிலப்பரப்பு 24.46 சதுர கி.மீட்டர் அதிகரித்துள்ளது.

நீர்நிலைகளின் பரப்பளவு 2000ஆம் ஆண்டில்  33.10 கி.மீட்டராக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் 25.64 சது கி.மீட்டராக குறைந்துள்ளது.  மேலும், இதே காலக்கட்டத்தில் தாவரங்கள் மற்றும் பசுமைப் பரப்பு 45.94 சது கிலோ மீட்டரில் இருந்து 33.93 சதுர கிலோ மீட்டராக குறைந்துள்ளது. 26.14 சதவீத பசுமைப் பரப்பு சுருங்கியுள்ளது. இந்த தரவுகள் பார்க்கும்போது, நகரத்தில் கட்டடங்கள் அதிகரிப்பது குடியிருப்புகள்  எண்ணிக்கை மட்டுமே கிடையாது. நிலத்தின் இயல்பும் முற்றிலும் மாறுகிறது. நீரைச் சேமிக்க கூடிய நீர்நிலைகள், மழைநீரை உறிஞ்சக்கூடிய மண், தாவரங்கள் நிறைந்த பகுதிகளில் சாலைகளும், கட்டடங்களும் அமைக்கப்படும் போது, மழைநீர் நிலத்திற்குள் செல்வது குறைந்து, ஆங்காங்கே தேங்கி, வெள்ளத்தை உருவாக்குகிறது.

மேலும் படிக்க: சென்ட்ரல் டூ அரக்கோணம்.. அக்.23 முதல் ஏசி மின்சார ரயில் சேவை.. எங்கெல்லாம் நிற்கும்?

சென்னையில் காணாமல் போன 20 ஏரிகள்

சென்னை வளர்ச்சிக் கல்வி நிறுவனத்தன் முன்னாள் இயக்குநர் ஜனகராஜன் கூறுகையில், வெள்ளம் ஏற்படுவதற்கு நகரமயமாக்கல் ஒரு முக்கியமான காரணமாகும். ஒரு ஏரி நீரைச் சேமிக்கும் இடம் மட்டும் இல்லை. அதை சுற்றியுள்ள நிலப்பகுதியில் இருந்து வரும் மழைநீரையும் ஏற்றுக் கொள்ளும். ஏரிகளில் கட்டடங்கள் கட்டும்போது, மழைநீர் தேங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதனை வெளியேற்றுவதற்கும் சிக்கல் ஏற்படுகிறது. லயோலா கல்லூரி ஏரியாக இருந்தது. மாம்பலம் ஏரி, வியாசர்பாடி ஏரி, ஓட்டேரி ஏரி, வில்லிவாக்கம் ஏரி என பல பகுதிகளில் நீர்நிலைகளாக இருந்தன. சென்னையில் குறைந்தது 20 ஏரிகள் காணாமல் போய்விட்டது  என்று கூறினார்.

மக்கள் தொகை அதிகரிப்பு

நீர்நிலைகள் குறைவதற்கும், கட்டடங்கள் அதிகரிப்பதற்கும் பின்னால் ஒரு முக்கியமான காரணம் உள்ளது. அது மக்கள் தொகை அதிகரிப்பு.  நகரமயமாக்கலில் மக்கள் தொகை அதிகரிப்பு வெள்ளம் ஏற்படுவதாக முக்கிய காரணமாக உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். நிலம் எங்கு கிடைத்தாலும், மக்கள் அதனை ஆக்கிரமித்து கொள்கின்றனர் என்றும், நகரமயமாக்கலின் விளைவாக ஏழை, எளிய மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.  நகரத்தில் வேலைவாய்ப்புகள் பெருக பெருக மக்கள் தொகையும் பெருகிறது. இதனால், நிலத்துக்கான தேவையும் அதிகரித்து, நகரமும் விரிவடைகிறது. ஆனால், அந்த விரிவாக்கம் நீர்நிலைகளை பாதிக்கும்போது, மழைக்காலத்தில் மக்கள் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதிக வெள்ள அபாயம் கொண்ட பகுதிகள்

வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் இடங்கள்

நகரின் வெள்ள அபாயம் அதிகம் உள்ள பகுதிகளில் வேளச்சேரி, பல்லாவரம், குரோம்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள தெற்குப் பகுதிகள், மேற்கு சென்னையின் சில பகுதிகள், கோயம்பேடு, வில்லிவாக்கம் மற்றும் தொண்டையார்பேட்டையைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆகியவை அடங்கும்.

சென்னை சராசரி மழைப்பொழிவு நிலவரம்

இப்படியாக ஆண்டுதோறும் சென்னையில் மழைப்பொழிவு இருக்கும் நிலையில், நகரத்தில் மழைநீர் செல்வதற்கான வழிகளை பாதுகாப்பதும், மழைநீர் வடிகால்களை மேம்படுத்துவதும், நிலத்தை பயன்படுத்தும்போது வெள்ள அபாயத்தை கணக்கில் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தயார் நிலையில் சென்னை இருக்கிறதா?

மழைக்கால முன்னெச்சரிக்கை மற்றும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பெருநகர சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சிகள் சார்பில் பணிகள் மேற்ககொள்ளப்பட்டுள்ளன.  சென்னை மாநகராட்சில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக 78,161 மரங்களின் கிளைகள் வெட்டிச் சீரமைக்கப்பட்டுள்ளன.   நகரின் பல்வேறு பகுதிகளில் 1,670 கி.மீ தூரத்திற்கு மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. வெள்ளநீர் தடையின்றி ஓட ஏதுவாக 81 கி.மீ நீளமுள்ள கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன.

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய 32 பகுதிகள் அபாயகரமான இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.   பல்வேறு வடிகால்கள் உள்பட மொத்தம் 897 கி.மீ தூரத்திற்கு வடிகால் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.   இதில் 344 கி.மீ தூரம் மழைநீர் வடிகால்களாகும். ஏரிகளையும் நீர்நிலைகளையும் இணைக்கும் 45 கி.மீ நீளமுள்ள நீர் வழித்தடங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. அவசரகாலத் தேவைகளுக்காக 15 பாதுகாப்பு முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  

தேங்கியிருக்கும் மழைநீரை உடனடியாக வெளியேற்ற நான்கு வெவ்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 1,326 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க 311 படகுகள் அவசரகாலப் பயன்பாட்டிற்காகத் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்படும் பொதுமக்களைத் தங்க வைக்க ஏதுவாக 220 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனுக்குடன் உணவு வழங்க 110 மையச் சமையல் கூடங்கள் (Central kitchens) செயல்பாட்டிற்குத் தயாராகவுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க: Virtual Warriors இல்லை..Virtual Abusers! தன்னை ஆபாசமாக சித்தரிப்பதாக மேயர் பிரியா புகார்..
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES